Thursday, March 22, 2012

பிரேரணையின் மூன்றாவது சரத்தில் திருத்தம் கொண்டுவர இந்தியா தீவிரம்! அமெரிக்கா வளைந்து கொடுக்குமா ?

-1சிறிலங்கா தொடர்பில் ஐ.நா மனித உரிமைச் சபையில் அமெரிக்காவினால் முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணையின் மூன்றாவது சரத்தில், திருத்தம் கொண்டு கொண்டுவருவதற்கு இந்தியா தீவிரம் காட்டிவருவதாக, இராஜதந்திர வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
திட்டங்களை நடைமுறைப்படுத்தவதற்குரிய ஆலோசனைகளையும், தொழில்நுட்ட உதவிகளையும், ஐ.நா மனித உரிமைகள்

ஆணையகத்தை வழங்குமாறும், சிறிலங்கா அரசாங்கத்தை இதனை ஏற்றுக்கொள்ளுமாறும் வேண்டுவதுடன், இது தொடர்பாக மனித உரிமைகள் ஆணையகத்தின் 22 வது கூட்டத்தொடரில், வழங்கப்பட்ட உதவிகள் தொடர்பான அறிக்கையை சமர்ப்பிக்குமாறும், ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தை வேண்டுதல் என பிரேரணையின் மூன்றாவது சரத்தில் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் இலங்கைத்தீவில் ஒரு சர்வதேச அங்கீகாரத்துடனான ஐ.நாவின் நேரடித் தலையீட்டுக்கு வழிகோலும் இந்த சரத்தினை பலவீனப்படுத்தி, ஐ.நாவின் பாத்திரத்தை இந்தியா வகிகப்பதற்கு இந்தியா தீவிரம் காட்டுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
பிரேரணையில் சில திருத்தங்களுடன் இந்தியா ஆதரிக்கும் என பிரதமர் மன்மோகன் சிங் கூறிய கூற்று, இதனையே கோடிட்டுக்காட்டியதாக அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் இந்தியாவின் மறைமுக இந்த இராஜதந்திர நகர்வுக்கு அமெரிக்கா வளைந்து கொடுக்குமா என்ற கேள்வி பல மட்டங்களில் எழுந்துள்ளது.
பிரேரணயின் உள்ளடக்கில் திருத்தங்களை கொண்டுவருவதற்கு வாய்பில்லையென, அமெரிக்காவின் தெற்காசிய விவகாரங்களுக்கான துணைச்செயலர் றொபேட் ஒ பிளேக் ஏற்கனவே தெரிவித்துள்ளமை இங்கு நினைவு கொள்ளத்தக்கது.
நம்பகமான அமெரிக்க இராஜதந்திரச் செய்திகளின்படி, பிரேரணையில் திருத்தங்களை  கொண்டுவருவதற்குரிய காலங்கடத்துவிட்டது என்பதுக்கு அப்பால், இந்த விடயத்தில் அமெரிக்கா உறுதியாக இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
இருப்பினும் ஐ.நா மனித உரிமைச் சபையில் சிறிலங்கா விவகாரம் வல்லரசு நாடுகளின் சதுரங்க விடயம் மாறிவிட்ட நிலையில், அமெரிக்க -இந்திய பேரங்கள், இந்ந விவகாரத்தில் ஏற்படுத்தப்போகும் விளைவுகள் என்ன என்பது, பிரேரணை தொடர்பிலான வாக்கெடுப்பில் தெரிந்துவிடும் என அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.

No comments:

Post a Comment