உலகத்தமிழர்கள் அனைவரும் ஈழத்தமிழர்களுக்காக மார்ச் 5ம் திகதி
ஐநாசபையிடம் நீதி கேட்பதற்கு ஒன்றுபட்ட நிலையில் தயாராகி வருகின்ற
இத்தருணத்தில் நீதிக்கான நடைப்பயணம் இன்று 26வது நாளாகவும் தொடர்கின்றது.
தமிழர்களின் விடிவிற்காக தமிழீழ நினைவுகளோடு மரணத்தை அரவணைத்து தமிழீழ அன்னையின் மடியில் இருள் சூழ்ந்த தமிழரின் வாழ்வில் ஒளி வீசும் என்ற நம்பிக்கையோடு விழி மூடி உறங்குகின்ற மாவீரர்களின் கல்லறைகளுக்கு இம்
மூவருடனும் சேர்ந்து தாயகஉணர்வாளர்களும் சென்று அகவணக்கம் செலுத்தியதோடு மட்டுமல்லாமல் உங்கள் கனவுகள் நிறைவேறும் நாள் வரை தமிழர்களின் விடுதலைப் போராட்டம் ஓயாது. உங்கள் இலட்சியப் பாதையில் தொடர்ந்து பயணிப்போம் என்று Yverdon எனும் இடத்தில் உள்ள, மாவீரர்களின் நினைவுத்தூபியில் உறுதியெடுத்துக்கொண்டனர்.
ஐநா கூட்டத்தொடரில் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு கலந்துகொள்ளாமல்
தவிர்த்து இருப்பதை யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் வன்மையாகக்
கண்டித்துள்ளதுடன் இராணுவ கெடுபிடிகளுக்கு மத்தியிலும் தமது எதிர்ப்பை
கொடும்பாவிகளைக் கட்டியும் காட்டியுள்ளனர். இதன் மூலம் உணரப்படுவது சர்வதேச
சமூகத்தின் சுயாதீன விசாரணையை தாயகத்தில் உள்ள இளையோர்களும்
விரும்புகின்றனர் புலத்தில் நடத்தப்படுகின்ற போராட்டங்களுக்கு தமது
ஆதரவினையும் இச்சம்பவம் உணர்த்தி நிற்கின்றது.
புலத்தில் வாழ் அன்பிற்குரிய தமிழீழ உறவுகளே மார்ச் 5ம் திகதி ஒன்றுபட்டு எங்கள் உரிமைகளை ஐநாசபையிடம் கேட்பதற்கு நீங்கள் வரவேண்டும். இது கட்டாய அழைப்பு என கருதாமல் தமிழின வரலாற்றுத் தேவை கருதிய அழைப்பு. எனவே சிந்தித்து இன்றே புறப்பட தயாராகுங்கள்.
தமிழர்களின் விடிவிற்காக தமிழீழ நினைவுகளோடு மரணத்தை அரவணைத்து தமிழீழ அன்னையின் மடியில் இருள் சூழ்ந்த தமிழரின் வாழ்வில் ஒளி வீசும் என்ற நம்பிக்கையோடு விழி மூடி உறங்குகின்ற மாவீரர்களின் கல்லறைகளுக்கு இம்
மூவருடனும் சேர்ந்து தாயகஉணர்வாளர்களும் சென்று அகவணக்கம் செலுத்தியதோடு மட்டுமல்லாமல் உங்கள் கனவுகள் நிறைவேறும் நாள் வரை தமிழர்களின் விடுதலைப் போராட்டம் ஓயாது. உங்கள் இலட்சியப் பாதையில் தொடர்ந்து பயணிப்போம் என்று Yverdon எனும் இடத்தில் உள்ள, மாவீரர்களின் நினைவுத்தூபியில் உறுதியெடுத்துக்கொண்டனர்.
புலத்தில் வாழ் அன்பிற்குரிய தமிழீழ உறவுகளே மார்ச் 5ம் திகதி ஒன்றுபட்டு எங்கள் உரிமைகளை ஐநாசபையிடம் கேட்பதற்கு நீங்கள் வரவேண்டும். இது கட்டாய அழைப்பு என கருதாமல் தமிழின வரலாற்றுத் தேவை கருதிய அழைப்பு. எனவே சிந்தித்து இன்றே புறப்பட தயாராகுங்கள்.
No comments:
Post a Comment