விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநில செய்தித் தொடர்பாளர் வன்னிஅரசு,
விடுதலைப் புலிகளுக்கு ஆயுதம் கடத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் கடந்த
4-2-2012 அன்று காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில்
அடைக்கப்பட்டார். இன்று (7-2-2012) சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் பிணை
கோரி மனு செய்யப்பட்டது. பிற்பகல் 4 மணியளவில் பிணையளிக்கப்பட்டது.
பிணையாணையைப் பெற்றுக்கொண்டு புழல் சிறைக்குச் செல்வதற்கு முன்னதாக, வன்னிஅரசை வேறொரு வழக்கில் கைது செய்ய காவல்துறை தயாரானது. ஆனால் அதற்குள் சிறை அதிகாரிகளிடம் பிணை ஆணை வழங்கப்பட்டதன்பேரில் வன்னிஅரசு விடுவிக்கப்பட்டார்.
மாநில நிர்வாகிகள் தகடூர் தமிழ்ச்செல்வன், மடிப்பாக்கம் வெற்றிச்செல்வன், பார்வேந்தன், மாலதி, கடலூர் மாவட்ட நிர்வாகி தாமரைச்செல்வன், காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகிகள் ப. பூவிழி, சாமுவேல், தென் சென்னை மாவட்ட நிர்வாகிகள் விடுதலைச்செல்வன், சாரநாத், இர.செந்தில், திருவள்ளூர் மாவட்ட நிர்வாகிகள் இளங்கோ, தமிழ்ச்செல்வன், தாஸ் மற்றும் பகுதி விடுதலைச் சிறுத்தைகள் நூற்றுக்கணக்கானோர் சிறை வாயிலில் வன்னிஅரசுக்கு சிறப்பான வரவேற்பளித்தனர்.



No comments:
Post a Comment