Monday, March 05, 2012

சிறுமியை பாலியல் வல்லுறவு செய்து கொலை செய்த ஒட்டுக்குழு உறுப்பினர் - காணொளி

யாழ் நெடுந்தீவில் சிறுமியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த பின் கொலை செய்த முன்னால் ஒட்டுக்குழு ஈ.பி.டி.பி கட்சிஉறுப்பினர் மக்களால் தாக்கப்பட்டுள்ளதுடன் கொலையாளியை காப்பாற்றமுயற்சித்தபோது சிறீலங்கா கடற்படையினருக்கும் மக்களுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
நெடுந்தீவுப் பகுதியில் நேற்று பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய பின்னர் கொலை செய்தஒட்டுக்குழு ஈ.பி.டி.பி கட்சியின் முன்னாள் உறுப்பினரும் அக்கட்சியின் நாடாளுமண்ற உறுப்பினரின் சில்வஸ்ரின் அலன்ரின் ( உதயன் ) நெடுந்தீவின் வலது கையுமான நபரை தகுந்த சாட்சியுடன் மக்கள்நேற்று மடக்கிப் பிடித்து அவர் மீது தாக்குலும் நடத்தியுள்ளனர்.

இதன் பின்னர் ஈ.பி.டி.பி உதயனின் உத்தரவின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் அங்கிருந்தமக்களை மிரட்டி அவரின் ஒட்டுக்கழுவின் வலது கையை மீட்டுச் சென்றுள்ளனர். அதற்கு இடையில் இவ்வாறு ஒரு சம்பவம் இடம்பெறும்என்று முன்கூட்டியே தெரிந்து வைத்திருந்த மக்கள் தகவல் அறிந்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வருகை தருவதற்குமுன்னர் கொலையாளியின் இரண்டு கால்களையும் உடைத்துள்ளனர்.
எனினும் காவல்துறையினரால் காப்பாற்றிக் கொண்டு செல்லப்பட்ட கொலையாளி இன்று அங்குள்ள காவல்துறை நிலையத்தில் இருந்து மாற்றப்பட்டு யாழ்பாணத்திற்கு கொண்டு செல்லப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டதையடுத்து சம்பவஇடத்திற்கு திரண்ட நெடுந்தீவு மக்கள் முதலில் ஈ.பி.டி.பி அலுவலகத்திற்குச் சென்றனர்.அங்கு எவரும் இல்லாததையடுத்து அங்கிருந்த வால்களுக்கு எச்சரிக்கை ஒன்றினையும் விடுவித்துச் சென்றனர்.பின்னர் நெடுந்தீவு இறங்கு துறைக்கு படையெடுத்த மக்கள் அங்கிருந்த சிறீலங்கா கடற்படையினருடன் வாக்குவாதப்பட்டனர்.
இவ் வாக்குவாதத்தில் மக்கள் கருத்துத் தெரிவிக்ககையில் கொலையாளியை நாங்கள் தான் பிடித்தோம்.ஆனால் காவல்துறையினர் தாம் பிடித்ததாக நினைத்துக் கொண்டு உள்ளார்கள், கொலையாளியை காப்பாற்றும்முயற்சி இடம்பெற்றுவருகின்னதை நாம் அறிந்துள்ளோம், இன்று கடைக
ள் மூடப்பட்டுள்ளது, ஒருவரும்கடற்றொழிலுக்குச் செல்லவில்லை, மேற்படிப் பிரதேசத்திற்கான கப்பல் போக்குவரத்துச் சேவைகனையும்நிறுத்தியுள்ளனர்தம்மிடம் கொலையாளி ஒப்படைக்கப்பட வேண்டும்.இல்லாவிட்டால் கடுமையான தண்டனை வழங்க வேண்டும்.என்றும் கோரிக்கைகள் பலவற்றை வெளிப்படுத்தினர்.
இதனிடையில் கடற்படையினர்மற்றும்காவல்துறையினருக்கும் இடையில் இன்று இறங்குதுறைமற்றும் நெடுந்தீவுப் பகுதியில் பலத்த நெரடிவாக்குவாதங்கள் இடம்பெற்றுள்ளது.காலஞ்சென்ற நிமல்ராஜின் கொலையுடன் சம்மந்தப்பட்ட முக்கிய சந்தேக நபர் என்பதும் அண்மையில்நெடுந்தீவு பகுதியில் இளம் பெண் ஒருவரிக் மார்பகத்தை கடித்துத் பிடுங்கினார் என்றும் கொலையாளி மீது மக்கள் முறைப்பாடுகள் செய்துள்ளார்கள்.




No comments:

Post a Comment