Monday, February 20, 2012

கிடைத்த சந்தர்ப்பம் தவறிப்போகுமா? - வி. தேவராஜ்

 ஐ .நா. மனித உமை கூட்டத் தொடர் விரைவில் ஆரம்பமாகவுள்ளது. இது குறித்து பல்வேறு எதிர்பார்ப்புகள், வாதப் பிரதிவாதங்கள் என்பன சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டன. இரண்டு வருடங்களுக்கு முன்பு இலங்கை தனக்குச் சாதகமாக 27 நாடுகளின் உதவியுடன் பிரேரணையை நிறைவேற்றிக் கொண்டது. கடந்த வருடம் இடம்பெற்ற மனித உமை கூட்டத் தொடரில் தனக்கெதிராக எவ்விதப் பிரேரணையும் கொண்டு வரப்படாமல் இருப்பதற்கான சகல முயற்சிகளையும் மேற்கொண்டு வெற்றியும் பெற்றது.
 இலங்கையைப் பொறுத்து சர்வதேசரீதியில் எழும் நெருக்கடிகளை அவ்வப்போது சமாளித்துவிட்டு அதற்கான தீர்வைக் காணாது கிடப்பில் போட்டு விடுவது வழக்கம். இவ்வாறு கிடப்பில் போடப்பட்ட விவகாரமே தற்பொழுது விஸ்வரூபம் எடுத்து நிற்கின்றது. விடுதலைப் புலிகளுடனான போரில் வழங்கப்பட்ட சர்வதேச ஆதரவுக்கும், உதவிகளுக்கும் பதிலீடாக இன விவகாரத்திற்கான தீர்வைக் காண்பதாக இலங்கை அரசாங்கம் உறுதிமொழி அளித்திருந்தது. குறிப்பாக அமெக்கா, இந்தியா ஆகிய நாடுகளுக்கு இந்த உறுதி மொழிகள் வழங்கப்பட்டதாக செய்திகள் தெவிக்கின்றன.

போர்முடிவடைந்து இரு வருடங்களுக்கு மேலாகியும் இந்த உறுதி மொழிகள் குறித்து எவ்வித ஆக்கபூர்வமான நடவடிக்கையும் அரசாங்கம் எடுக்கவில்லை. சர்வதேச நெருக்கடிகள், அழுத்தங்கள் எழும் பொழுதெல்லாம் இன விவகாரத்திற்கான தீர்வினைத் தூசி தட்டி பேச்சுவார்த்தை என்ற முலாம் பூசி, அதனை சர்வதேசத்திற்கு காட்சிப் பொருளாகக் காட்டியது.
இதற்கு அரசாங்கத்துடன் இணைந்துள்ள தமிழ்க்கட்சிகள் பக்கவாத்தியம் இசைக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரல்களுக்கு துணை போய்க் கொண்டிருந்தது.

ஆனால் கூட்டமைப்புக்கு தமிழ் மக்களிடமிருந்து கடும் நெருக்கடிகள் கொடுக்கப்படுகின்றது. அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு கூட்ட மைப்பு தொடர்ந்தும் பச்சைக் கொடி காட்டுமாக இருப்பின் கூட்டமைப்பின் மீது தமிழ் மக்கள் கொண்டுள்ள நம்பிக்கை தகர்ந்து போவதுடன், கூட்டமைப்பின் அரசியல் இருப்பும் கேள்விக்குள்ளாகிவிடும். ஐ.நா. மனிதவுரிமை கூட்டத் தொடர் கடந்த வருடம் ஆரம்பமாவதற்கு முதல் நாள் அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தைக்குப் போய், தோற்றுப் போன பேச்சுவார்த்தை மீண்டும் ஆரம்பித்து விட்டதான மாயையை உலக அரங்கிற்கு அரசாங்கம் எடுத்துச் செல்வதற்கு கூட்டமைப்பு உதவியது. 
ஆனால் இம் முறை அதே பாணியில் அரசாங்கம் இனவிவகாரத்திற்கான தீர்விற்கு நாடாளுமன்றத் தெரிவுக் குழு நாடகத்தை கூட்டமைப்பின் உதவியுடன் அரங்கேற்ற முனைந்து தோற்றுப் போய் நிற்கின்றது.






ஐ.நா. மனிதவுரிமை கூட்டத் தொடர் குறித்த பிடி இறுகும் நிலை உருவாகியுள்ளது. இதனையடுத்து சர்வதேசத்தின் பிடியை தளர்த்தும் நோக்கில் இலங்கை காய்களை நகர்த்தத் தொடங்கியுள்ளது.

1. விடுதலைப் புலிகளுக்கெதிரான யுத்தத்தின் இறுதிக் கட்டத்தின் போது பொதுமக்கள், கைதிகள் கொல்லப்பட்டமைக்கு படையினர் பொறுப்பாக இருந்தனர் என்பது தொடர்பான குற்றச்சாட்டுகளை விசாரிக்க இராணுவ தளபதி ஜகத் ஜயசூய விசாரணை மன்றம் ஒன்றை நியமித்துள்ளதாக இராணுவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.


2. பொலிஸ் ஆணைக்குழுவை அமைக்க இணக்கம் தெரிவிக்கப் பட்டுள்ளது.

ஆனால் இன விவகார தீர்வுக்கு நாடாளுமன்றத் தெரிவுக் குழுவில் இருந்து கீழிறங்கி வர அரசாங்கம் தயாராக இல்லை. சரணடைந்த விடுதலைப் புலிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கப்படுவது பற்றி ஏதும் பேசவில்லை. விசாரணையின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள் என்பது குறித்தும் பதில் இல்லை.
காணாமல் போனோர் தொடர்பான முறைப்பாடுகளுக்கு பொறுப்புக் கூறும் நிலையும் இல்லை.

மொத்தத்தில் ஐ.நா. மனித உரிமை சபைக் கூட்டத் தொடரை எவ்வாறு சமாளிப்பது என்பதை நோக்கியதாகவே அரசாங்கத்தின் காய் நகர்த்தல்கள் உள்ளன. கடந்த வாரம் வீரகேசரி வார வெளியீட்டுக்கு செவ்வி வழங்கிய இந்திய ஜனதா கட்சித் தலைவர் டாக்டர் சுப்ரமணிய சுவாமி குறிப்பிட்ட விடயத்தை இங்கு பதிவு செய்ய விரும்புகிறோம்.





““போரின் போது அமெரிக்கா செய்கின்ற உதவிகளுக்கு கைமாறாக போர் முடிந்தவுடன் இன விவகாரத்துக்கு தீர்வுகாண்பதாக இலங்கை அரசாங்கம் அமெரிக்காவுக்கு வாக்குறுதி அளித்திருந்தது. இந்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்ற கோபம் அமெரிக்காவுக்கு உள்ளது. அந்தக் கோபத்தை தமிழர் தரப்பு சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்'' என்று தெரிவித்தார்.

தமிழர் தரப்புக்கு வெற்றி கிடைக்கின்றதோ அல்லது தோல்வி கிடைக்கின்றதோ சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதே தமிழ் மக்களின் எதிர்பார்ப்பாகும். அதற்கான சரியான சந்தர்ப்பம் தற்பொழுது வாய்த்துள்ளதாகவே ஐ.நா. மனித உரிமைக் கவுன்ஸில் கூட்டத்தொடரை தமிழ் மக்கள் பார்க்கின்றனர்.

தமிழ் மக்கள் குறித்து இப்பத்தியில் இரு விடயங்கள் தொடர்சியாக வலியுறுத்தப்பட்டன.


1) தமிழர் தரப்பு குறிப்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை முன்னிறுத்தி தீர்வுப் பொதியை முன் வைத்து அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தைக்குச் செல்ல வேண்டும்.

2) சர்வதேச தலையீடு, மத்தியஸ்தம் இன்றி இனவிவகாரத்திற்கான தீர்வு சாத்தியமில்லை என்பதாகும்.

தீர்வுப் பொதி விடயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்னும் ஒரு முடிவுக்கு வந்ததாகத் தெயவில்லை. வெறுங்கையுடன் பேச்சுவார்த்தை மேசைக்கு அரசாங்கத் தரப்புடன் பேசுவதற்கு சென்ற கூட்டமைப்பு ஒரு வருட கால பேச்சுவார்த்தைக்குப் பிறகு வெறுங்கையுடன் திரும்பியுள்ளது.

அண்மையில் கூட்டமைப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்திய அமெக்க பிரதிநிதிகள் இனவிவகார தீர்வுக்கு தீர்வாக எதை எதிர்பார்க்கிறீர்கள்? என்று கேட்டதாகவும், அதற்கான உரிய பதிலை கூட்டமைப்பினரால் வழங்க முடியவில்லை என்றும் தகவல்கள் கசிந்துள்ளன.
இதற்குமப்பால் இந்திய தூதரக உயரதிகாரிகளுடனான சந்திப்பின் போது தெரிவுக் குழுவில் கூட்டமைப்பினர் பங்குகொள்ள வேண்டுமென கேட்கப்பட்டதாகவும், அதற்கு பதிலளித்த கூட்டமைப்புத் தரப்பினர் வடக்கு, கிழக்கு இணைப்பு, பொலிஸ், காணி அதிகாரங்களை வழங்குவதாக எழுத்துமூலமான உறுதி மொழியை அரசாங்கத் தரப்பு கொடுக்குமாக இருந்தால் தெரிவுக் குழுவுக்கு போவது பற்றி தீர்மானிக்கலாம் என்று கூறப்பட்டதாம்.

அத்துடன் பண்டா செல்வா ஒப்பந்தம் போன்றதொரு ஒப்பந்தத்துக்கு அரசாங்கத்தரப்பு உறுதி மொழி வழங்குமாக இருந்தால் தெரிவுக் குழுவுக்கு போவது பற்றி தீர்மானிக்கலாம் என்றும் கூறப்பட்டதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன. கூட் டமைப்பு சரியான முறையில் காய்களை நகர்த்தியாக வேண்டும். இல்லையேல் இன்று தமிழ் மக்களுக்கு கிடைத்துள்ள சந்தர்ப்பம் மீண்டும் ஒருமுறை கிடைக்குமென எதிர்பார்க்கமுடியாது ஆனால் கூட்டமைப்பில் சிலர் அனைத்தையும் தவிடு பொடியாக்கி விடுவார்களோ என்ற அச்சத்தில் பெரும்பாலான கூட்டமைப்பின் முக்கியஸ்தர்களும், தமிழ் மக்களும் உறைந்து போயுள்ளனர். பேச்சுவார்த்தை பொறிக்குள் மாட்டிக் கொண்டது போல் தமிழினத்தை இன்னொரு சிக்கலுக்குள் மாட்டிவிடாது இவர்கள் இருந்தால் போதும் என்ற தமிழ் மக்களின் எண்ணக் கருவை கூட்டமைப்பின் முன் வைக்கின்றோம் 
.

- வி. தேவராஜ்

No comments:

Post a Comment