Sunday, March 18, 2012

இலங்கையின் உப மாநாட்டில் எட்டுப் பேர் மட்டுமே பங்கேற்பு பல நாடுகள் புறக்கணிப்பு

United_Nations_Genevaஐ.நா மனித உரிமைகள் சபையில் இலங்கையின் உப மாநாடுகளை, சர்வதேச நாடுகள் பலவும் புறக்கணித்து வருவதாக ஜெனிவாச் செய்திகள் தெரிவிக்கின்றன. நேற்று முன்தினம் இலங்கையினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த உப மாநாட்டில், 8 பேர் மட்டுமே பங்கேற்கும் அளவுக்கு, இலங்கையின் நிலைமை மோசமடைந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.ஐ.நா மனித உரிமைகள் சபையின் பிரதான அமர்வு இடம்பெறும் சமவேளை, உப மாநாடுகள் இடம்பெறு வது வழமையான ஒன்று. இந்நிலையில் அமெரிக்காவினால்
முன்வைக்கப்பட்டுள்ள தீர்மானத்தைத் தோற்கடிக்கும் நோக்கில், இலங்கை அரச தரப்பினரால் ஏற்பாடு செய்யப்பட்டுவரும் உப மாநாடுகள் பலவும், தொடர்ச்சியாகப் பிசுபிசுத்து வருவதாக அறிய முடிகின்றது.
நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை இலங்கையினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த உப மாநாட்டில், 8 பேர் மட்டுமே பங்கேற்றுள்ளதாகத் தெரியவருகிறது. ஜெனீவாவில் முகாமிட்டுள்ள இலங்கை அரச தரப்புக் குழுவினரோடு இணைந்துள்ள, ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஆலோசகரும், நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவ விஜேயசிங்கவினால் இந்த உப மாநாடு நடத்தப்பட்டிருந்தது. டென்மார்க், இந்தியா தவிர்ந்த பிற நாடுகள் பலவும் இந்த உப மாநாட்டைப் புறக்கணித்துள்ளதோடு, இராஜதந்திரிகளையோ அல்லது மனித உரிமை அமைப்பு பிரதிநிதிகளையோ இங்கு காணமுடியவில்லை.
போருக்கு உதவிய அமெரிக்கா போன்ற பல மேற்குலக நாடுகள் தற்போது ஏன் போர்க்குற்றச்சாட்டுக்களைத் தங்கள் மீது சுமத்துகின்றன என இலங்கையின் அரச தரப்பு பிரதிநிதி ரஜீவ விஜேயசிங்க கேள்வியெழுப்பியுள்ளார். அமெரிக்காவின் தீர்மானம், இலங்கையின் இறையாண்மைக்குள் தலையிடுகின்ற விடயமெனவும் ரஜீவ விஜேயசிங்க இங்கு கூறியுள்ளார்.Posted by Nilavan on March 18th, 2012

No comments:

Post a Comment