Tuesday, March 27, 2012

எல்லா பரிந்துரைகளையும் நடைமுறைப்படுத்த முடியாது – சிறிலங்கா அரசு திட்டவட்டம்

நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை சிறிலங்கா அரசாங்கம் முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ள போதிலும், அதனை முழுமையாக நடைமுறைப்ப்படுத்த முடியாது என்று சிறிலங்கா அரசாங்கம் கூறியுள்ளது.

கொழும்பு ஊடகம் ஒன்றிடம் இது தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள சிறிலங்கா அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா,



“எதிர்க்கட்சிகளின் பங்களிப்பில்லாமல் - இதுபற்றிய கருத்துக்கணிப்பை நடத்தாமல் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கைளை சிறிலங்கா அரசாங்கம் தொடர்ந்து மேற்கொள்ளும்.

அனைத்துலக சமூகம் இவற்றை நடைமுறைப்படுத்துமாறு கேட்க முன்னரே நாம் அவற்றை நடைமுறைப்படுத்த ஆரம்பித்து விட்டோம்.

நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதாக அனைத்துலக அழுத்தங்களுக்குள் சிறிலங்கா விழுந்து விட்டதாகவும், சில கட்சிகளும் குழுக்களும் தவறாக அர்த்தம் கற்பிக்கின்றன.

எதிர்க்கட்சிகள் குழம்பிய குட்டையில் மீன்பிடிக்க முனைகின்றன.

நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதில் அவர்களின் பங்களிப்பை நாம் எதிர்பார்க்கவில்லை.

சிலர் கருத்துக்கணிப்பு நடத்த வேண்டும் என்று பேசுகின்றனர்.

பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த இவை எதுவும் தேவையில்லை.

நல்லிணக்க ஆணைக்குழு எமக்குப் பரிந்துரைத்துள்ள எல்லா பரிந்துரைகளையும் நடைமுறைப்படுத்த சிறிலங்கா அரசாங்கம் தயாராக இல்லை.

எம்மால் ஏற்றுக் கொள்ளதக்க - சாத்தியமான பரிந்துரைகளை மட்டும் சிறிலங்கா அரசாங்கம் நடைமுறைப்படுத்தும்.

இது தொடர்பாக இந்தியாவுக்கோ அல்லது வேறு எந்த நாட்டுக்கோ நாம் பதிலளிக்க வேணடியதில்லை“ என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.[ திங்கட்கிழமை, 26 மார்ச் 2012, 02:02 GMT ] [ தா.அருணாசலம் ]



No comments:

Post a Comment