Wednesday, February 29, 2012

இலங்கை விடயத்தில் இந்தியா மனிதநேயமற்று செயற்படுகிறது - பழ.நெடுமாறன்

ஐநா மனித உரிமைக் குழு கூட்டத்தில் இலங்கைக்கு இந்தியா ஆதரவு அளித்தால் அது கண்டனத்துக்குரியது என பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில்,

ஐ.நா. மனித உரிமை குழுக் கூட்டத்தில் போரின் போது இலங்கை இராணுவம் மனித உரிமை மீறலில் ஈடுபட்டது தொடர்பாக அமெரிக்கா தீர்மானம் கொண்டு வருகிறது.

இதை எதிர்த்தும், இலங்கைக்கு ஆதரவாகவும் இந்தியா வாக்களிக்கும் என வெளிப்படையாக இந்தியா தங்களிடம் தெரிவித்து விட்டதாகவும் இந்தியாவின் ஆதரவு என்பது நூற்றுக்கு நூறு சதவீதம் உறுதியானது எனவும் இலங்கையின் மனித உரிமைக்கான சிறப்பு தூதர் மஹிகிந்த சமரசிங்க தெரிவித்தார்.

இதை கண்டு உலகம் எங்கும் உள்ள தமிழர்களும் மனித உரிமை ஆர்வலர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.
மனித நேயமற்ற முறையில் இந்திய அரசு நடந்து கொள்வதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.

இவ்வாறு நெடுமாறன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment