Tuesday, March 27, 2012

முதல்முறையாக ஐ.நா மற்றும் அனைத்துலக சமூகத்தின் கண்காணிப்பில் சிறிலங்கா - கொழும்பு வாரஇதழ்

சிறிலங்கா முதல்முறையாக ஐ.நா அமைப்பு ஒன்றின் நுணுக்கப் பார்வைக்குள்- அனைத்துலக சமூகத்தின் கண்காணிப்புக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று கருத்து வெளியிட்டுள்ளது.

ஜெனிவாவில் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் சிறிலங்காவுக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் மூலமே இந்தநிலை ஏற்பட்டுள்ளதாக ஆங்கில வாரஇதழ் ஒன்றின் பத்தியில் கூறப்பட்டுள்ளது.



“ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் 19வது கூட்டத்தொடர் முடிந்து விட்டது.

ஆனால் கொழும்பில் பெரும்பாலும் பேரணிகள் நடத்தப்படுகின்றன.

அடுத்து என்ன செய்வது என்று தீர்மானிப்பதற்கு சிறிலங்காவுக்கு ஒரு ஆண்டுகால அவகாசம் உள்ளது.

மக்களின் பெயரிடுதல் மற்றும் இழிவுபடுத்தல்களையும் தாண்டி ஒரு வலுவான மூலோபாயத்தை வகுக்க வேண்டிய பலமான தேவை உள்ளது.

தேசியப் பிரச்சினைகள் தொடர்பாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஒன்றில், தானாக ஒன்றை உருவாக்கிச் செயற்பட வேண்டும் அல்லது எதிர்க்கட்சிகளுடன் கலந்தாலோசித்தாவது செய்ய வேண்டும்.

மக்களை வீதிகளில் இறக்கி பேரணிகள், போராட்டங்களை நடத்துவதன் மூலம் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியால் அடுத்து என்ன செய்ய முடியும் என்ற மிகப்பெரிய கேள்வி உள்ளது.

சிறிலங்கா அரசாங்கம் வெளிப்படையாகப் பேச வேண்டும்.

நாடு தற்போது என்ன நிலையில் உள்ளது என்பதை பொதுமக்களுக்கு கூற வேண்டும்“ என்றும் கொழும்பு ஆங்கில வாரஇதழ் மேலும் கருத்து தெரிவித்துள்ளது.


No comments:

Post a Comment