Saturday, February 18, 2012

அவுஸ்திரேலியாவின் சிட்னி மைதானத்தில் பறந்த புலிக் கொடி!






அவுஸ்திரேலியாவின் சிட்னி மைதானத்தில் பறந்த புலிக் கொடி!
18 02 2012
அவுஸ்திரேலியாவின் சிட்னியில் இன்று நடைபெற்ற, அவுஸ்திரேலிய -இலங்கை அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டியின் போது புலிக்கொடி பறக்க விடப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சிட்னி மைதானத்தில் இன்று மாலை அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக இலங்கை அணி துடுப்பெடுத்தாடிக் கொண்டிருந்த போது பார்வையாளர் ஒருவர் புலிக்கொடியை ஏந்தி உயர்த்தியபடி இருந்தார்.

ஆதரவாளர்கள் மத்தியில் புலிக்கொடி பறப்பதை அவதானித்த அவுஸ்திரேலிய காவல்துறையினர் உடனடியாகச் சென்று அந்தக் கொடியைப் பறித்தெடுத்தனர்.

 

பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் புலிக்கொடியுடன் ஒருவர் மைதானத்தில் நுழைந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புலிக் கொடி மைதானத்திற்குள் கொண்டு வரப்பட்டமை தொடர்பாக குறித்த நபரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டது.
நன்றி .தமிழ் இணையங்கள்



‎:!!: சிட்னி மைதானத்தில் தமிழீழத் தேசியக் கொடியை ஏற்றிய இளைஞனின் கருத்து :!!:

ிட்னியில் அவுஸ்திரேலியா, சிறிலங்கா இரு அணிகளுக்கும் துடுப்பாட்டப் போட்டி நடைபெற்றுக்கொண்டிருந்தது. அங்கு நாங்கள் தமிழர்கள் நாங்கள் தமிழீழத்தைத் சேர்ந்தவர்கள் என்பதை எந்த இடத்திலும், எந்த நேரத்திலும் துணிவுடனும் பெறுமையோடும் துணிந்து போராடுவோம் என்று சொல்வதற்காக எங்களுடைய தமிழீழத் தேசியக் கொடியை பறக்கவிட்டேன்.


பல ஊடகங்களில் எமது கொடியை கவால்துறையினர் பறித்ததாக வெளியிடப்பட்டடுள்ளது. ஆனால் அங்கு அவ்வாறு நடைபெறவில்லை பல ஆயிரக்கணக்கான சிங்களவர்களின் மத்தியில் தேசியக்கொடியை பறக்கவிட்டேன். கொடியை பார்த்த சிங்களவர்கள் காவல்துறையினருக்கு அறிவித்தனர்.

பின்பு காவல்துறை என்னிடம் கூறியது துடுப்பாட்டத்தை பார்வையிடுவதென்றால் கொடியை தம்மிடம் தரலாம் இல்லை என்றால் தம்முடன் பேசுமாறு கேட்டுகொண்டனர். பின்பு எமது தமிழீழ அழிப்பை பற்றி காவல்துறையிடம் கூறினேன் அதற்கு காவல்துறை எங்களை பாராட்டியது. ஆனால் பல ஆயிரக்கணக்கான சிங்களவர்கள் மத்தியில் நாங்கள் தேசியக்கொடியை பறக்கவிடுவதால் பிரச்சனைகள் வரலாம் என்று கூறினார்.

நாங்கள் இங்கு பிரச்சணைகளை ஏற்படுத்த வரவில்லை எங்களது போராட்டத்தை எடுத்து சொல்வதற்காகவே இங்கு வந்தோம் எடுத்தும் காட்டிவிட்டுடோம். ஆனால் எங்களுடைய கொடியை நாங்கள் யாரிடமும் கொடுப்பதற்கு தயார் இல்லை நாங்களாகவே வெளியேருகின்றோம் என்று காவல்துறையினருக்கு தெரிவித்தோம்.

எமது நாட்டில் 60 வருடங்களுக்கு மேல் சிறிலங்கா இராணுவம் தமிழின அழிப்பை செய்து கொண்டு வருகின்றான். ஆனால் உலக நாடுகளை ஏமாற்றி தமிழர்களுக்கு ஒரு பிரச்சினையும் இல்லை என்று சொல்கின்றான். துடுப்பாட்ட போட்டியில் தமிழர்களும் சிங்களவர்களும் ஒன்றுதான் என்று சுட்டிக்காட்டுகின்றான். ஆனால் நான் சிறிலங்கன் இல்லை நான் தமிழன்.

பல இலட்சக் காணக்கான தமிழ் மக்களை கொன்று இனஅழிப்பு செய்த சிறிலங்காவுக்கு நாங்கள் ஒரு போதும் ஆதரவு கொடுக்க மாட்டோம்.


தமிழீழத்தில் எமது தேசியக் கொடியை பறக்கவிடவில்லை என்றாலும் புலத்தில் தமிழர்கள் வாழ்கின்ற எல்லா இடங்களிலும் பறக்கும், அதே போல ஒரு நாள் ஐநாவிலும் தமிழீழத் தேசியக் கொடி பறக்கத்தான் போகிறது.

நான் எல்லா இளைஞர்களுக்கும் கூறவிரும்புகின்றேன். சிறிலங்கா அரசாங்கம் எந்த சதித் திட்டங்களை கொண்டுவந்தாலும் எந்த விதத்திலும் எதிர்த்தாலும் நாங்கள் தமிழர்கள் என்று சொல்வதற்கோ எமது தேசியக் கொடியை பறக்க விடுவதற்கோ ஒரு போதும் தயங்கக் கூடாது.

No comments:

Post a Comment