Saturday, March 03, 2012

தஞ்சை முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் அமைப்பதற்கு ஆஸ்திரேலியா வாழ் தமிழர்கள் 1,83,000 நிதி உதவி!

முள்ளிவாய்க்காலில்   கடைசிக்கட்ட போரில் மடிந்த தமிழர்களின் நினைவாக தஞ்சையில் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் என்ற கற்கோயில் எழுப்பப்பட்டு  வருகிறது.
ஈழத் தமிழர்களுக்காகத் தீக்குளித்துத் தியாகம் செய்த முத்துக்குமார் உட்பட 19 ஈகிகளின் நினைவாகவும் சிற்ப நுணுக்கம் மிகுந்த நினைவுச் சின்னம் எழுப்பப்பட்டு வருகிறது.

இராசராசன் எழுப்பிய தஞ்சைக் கற்கோயிலுக்குப் பயன்படுத்திய அதே ரக கற்கள் கண்டறியப்பட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பெரும் பொருட் செலவில் தஞ்சைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளன.


50 தொன்னிற்கு மேலான எடையும் 40 அடி நீளமும் 10 அடி உயரமும் 3 அடி கனமும் கொண்ட பெரும் கற்களில் நூற்றுக்கு மேற்பட்ட சிற்பிகள் இரவு பகலாக அற்புதமான சிற்பங்களைச் செதுக்கி வருகிறார்கள்.
முள்ளிவாய்க்காலில் படுகொலையாகி வீழ்ந்து கிடக்கும் மக்களின் அவலக் காட்சியும், முள்வேலி முகாம்களில் அடைக்கப்பட்டுப் புலம்பும் மக்களின் துயரக் காட்சியும், முத்துக்குமார் உட்பட தமிழ்நாட்டிலும் உலக நாடுகளிலும் உயிர்த் தியாகம் செய்த ஈகிகளின் சிலைகளும் செதுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் முடிவடையும் தருவாயிலுள்ள நினைவு முற்றத்திற்கு பல்வேறு கட்சிகளைச் சார்ந்தவர்களும், தமிழன உணர்வாளர்களும் நிதி உதவி அளித்து வருகின்றனர். இதனை தொடர்ந்து ஆஸ்திரேலியா வாழ் தமிழர்கள் முள்ளிவாய்க் கால் நினைவு முற்றம் அமைப்பதற்காக 1,83,000(ஒரு லட்சத்து எண்பத்து மூன்றாயிரம்)  நிதி உதவி செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இத்தொகையினை 2.3.2012 இன்று உலகத்தமிழர் பேரமைப்புத் தலைவர் திரு பழ.நெடுமாறனிடம் வழங்கினர். ஆஸ்திரேலியா வாழ் தமிழர்கள்.

No comments:

Post a Comment