Tuesday, February 21, 2012

கனடாவில் நடைபெற்ற சர்வதேச மனித உரிமைகள் மாநாடு! (படங்கள் இணைப்பு)

21ஆம் நூற்றாண்டில் மனித உரிமை பாதுகாப்பும் அது எதிர்கொள்ளும் அறைகூவல்களும் - இலங்கை குறித்து ஒரு ஆய்வு என்ற தலைப்பிலான சர்வதேச மனித உரிமைகள் மாநாடு கடந்த சனிக்கிழமை பெப்பிரவரி 18ஆம் நாள் காலை 10 மணிக்கு ரொறன்ரோ கனடாவில் ஆரம்பமாகி நடைபெற்றது.
IMG_0011உலகெங்கும் இருந்து வருகைதந்துள்ள மனித உரிமை வல்லுனர்கள் பேராளர்கள் கலந்து கருத்துரை வழங்கிய இம்மாநாட்டில் தமிழ் பிரதிநிதிகளும் பல்வேறு நாடுகளில் இருந்து வருகை தந்து கலந்து கொண்டனர்.

கனடாவின் மூன்று பிரதான கட்சிகளின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டு கருத்துரை வழங்கியமை குறிப்பிடத்தக்கது. இம்மாநாட்டின் மேலும் ஒரு சிறப்பம்சமாகும். 21ஆம் நூற்றாண்டில் மனித உரிமைகள் எதிர்கொள்ளும் சவாலும் குறிப்பாக சர்வதேச கட்டுமாணங்கள் 21ஆம் நூற்றாண்டில் எவ்வாறு சிறீலங்காவில் பொய்த்துப் போயின என்பன குறித்தும் இம்மாநாடு மேலும் ஆராய்ந்தது.

இம்மாநாடு இம்மாதம் இறுதிப்பகுதியில் ஆரம்பமாகவுள்ள ஐ.நா மனித உரிமைகள் கூட்டத் தொடருக்கு வலுச்சேர்க்கும் வகையில் அமையும் என நம்பப்படுகிறது. போரினால் பாதிக்கப்பட்டோருக்கும் மனித உரிமைகளுக்குமான நடுவத்தின் ஏற்பாட்டில் அனைத்துலகத் தமிழ் அமைப்புகளின் அணுசரனையுடன் இம்மாநாடு நடைபெற்றது.

மாநாடு நிகழ்வுக்குப் பின்னர் மாலை நிகழ்வாக தமிழ்நாட்டில் இருந்து வருகை தந்த கலைமாமணி உன்னி கிருஷ்ணன் அவர்களும், பாடகி றோஜினி அவர்களும் கலந்து கொண்ட மெஹா ரியூணர் இசைக்குழுவின் நிகழ்வும் இடம்பெற்றது.

இந்த இசை நிகழ்ச்சியால் பெறப்பட்ட பணத்தில் இருந்து (35,000 டொலர்கள்) போர்க்குற்ற விசாரணைகளுக்கப் பாடுபடும் அமைப்புகளுக்குப் பணம் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
































-ரொறன்ரோவில் இருந்து லிங்கா


No comments:

Post a Comment