மதியம் 14.00மணிக்கு நிகழ்வுகள் ஆரம்பமாகியது. மங்கல விளக்கினை முன்னை
நாள் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஜெயானந்தமூர்த்தி அவர்கள் ஏற்றியதைத்
தொடர்ந்து தாயக மண்மீட்புக்காய் இன்னுயிரை ஈகம் செய்த எம் மண்ணின்
மைந்தர்களுக்கு அகவணக்கம் செலுத்தடன் நிகழ்வுகள் ஆரம்பமாகி பரத
நாட்டியங்கள் கிராமிய நடனங்கள் திரையிசை நடனங்கள் சங்கீதப் பாடல்கள்
என்பனவற்றுடன் தமிழமுதம் இசைக்குழுவின் திரையிசை கானங்களும் அத்துடன் இன்றைய சிறப்பு விருந்தினர் முன்னை நாள் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஜெயானந்தமூர்த்தி அவர்களின் சிறப்புரையும் இடம்பெற்று அவர் கையால் தமிழமுதம் இசைக் கலைஞர்களும் கேடயங்கள் கொடுத்து கௌரவிக்கப்பட்டார்கள்.
மிகச்சிறப்பாக இடம்பெற்ற இந் நிகழ்வில் நூற்றுக்கணக்கான தமிழ் உறவுகள் மிக மகிழ்வுடன் கலந்து சிறப்பிக்க இந்நிகழ்வு 20.30 மணியளவில் நன்றியுரையுடன் இனிதே நிறைவெய்தியது.








No comments:
Post a Comment