Saturday, March 03, 2012

பாதுகாப்பதற்கான சகல ஒத்துழைப்புகளையும் சீனா தொடர்ந்து வழங்கும்: சீனாவின் பாதுகாப்பு அமைச்சர்

இலங்கையின் இறைமையையும் ஆட்புல ஒருமைப்பாட்டையும் பாதுகாப்பதற்கான சகல ஒத்துழைப்புகளையும்  சீனா தொடர்ந்து வழங்கும் என தெரிவித்துள்ள சீனாவின் பாதுகாப்பு அமைச்சர் லியாங் குவாங் லி லியாங், இராணுவ ஒத்துழைப்புகளை இலங்கையுடன் பகிர்ந்துகொள்ள சீனா தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.


சீனா சென்றுள்ள இலங்கையின் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ரஜபக்‌ஷ சீன பாதுகாப்பு அமைச்சரை பீஜிங்கில் சந்தித்து பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டார். இந்த பேச்சு வார்த்தைகளின் போதே சீன பாதுகாப்பு அமைச்சர் இந்த உறுதி மொழியை வழங்கியுள்ளார்.

இந்த சந்திப்பின் போது, இலங்கையின் சுதந்திரத்தையும் இறைமையையும் ஆட்புல ஒருமைப்பாட்டையும் பாதுகாக்கவும் சமூக மற்றும் பொருளாதார உதவிகளை வழங்கவும் சீனா தயாராக உள்ளது.

மேலும், இலங்கைக்கு சீனா தொடர்ந்து இராஜதந்திர ரீதியிலான உதவிகளையும் ஒத்துழைப்புகளையும் வழங்கும். இராணுவ ஒத்துழைப்புகளையும் இரு நாடுகளும் பயன் பெறும் விதத்தில் பரிமாறிக்கொள்ள சீன என்றும் தயாராக உள்ளது என்றும் சீன அமைச்சர் இதன் போது உறுதிமொழி வழ்ங்கியுள்ளார்.

ஐ.நா மனித் உரிமைகள் பேரவையில் இலங்கை மீதான யுத்தக்குற்றச்சாட்டுக்களையும் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களையும் சுமத்த மேற்கத்தேய நாடுகள் தயாராகி வரும் நிலையில் சீனா இவாவாறன ஒரு கருத்தினை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment