கடந்த திங்கட்கிழமை ஆரம்பமாக ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரில் நாடுகளின் உயர்மட்டப் பிரதிநிதிகளின் உரைகள் விவாதங்களுக்கு இடையே இன்றும் இடம்பெறவுள்ளது.
இன்று காலை 9 மணியளவில் சிரியா நிலைமை தொடர்பாக இரண்டு மணி நேர அவசர விவாதம் ஒன்று இடம்பெறும்.
இதையடுத்து 11 மணி தொடக்கம் 12 மணி வரையும், மாலை 3 மணி தொடக்கம் 6 மணி வரையும் உயர்மட்ட பிரதிநிதிகளின் உரைகள் இடம்பெறவுள்ளது.
இதன்போது, அமெரிக்காவின் சார்பில் பொதுமக்கள் பாதுகாப்பு, ஜனநாயகம் மற்றும் மனிதஉரிமைகளுக்கான இராஜாங்கத் திணைக்களத்தின் கீழ்நிலைச்செயலர் மரியா ஒரேரோ உரை நிகழ்த்தவுள்ளார்.
அவர் சிறிலங்காவுக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வரவுள்ள தீர்மானம் குறித்த முக்கியமான தகவல்களை தனது உரையில் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மரியா ஒரேரோ அண்மையில் கொழும்புக்கு பயணம் மேற்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment