நேற்று மாலை பசுமைக் கட்சியை சார்ந்த திருமதி Ute Koczy, MdB (Bündnis 90 / DIE GRÜNEN) மற்றும் சமூக ஜனநாயக கட்சி சார்பாக Christoph Strässer, MdB (SPD) அவர்களுடன் மற்றும் ஏனைய பல சர்வதேச மனிதஉரிமை அமைப்புகள் மற்றும் ஊடகவியாளர்கள் ஈழத்தமிழர் மக்கள் அவையின் உறுப்பினர் உட்பட கலந்து கொண்ட சந்திப்பில் "இலங்கையில் அமைதி , சட்டம் மற்றும் மனிதஉரிமைகளின் பங்கு என்ன " எனும் தலைப்பில் கருத்தரங்கம் இடம்பெற்றது .
Christoph Strässer தனது உரையில் இலங்கையில் மிக கொடூரமான போர்க்குற்றங்கள் நடைபெற்றதாக அறிகின்றோம். அத்தோடு இலங்கை அரசாங்கம் தமிழ் மக்கள் விடையமாக எவ்வித திருப்திகரமான நடவெடிக்கைகளும் எடுக்காத வகையில் இவ்விடையம் குறித்து சர்வதேச சுஜாதீனமான விசாரணை மிக அவசியம் என வலியுறித்தினார் .
திருமதி Ute Koczy அவர்கள் தனது உரையில் போரின் பின்னர் தமிழ் மக்கள் படும் அவலம் குறித்தும் மற்றும் சிறப்பாக போரினால் தமது கணவர்களை இழந்து நிற்கும் பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் குறித்து மிக ஆழ்ந்த கவனம் தெரிவித்தார் அத்துடன் அவர் மேலும் கூறுகையில் இலங்கை அரசாங்கத்தின் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை ஏமாற்றத்தை தருவதாகவும், அதனால் சர்வதேச சுஜாதீனமான விசாரணை மிக அவசியம் என்பதனை குறிப்பிட்டார் .அத்தோடு இலங்கை விடையம் குறித்து யேர்மனிய அரசின் மௌனம் கவலை அளிப்பதாக எடுத்துரைத்தார் .
பாராளுமன்ற உறுப்பினர்களின் பேச்சுக்களை தொடர்ந்து Andreas Schüller, European Centre for Constitutional and Human Rights, அவர்கள் கூறுகையில் தமது அமைப்பு இலங்கை அரசாங்கத்தின் இறுதி கட்ட போரில் ஈடுபட்ட ராணுவ உயரதிகாரிகள் அதேவேளை தற்போது வெளிநாடுகளில் தூதுவர் பதவிகளில் அமத்தப்பட்டிருக்கும் போர்க் குற்றவாளிகள் மீது சட்ட நடவெடிக்கை எடுப்பதற்கு ஈடுபடுவதாகவும் கூறினார் அத்தோடு இறுதியில் அவரும் சர்வதேச சுஜாதீனமான விசாரணையை வலியுறித்தினார் .
அதை தொடர்ந்து பல ஆண்டுகளாக இலங்கையில் வேலைத்திட்டங்களை முன்னெடுக்கும் ஓர் மனித உரிமை அமைப்பு அங்கு இலங்கை அரசால் முன்னெடுக்கப்படும் தமிழர் நிலப்பறிப்பு மற்றும் மாவீர் இல்லங்கள் அழிக்கப்பட்ட விடையங்களை சுட்டிக் காட்டினார் .பேச்சுக்களை தொடர்ந்து பொதுவான விவாத அரங்கு திறக்கப்பட்டது .
அவ் வகையில் ஈழத்தமிழர் மக்கள் அவையின் தலைவர் ஜெயசங்கர் அவர்களால் இலங்கை அரசின் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை உள்ளடக்கத்தின் அப்பால் முற்றாக நிராகரிக்கப் படவேண்டும் என்றும் அத்தோடு அனைத்துல சுஜாதீன விசாரணையோடு ஈழத்தமிழர்களின் அரசியல் தீர்வு ஒரே நேரத்தில் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று வலியுறித்தினார் .
சந்திப்பில் கலந்து கொண்ட Dr . Wagner ,பல வருடங்களாக யேர்மனிய வெளிவிவகார அமைச்சுக்கு ஈழத்தமிழர்கள் சார்ந்த பாதகமான ஆய்வு அறிக்கைகளை உருவாக்குபவர் , புலம்பெயர் ஈழத்தமிழர்களின் அதாவது வெளிநாடு தமிழீழ விடுதலைப் புலிகளின் பங்கு என்ன என்று கேள்வி கேட்டு , ஈழத்தமிழர்களின் அரசியல் பிரச்னையை தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரச்சனை மட்டும் என்று சித்தரித்து ஈழத்தமிழருக்கு பாதகமான கருத்தை முன்வைக்க முயற்சித்தார் .
அவ் வேளையில் ஈழத்தமிழர் மக்கள் அவை சார்பாக அவரின் தவறான கருத்தை முறியடிக்கும் முகமாக ஈழத்தமிழர் விடுதலை அவா மக்கள் மத்தியில் நிலத்திலும் புலத்திலும் இன்றும் நிலவுகின்றது அதற்கு உதாரணம் கடந்த சில வாரங்களுக்கு முன்பாக சிவில் சமூகம் தமிழ் தேசியக் கூட்டணிக்கு விடுத்திருந்த வேண்டுகோளில் மிக தெளிவாக சுட்டிக் காட்டப் பட்டுள்ளது என்பதையும் அத்தோடு தாயகத்தில் தமிழ் மக்கள் குரல்கள் ஒடுக்கப்பட்ட நிலையில் புலம்பெயர் மக்கள் தமது குரலை அவர்களுக்காக கொடுக்கின்றனர் என்பதனையும் கூறப்பட்டுள்ளது. அத்தோடு தமிழ் மக்கள் மீது போர்குற்றம் மட்டும் அல்லாது திட்டமிட்ட இனவழிப்பு இலங்கை அரசால் முன்னெடுக்கப் படுகின்றது என்பதுவும் சுட்டிக்காட்டப்பட்டது .
நிகழ்வின் இறுதியில் இலங்கை விடையமாக அனைத்துல சுஜாதீன விசாரணை உடனடியாக ஆரம்பிக்கப்பட வேண்டும் என்று அனைவராலும் தீர்மானிகப்பட்டது.
ஈழத்தமிழர் மக்கள் அவை - யேர்மனி
www.vetd.info | info@vetd.info
நேற்று மாலை பசுமைக் கட்சியை சார்ந்த திருமதி Ute Koczy, MdB (Bündnis 90 / DIE GRÜNEN) மற்றும் சமூக ஜனநாயக கட்சி சார்பாக Christoph Strässer, MdB (SPD) அவர்களுடன் மற்றும் ஏனைய பல சர்வதேச மனிதஉரிமை அமைப்புகள் மற்றும் ஊடகவியாளர்கள் ஈழத்தமிழர் மக்கள் அவையின் உறுப்பினர் உட்பட கலந்து கொண்ட சந்திப்பில் "இலங்கையில் அமைதி , சட்டம் மற்றும் மனிதஉரிமைகளின் பங்கு என்ன " எனும் தலைப்பில் கருத்தரங்கம் இடம்பெற்றது .திருமதி Ute Koczy அவர்கள் தனது உரையில் போரின் பின்னர் தமிழ் மக்கள் படும் அவலம் குறித்தும் மற்றும் சிறப்பாக போரினால் தமது கணவர்களை இழந்து நிற்கும் பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் குறித்து மிக ஆழ்ந்த கவனம் தெரிவித்தார் அத்துடன் அவர் மேலும் கூறுகையில் இலங்கை அரசாங்கத்தின் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை ஏமாற்றத்தை தருவதாகவும், அதனால் சர்வதேச சுஜாதீனமான விசாரணை மிக அவசியம் என்பதனை குறிப்பிட்டார் .அத்தோடு இலங்கை விடையம் குறித்து யேர்மனிய அரசின் மௌனம் கவலை அளிப்பதாக எடுத்துரைத்தார் .
பாராளுமன்ற உறுப்பினர்களின் பேச்சுக்களை தொடர்ந்து Andreas Schüller, European Centre for Constitutional and Human Rights, அவர்கள் கூறுகையில் தமது அமைப்பு இலங்கை அரசாங்கத்தின் இறுதி கட்ட போரில் ஈடுபட்ட ராணுவ உயரதிகாரிகள் அதேவேளை தற்போது வெளிநாடுகளில் தூதுவர் பதவிகளில் அமத்தப்பட்டிருக்கும் போர்க் குற்றவாளிகள் மீது சட்ட நடவெடிக்கை எடுப்பதற்கு ஈடுபடுவதாகவும் கூறினார் அத்தோடு இறுதியில் அவரும் சர்வதேச சுஜாதீனமான விசாரணையை வலியுறித்தினார் .
அதை தொடர்ந்து பல ஆண்டுகளாக இலங்கையில் வேலைத்திட்டங்களை முன்னெடுக்கும் ஓர் மனித உரிமை அமைப்பு அங்கு இலங்கை அரசால் முன்னெடுக்கப்படும் தமிழர் நிலப்பறிப்பு மற்றும் மாவீர் இல்லங்கள் அழிக்கப்பட்ட விடையங்களை சுட்டிக் காட்டினார் .பேச்சுக்களை தொடர்ந்து பொதுவான விவாத அரங்கு திறக்கப்பட்டது .
அவ் வகையில் ஈழத்தமிழர் மக்கள் அவையின் தலைவர் ஜெயசங்கர் அவர்களால் இலங்கை அரசின் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை உள்ளடக்கத்தின் அப்பால் முற்றாக நிராகரிக்கப் படவேண்டும் என்றும் அத்தோடு அனைத்துல சுஜாதீன விசாரணையோடு ஈழத்தமிழர்களின் அரசியல் தீர்வு ஒரே நேரத்தில் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று வலியுறித்தினார் .
சந்திப்பில் கலந்து கொண்ட Dr . Wagner ,பல வருடங்களாக யேர்மனிய வெளிவிவகார அமைச்சுக்கு ஈழத்தமிழர்கள் சார்ந்த பாதகமான ஆய்வு அறிக்கைகளை உருவாக்குபவர் , புலம்பெயர் ஈழத்தமிழர்களின் அதாவது வெளிநாடு தமிழீழ விடுதலைப் புலிகளின் பங்கு என்ன என்று கேள்வி கேட்டு , ஈழத்தமிழர்களின் அரசியல் பிரச்னையை தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரச்சனை மட்டும் என்று சித்தரித்து ஈழத்தமிழருக்கு பாதகமான கருத்தை முன்வைக்க முயற்சித்தார் .
அவ் வேளையில் ஈழத்தமிழர் மக்கள் அவை சார்பாக அவரின் தவறான கருத்தை முறியடிக்கும் முகமாக ஈழத்தமிழர் விடுதலை அவா மக்கள் மத்தியில் நிலத்திலும் புலத்திலும் இன்றும் நிலவுகின்றது அதற்கு உதாரணம் கடந்த சில வாரங்களுக்கு முன்பாக சிவில் சமூகம் தமிழ் தேசியக் கூட்டணிக்கு விடுத்திருந்த வேண்டுகோளில் மிக தெளிவாக சுட்டிக் காட்டப் பட்டுள்ளது என்பதையும் அத்தோடு தாயகத்தில் தமிழ் மக்கள் குரல்கள் ஒடுக்கப்பட்ட நிலையில் புலம்பெயர் மக்கள் தமது குரலை அவர்களுக்காக கொடுக்கின்றனர் என்பதனையும் கூறப்பட்டுள்ளது. அத்தோடு தமிழ் மக்கள் மீது போர்குற்றம் மட்டும் அல்லாது திட்டமிட்ட இனவழிப்பு இலங்கை அரசால் முன்னெடுக்கப் படுகின்றது என்பதுவும் சுட்டிக்காட்டப்பட்டது .
நிகழ்வின் இறுதியில் இலங்கை விடையமாக அனைத்துல சுஜாதீன விசாரணை உடனடியாக ஆரம்பிக்கப்பட வேண்டும் என்று அனைவராலும் தீர்மானிகப்பட்டது.
ஈழத்தமிழர் மக்கள் அவை - யேர்மனி
www.vetd.info | info@vetd.info
No comments:
Post a Comment