Wednesday, February 29, 2012

தமிழர்கள் தொன்று தொட்டு வாழ்ந்துவரும் வரலாற்று ரீதியிலான பிரதேசம் தமிழர்களின் தேசம் - ஐயாநாதன்

நீதிக்காக நடைபயணம் மேற்கொள்ளும் இளைஞர்களுக்கு நாம்தமிழர் கட்சியின் ஊடகவியலாளர் ஜயாநாதன் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
ஈழத்தில் தமிழினம்மீது உலநாடுகளின் துணையுடன் சிறீலங்கா அரசு நடத்திய திட்டமிட்ட இனப்படுகொலையில் உயிரிழந்த மக்களுக்கும் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் நியாயம்
கிடைக்கவேண்டும் என்பதை வலியுறுத்தி அதற்கான சுதந்திரமான பன்னாட்டு விசாரணைக்குழுவினை ஜ.நா அமைக்கவேண்டும் என்பதை ஜக்கியநாடுகள் சபை யின் மனிதஉரிமை மன்றம் தீர்மானமாக நிறைவேற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழ்இளைஞர்கள் நீண்ட நெடும் பயணத்தினை மேற்கொண்டு வருகின்றார்கள்.
ஈழத்தில் நடந்தது திட்டமிட்ட தமிழினஅழிப்பு என்பதனை உலகின் பார்வைக்கு வெளிக்கொணரவேண்டும்என்றால் அதற்கு பன்னாட்டு விசாரணை அவசியம் என்பதை மட்டும் வலியுறுத்தி நடக்கவில்லை ஆக்கிரமித்திருக்கும் தமிழர்தாயகத்தில் படையினரின் படைமுகாம்கள், தமிழீழத்தில் மூன்றில் ஒருபகுதி படையிரனரின் நேரடி கட்டுப்பாட்டில் இருக்கின்றது. அந்தபிரதேச மக்கள் தங்கள் காணிகளை இழந்து வேறு இடங்களுக்கு அனுப்பப்பட்டு இடம்இன்றி வீடின்றி உளைத்து சாப்பிட வசதி இன்று அல்லல் பட்டுநிக்கின்றன, இப்படிப்பட்ட நிலையில் தமிழ்இனத்தின் வாழ்விடத்தில் இருந்து சிங்களப்படையினர் வெளியேற வேண்டும், அத்துடன் நிற்காமல் பன்னாடுகள் அனைத்தும் தமிழர்களின் இறையாண்மை என்பதை நிர்ணயிக்கவேண்டும், அரைநூற்றாண்டிற்கு மேலாக சமஉரிமைக்காக போரடிவருகின்றார்கள்,
2001 ஆம் ஆண்டு நியுயோர்க்தாக்குதலுக்கு பிறகு தமிழின விடுதலைப்போராட்டத்தை பயங்கரவாதமாக சித்தரிக்கப்பட்டு தமிழினம் அழிவிற்கு உட்படுத்தப்பட்டுள்ளது.இவ்வாறான சூழலில் தமிழினத்தின்இறைமையினை வலியுத்தகூடிய வாக்கெடுப்பு ஈழத்துதமிழ்மக்கள் மத்தியிலும் புலம்பெயர் தமிழர்கள் மத்தியிலும் ஜ.நா நடத்தவேண்டும் என்பதை நடைபயணத்தின் ஊடாக வற்புறுத்துகின்றார்கள்.அத்துடன் போரில் சிறைப்பிடிக்கப்பட்ட சரணடைந்த அரசியல் போராளிகள் அனைவரையும் மனிதாபிமான அடிப்படையில் மன்னித்து விடுதலைசெய்யவேண்டும் என்பதையும் கோரியுள்ளார்கள்இந்த உலநாடுகள் ஒரு உண்மையினை பகிரங்கபடுத்தவேண்டும் தமிழர்கள் தொன்றுதொட்டு வாழ்ந்துவரும்வரலாற்றுரீதியிலான பிரதேசம் தமிழர்களின் தேசம் என்பதனை வலியுறுத்தவேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து கடுமையான பனிப்பொழிவிற்கு மத்தியில் கஸ்ரத்திற்கு மத்தியில் நீண்ட பயணத்தினை மேற்கொள்கின்றார்கள்இந்தபயணம் என்பது ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகும்
2009 ஆண்டு முள்ளிவாய்க்கால் மண்ணில் நாற்பதாயிரம் மக்கள் இறந்த ஒரிரு வாரங்களில் நடந்த மனிதஉரிமை கூட்டத்தில் சுவிஸ்லாந்து உள்ளிட்ட நாடுகள் கொண்டுவந்த விசாரிக்கவேண்டும் என்ற தீர்;மானம் முறியடிக்கப்பட்டது. இலங்கையினை பாராட்டி ஒருதீர்மானம் நிறைவேற்றப்பட்டது இப்படியான நிலை மீண்டு ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காகத்தான் இந்தநீண்ட நெடிய பணத்தினை மேற்கொண்டுவருகின்றார்கள்.இந்த பயணம் மிகமிக முக்கியமானது ஜ.நா மனிதஉரிமைகள் மன்றத்தில் இந்தகோரிக்கை முழுமையாக செவிசாய்க்கப்பட்டு திட்டமிட்ட இனப்படுகொலையினை வெளிக்கொணர பன்னாட்டு விசாரணைகுழுவினை அமைக்கவேண்டும் என்கின்ற தீர்மானம் நிறைவேற்றப்படவேண்டும் என்கின்ற மிகமுக்கியமான கோரிக்கை நிறைவேறவேண்டும் என்பதுதான் இந்த பயணத்தின் நோக்கம்.இந்த இளைஞர்கள் பயணத்தின் போது மாநிடத்தின் எல்லா இனமக்களிடமும் கையெழுத்து பெற்று அதனை ஜ.நா மனிதஉரிமைமன்றத்தின் ஆணையருக்கு அனுப்ப இருக்கின்றார்கள்.
இந்த கையெழுத்து இயக்கத்தை உலகளாவியரீதியில் மேற்கொண்டு சென்று அதனை மனிதஉரிமை மன்றத்தில் அனுப்பும் மா பணியில் தமிழர்கள் அனைவரும் ஈடுபடவேண்டும் தமிழினத்தின் துயரத்துடைக்க போராட்டத்திற்கு நல்வளிபிறக்க தன்னலம் பாராமல் உடல்நலத்தை பணயம் வைத்து நடைபயணம்மேற்கொள்ளும் இந்தஇளைஞர்களின் பயணம் வெற்றிபெற மனிதாபிமானத்துடன் வாழ்த்துகின்றேன்.என்றும் ஜயாநாதன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment