Saturday, February 18, 2012

கொழும்பில் ஜனாதிபதி மாளிகை மீது தாக்குதல் நடத்தவிருந்த வான் புலிகள் !


கொழும்பில் உள்ள இலங்கை ஜனாதிபதியின் மாளிகை மீது வான் புலிகள் தாக்குதலை நடத்தவிருப்பதாக, அமெரிக்க தூதரகம் தமது தலைமைக்கு செய்தி அனுப்பியுள்ளது. 2006 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 10 ஆம் திகதி கொழும்பில் உள்ள அமெரிக்க தூதுவரைச் சந்தித்த கோட்டபாய ராஜபக்ஷ இந்த அச்சத்தை வெளியிட்டுள்ளார் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. புலிகளின் மாவீரர் தினம் நெருங்கிக் கொண்டு இருந்த நிலையில் அமெரிக்க தூதுவருக்கும், பாதுகாப்புச் செயலாளருக்கும் இடையிலான சந்திப்பு இடம்பெற்று இருந்தது.

மாவீரர் தினத்துக்கு முன்னதாக புலிகள் விமானத் தாக்குதல் ஒன்றை நடத்த முயல்கின்றனர், இதற்காக புலிகளின் விமானம் ஒன்று நவம்பர் 06 ஆம் திகதி வானத்தில் பறக்க விடப்பட்டு ஒத்திகை பார்க்கப்பட்டு உள்ளது, புலிகளின் பலத்தை வெளிப்படுத்துவதற்காக இத்தாக்குதல் நடத்தப்பட உள்ளது. புலிகளின் பலத்தை காட்டுகின்ற வகையில் மாவீரர் தினத்துக்கு முன்னதாக ஏதேனும் ஒரு வெற்றியை அடைய வேண்டும் என்று பிரபாகரன் கங்கணம் கட்டிக் கொண்டு இருக்கின்றார், என்று கோட்டபாய அமெரிக்கத் தூதுவரிடம் தெரிவித்துள்ளார்.

இரத்மலானை விமான தளம், கட்டுநாயக்க விமான நிலையம், அனுராதபுர விமான தளம், மற்ரும் ஜனாதிபதியின் கொழும்பு வாசஸ்தலம் ஆகியன இம்முறை புலிகளின் விமானத் தாக்குதலுக்கு இலக்காக இருக்கின்றமைக்கு சாத்தியக் கூறுகள் உள்ளன என்று கோட்டா விபரித்து இருக்கின்றார். இலங்கையின் கிபிர் விமானங்களால் இத்தாக்குதலை முறியடிப்பது கடினமான காரியம் எனவும், இரவில் புலிகள் விமானம் தாக்குதல் நடத்துகின்ற பட்சத்தில் அதை எதிர்கொள்கின்ற வலிமை கைவசம் உள்ள கிபிர் விமானங்களிடம் கிடையாது என்றும் சொல்லி இருக்கின்றார் கோட்டபாய

.

No comments:

Post a Comment