Wednesday, February 29, 2012

சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானத்தை ஐரோப்பிய ஒன்றியமும் ஆதரிக்கும்

ஐ.நா மனித உரிமைப் பேரவையில் சிறிலங்காவுக்கு எதிராகக் கொண்டுவரப்படவுள்ள தீர்மானத்தை ஐரோப்பிய ஒன்றியம் ஆதரிக்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது.


இறுதிக்கட்ட யுத்தத்தின் போது தமிழ் மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட மனித உரிமைகள்
மீறல்களுக்கு பொறுப்புக் கூறுதல் தொடர்பாக, ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் கொண்டுவரப்படவுள்ள தீர்மானத்திற்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிவிவகார பேரவை ஆதரவு வழங்கவுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் பங்குபற்றிய 'ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிவிவகாரப் பேரவை' கூட்டம் நேற்று பிரசெல்சில் இடம்பெற்றது. இக் கூட்டத்திலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக  தெரிவிக்கப்படுகிறது.

நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை சிறிலங்கா அரசாங்கம் முழுமையாக நடைமுறைப்படுத்துவதை ஐரோப்பிய ஒன்றியம் ஊக்குவிக்கும் என இக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment