Tuesday, February 07, 2012

பாரிசிலிருந்து ஜெனிவா ஐ.நா. நோக்கி விசேட அதி வேகத் தொடருந்து

சிங்கள இனவாத அரசால் கொடூரமான இன அழிப்புக்குள்ளான தமிழீழ மக்களுக்கான நீதியைப் பெற்றுக்கொடுக்கும் பாரிய வரலாற்றுக் கடமையைச் சுமந்துள்ள புலம்பெயர் தமிழர்கள் எதிர்வரும் மார்ச் 05 ஆம் திகதி ஜெனிவாவின் முருகதாசன் திடலில் ஒன்று திரள்கின்றார்கள்.

தமிழீழ மக்களின் விடிவுக்காகவும், தமிழீழ மண்ணின் விடுதலைக்காகவும் முன்னெடுக்கும் இந்த உச்சக்கட்ட ஜனநாயகப் போரில் புலம்பெயர் தமிழர்கள் அனைவரது பங்கேற்பும் மிக மிக அவசியானது என உணரப்பட்டுள்ளது. அதன் ஒரு பாதை பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவால் திறக்கப்பட்டுள்ளது.

பிரான்ஸ் தொடருந்து நிறுவனத்தின் அதிவேக ரி.ஜி.வி. தொடருந்து ஒன்று இதற்காகவே ஒழுங்கு செய்யப்பட்டு, பாரிஸ் கார் து லியோனில் இருந்து ஜெனிவா புறப்படுகின்றது.

05 மார்ச் காலை 8.11 மணிக்கு பாரிசிலிருந்து புறப்படும் இந்தத் தொடருந்து, போராட்டம் முடிந்த பின்னர், ஜெனிவாவிலிருந்து மாலை புறப்பட்டு, இரவு 9.57 மணிக்கு பாரிஸ் நகரை வந்தடையும் என, பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு அறிவித்துள்ளது.


1

No comments:

Post a Comment