Saturday, February 18, 2012

சீனாவுக்கு எதிராக இந்தியா படைகளை பலப்படுத்துகிறது: அமெரிக்கா

ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வருவதையடுத்து இந்தியா தனது படைகளை பலப்படுத்துவதில் கவனம் செலுத்தி வருகிறது என அமெரிக்க புலனாய்வுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த 2 வாரத்தில் அமெரிக்கா இவ்வாறு தெரிவிப்பது இது 2-வது முறையாகும்.
எல்லைப் பகுதியில் ராணுவ சூழ்நிலை அமைதியாக உள்ளது. எனினும் சீனாவின் நடவடிக்கைகள் குறித்து கவலை அடைந்துள்ள இந்தியா தனது திறனை வலுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என பாதுகாப்பு புலனாய்வு அமைப்பின் இயக்குநர் ரொனால்டு பர்கீஸ் தெரிவித்தார்.
6 ஆயிரம் கிலோமீட்டர் பறந்துசென்று தாக்கக்கூடிய ஏவுகணையை வடிவமைத்து வருவதாக இந்தியா தெரிவித்துள்ளது. இந்த ஏவுகணை பல்வேறு போர்ஆயுதங்களை சுமந்துசெல்லக்கூடிய திறன்வாய்ந்தது. இந்தியா அதை பரிசோதிக்க தீவிரமாக உள்ளது என செனட் குழுவினரிடம் ரொனால்டு பர்கீஸ் தகவல் அளித்துள்ளார்.

No comments:

Post a Comment