Sunday, March 18, 2012

இலங்கை இறுதி யுத்தத்தின் போது உண்ணாவிரதம் இருந்து நாடகமாடியவர் கருணாநிதி

இலங்கையில் இறுதியுத்தம் நடைபெற்ற போது 3 மணிநேரம் உண்ணாவிரதம் இருந்து நாடாகமாடியவர் கருணாநிதி என்று பாமக தலைவர் ராமதாஸ் கூறியுள்ளார்.
சென்னை தேவநேயப் பாவாணர் நூலக அரங்கில் பாமக சார்பில் திராவிட மாயை தொடர்பான கருத்தரங்கம் நேற்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பாமக தலைவர் ராமதாஸ் பேசியதாவது, இலங்கையில் இறுதி யுத்தம் நடைபெற்றபோது கருணாநிதி 3 மணி நேரம் உண்ணாவிரதம் இருந்து நாடகமாடினார்.
பின்னர் யுத்தம் இன்னும் முடியவில்லை என்றும் போரில் பலர் படுகொலை செய்யப்படுவதாகவும் கூறியபோது, மழை விட்டும் தூவானம் விட வில்லை என்றார்.
யுத்தம் நடைபெற்றபோது பலமுறை கருணாநிதியைச் சந்தித்து யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர வலியுறுத்தினேன். ஆனால், பிரதமருக்கு கடிதம் எழுதியே மக்களை ஏமாற்றினார்.
இப்போது அண்ணா நூற்றாண்டு நூலகத்துக்காக தீக்குளிக்கப் போவதாக கருணாநிதி கூறியுள்ளார். உண்மையான போராளிகள் யாரும் இப்படிச் சொல்லிக் கொண்டிருக்க மாட்டார்கள் என்று பேசினார்.

No comments:

Post a Comment