
கடந்த மாதம் 29-ந் திகதி முதலமைச்சர் ஜெயலலிதா பிரதமருக்கு கடிதம் எழுதியிருந்தார்.
அதில், தமிழர்களை இனப்படுகொலை செய்து போர்க்குற்றம் புரிந்த இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதனை பொருட்படுத்தி, ஐநாவில் கொண்டுவரப்படும் தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், இன்று (06) மீண்டும் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ள முதலமைச்சர் ஜெயலலிதா, தனது முந்தைய கடிதத்திற்கு, இதுவரை எந்தவொரு பதிலும் இல்லாத நிலையில், இலங்கைக்கு ஆதரவளிக்கும் வகையில் இந்திய பிரதிநிதி பேசிருப்பத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், ஐ.நா. மனித உரிமைக்குழு கூட்டத்தில் கொண்டுவரப்படும் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்திய அரசு ஆதரவளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
இலங்கையை கண்டிக்கும் வகையில் இந்தியா செயல்படும் வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ள முதல்வர், பிரதமரிடமிருந்து சாதகமான பதில் வரும் என எதிர்ப்பார்ப்பதாக கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment