Wednesday, February 29, 2012

இலங்கைக்கு இந்தியா ஆதரவளிக்கும் என இலங்கை அமைச்சர் ஒருவர் கூறியுள்ளமை அதிர்ச்சியளிக்கிறது - வைகோ

ஜெனீவாவில் நடைபெறும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரில் இலங்கைக்கு இந்தியா ஆதரவளிக்கும் என  இலங்கை அமைச்சர் ஒருவர் கூறியுள்ளமை அதிர்ச்சியளிக்கிறது என மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர்  வைகோ தெரிவித்துள்ளார்.
இவ்விடயத்தில் இலங்கைக்கு ஆதரவளிக்க வேண்டாம் எனவும் இந்திய பிரதமர் மன் மோகன் சிங்கை அவர் வலியுறுத்தியுள்ளார்.
'ஜெனீவாவில் தற்போது நடைபெறும் ஐ.நா. மனித உரிமைகள் கூட்டத்தொடரின் முக்கியமான வாக்கெடுப்பில்  இலங்கைக்கு இந்தியா
ஆதரவளிக்கும் என இலங்கையின் பிரதான பேச்சாளரான மஹிந்த சமரசிங்க கூறியுள்ளமை அதிர்ச்சியளிக்கிறது' என இந்திய பிரதமர் மன்மோகன் சிங்குக்கு எழுதிய கடிதத்தில் வைகோ தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் இந்தியாவின் ஆதரவு குறித்து இலங்கைக்கான இந்திய தூதுவர் உறுதியளித்துள்ளதாக செய்தி வெளியானதாக வைகோ கூறியுள்ளார்.
'அது உண்மையானால் அது இலங்கைத் தமிழர்களுக்கு எதிரான இந்திய அரசாங்கத்தின் மன்னிக்க முடியாத துரோகமாகும். ஜெனீவாவில் நடைபெறும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரில் இனவாத இலங்கை அரசாங்கத்துக்கு இந்தியா ஆதரவளிக்க கூடாது என நான் தங்களை கோருகிறேன்' எனவும் வைகோ அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment