Wednesday, March 14, 2012

இலங்கைக்கு எதிராக 63 பக்க அறிக்கை!


இலங்கைக்கு எதிராக 63 பக்கங்கள் கொண்ட ஆவணம் ஒன்றை சர்வதேச மன்னிப்புச் சபை இன்று வெளியிட்டு உள்ளது.

இந்த ஆவணத்துக்கு  “Locked away: Sri Lanka’s security detainees”  என்று பெயரிடப்பட்டு உள்ளது.

இலங்கையில் பல நூற்றுக் கணக்கானோர் சட்டவிரோதமாக சிறை வைக்கப்பட்டு சித்திரவதை, படுகொலை ஆகியவற்றுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர் என்றும் இவர்கள் நீதிமன்ற விசாரணைகளுக்கு முறையாக உட்படுத்தப்படாமல் பல மாதங்களாக அல்லது பல வருடங்களாக சிறை வைக்கப்பட்டு இருக்கின்றனர் என்றும் கணிசமானவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க சந்தேகநபர்கள் என்றும் இதில் உள்ளது.


இலங்கைக்கு எதிரான போர்க் குற்றச்சாட்டுக்கள் குறித்து ஐக்கிய நாடுகள் சபை விசாரணை நடத்த வேண்டும் என்றும் இதில் கோரப்பட்டு உள்ளது.

போர்க் குற்றங்கள் விடயத்தில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என்று அமெரிக்கா ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் வலியுறுத்தி வருகின்ற நிலையில் இவ்வறிக்கை வெளியாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment