ஐந்து
நாள் விஜயமொன்றை மேற்கொண்டு நேற்று இலங்கை வந்தடைந்துள்ள அமெரிக்காவின்
விஷேட தூதுவர் ஸ்டீபன் ஜே ரெப் தன்னுடைய இலங்கை விஜயத்தில் முன்னாள்
இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவின் விடுதலை தொடர்பில் முக்கியமாகக்
கலந்துரையாடுவார் எனத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் வெளிவிவகார அமைச்சர் பீரிஸ் ஆகியோருக்கிடையில் நேற்று சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இச்சந்திப்பின்போது, நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமை தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவை ஸ்டீபன் ஜே ரெப் நாளை சந்தித்துக் கலந்துரையாடவுள்ளதாக நம்பத்தகந்த வட்டாரங்களிலிருந்து தெரியவருகின்றது.
No comments:
Post a Comment