Sunday, February 19, 2012

மனித உரிமை மீறல் அதிகரிப்பு - ஜெனீவாவில் பேச வேண்டியது கட்டாயம்

சர்வதேச நன்மதிப்பை வெல்ல சிறீலங்கா மீது சுயாதீன விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என சர்வதேச நெருக்கடிக்குழு வலியுறுத்தியுள்ளது.

சிறீலங்கா இராணுவம் தனது நற்பெயரை தக்க வைத்துக் கொள்ள வேண்டுமாயின் அதன் மீது சுமத்தப்பட்டுள்ள மனித உரிமை மீறல், யுத்தக் குற்றச்சாட்டுக்கள் குறித்து சுயாதீன விசாரணை நடத்தப்பட வேண்டியது காலத்தின் தேவை என சர்வதேச நெருக்கடிக்குழுவின் சிறீலங்காப் பணிப்பாளர் அலன் கீனன் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை கவுன்சிஸ் கூட்டத்தொடரில் சிறீலங்கா தொடர்பில் அமெரிக்கா எடுத்துள்ள நிலைப்பாட்டை அவர் வரவேற்றுள்ளார்.

இலங்கையில் மனித உரிமை மீறல் சம்பவங்கள் அதிகம் இடம்பெற்ற வருவதாகக் கூறியுள்ள அவர், சிலாபத்தில் மீனவர் படுகொலை, நீதிமன்றவளவில் கைதி கடத்தல் போன்ற சம்பவங்களைச் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனால் ஐநா மனித உரிமை கூட்டத்தொடரில் சிறீலங்கா தொடர்பில் கவனம் செலுத்த வேண்டியது மிகவும் அவசியமானதென வலியுறுத்தியுள்ளார்.

No comments:

Post a Comment