Tuesday, March 20, 2012

இரத்த வெறியர்களை அச்சுறுத்தும் போர்க்குற்றங்கள்-அக்கினீஸ்வரன்

sl_killing_1_20110704ஆட்சி அதிகாரம் ஆயுத பலம் என்பன இருக்கும் போது சிலருக்கு மனித உயிர்கள் கொல்லப்படுவது ஒரு பொருட்டாகவே படுவதில்லை. கண் முன்னே ஓடும் குருதியாலும், கால்களின் மிதிபடும் மனித தசைத் துண்டங்களும், கதறி ஓலமிடும் மனிதக் குரல்களும் இவர்களின் மனங்களில் மனிதத்தை விறைத்து விடுவதில்லை. அதிகார வெறியும் அழிவும் மட்டுமே அவர்களால் ஆராதிக்கப்படும் அம்சங்களாகின்றன.
ஆனால் காலப்போக்கில் நியாயங்கள் கிளர்ந்தெழும் போது இவர்களின் அதிகாரமும் ஆயுதபலமும் பறிக்கப்படும் போது போரின் குற்றங்கள் பிசாசுகளாக
இவர்களின் கழுத்துக்களை நோக்கிப் படையெடுக்கின்றன. அழிக்கப்பட்ட உயிர்களின் விலையாக மரணமோ அல்லது அதைவிடக் கொடிய தண்டனைகளோ இவர்களைத் தின்று விடுகின்றன.
1982ம் ஆண்டு கௌதமாலாஇ  நிக்கிரக்குவா ஆகிய நாடுகளில் பலம் பெற்றிருந்த தேசிய வாதிகளை ஒடுக்குவதற்கு அமெரிக்க ஆதரவுடன் பெரும் படையெடுப்பு மேற்கொள்ளப்பட்டது. அப்படையெடுப்பின் போது பட்ரோ பமென்டல் என்ற விசேட படையணியின் உயர் அதிகாhரி இரண்டு  நாட்களில் 201 விவசாயிகளைக் கொன்று குவித்தான். தற்சமயம் அவன் மீது போர்க்குற்றம் சுமத்தப்பட்டு விசாரிக்கப்பட்டு அவனுக்கு 6000 வருட சிறைத் தண்டனை வழங்கப்பட்டது. இவன் தொடர்ந்து எத்தனை பிறவிகள் எடுத்தாலும் இத்தண்டனையை அனுபவித்து முடிக்க முடியுமா என்பது சந்தேகமே.
இவ்வாறே கொங்கோவில் 40 வருடத்திற்கு மேல் நிலவிய மொடிப்டுவின் சர்வாதிகார ஆட்சி வீழ்த்தப்பட்டு கபிலா ஆட்சியைக் கைப்பற்றிய போது அவ்வாட்சிக்கு எதிராகப் போராட்டம் நடத்தியவன் நோமாஸ் நுவங்கா. இப்போது அவனும் ஐ.நா. போர்க்குற்ற நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு குற்றங்கள் நிரூபிக்கப்பட்டு தீர்ப்புக்காகக் காத்திருக்கிறான்.
சேர்பிய அதிபர் மிலோசிவிச் பொஸ்பியஇ கொசோவா மக்களைக் கொன்று குவித்த குற்றங்கள் தொடர்பாக விசாரணை நடந்து கொண்டிருக்கும் போதே இறந்து விட்டார். லைபீரிய அதிபர் ரெயிலர் கைது செய்யப்பட்டு போர்க்குற்ற விசாரணைக்கு முன் நிறுத்தப்படவுள்ளார். சூடான் அதிபர் மீது போர்க்குற்றம் சுமத்தப்பட்டாலும் ஒரு நாட்டின் அதிபர் என்ற வகையில் இதுவரை அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இவற்றிலிருந்து நாம் அதிகாரமும் ஆயுத பலமும் உள்ள போது ஒருவர் செய்யும் கொடுமைகளுக்கு விலை கொடுக்க உலகம் காலம் வரும் வரை காத்திருக்கும் என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.
இப்படியான ஒரு சூழ்நிலையில்தான் இலங்கையில் போரின் இறுதி நாட்களில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் மனித குலத்துக்கு விரோதமான நடவடிக்கைகள் என்பன இலங்கை அரசையும் இலங்கையின் அரச படைகளையும் பூதங்களாக எழுந்து பயமுறுத்திக் கொண்டிருக்கின்றன. இதன் ஒரு நாட்டமாக இலங்கை ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் நிபந்தனைகள் ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் நிறைவேற்றப்படுவது தொடர்பாகவும் இ மற்றும் பொறுப்புக் கூறல் இனங்கiளுக்கிடையே நிரந்தர சமாதானத்தை விரிவாக்கல் தொடர்பாகவும் அமெரிக்கா ஐ.நா சபையின் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில் முன்வைத்துள்ளது.
இலங்கை அரசு இப் பிரேரணையை முறியடிக்கப் பெரும் எடுப்பில் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அமைச்சர்கள் இ நாடாளுன்ற உறுப்பினர்கள் இ பிரமுகர்கள் எனப் பல்வேறு மட்;டத்தினரும் பல்வேறு திசைகளிலும் சென்று ஆதரவைத் திரட்ட முயன்று வருகின்றனர். அதேவேளையில் அமெரிக்காவும் தனது பிரேரணையை வெல்ல வைக்க திட்டமிட்ட வகையில் உறுதியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அமெரிக்க விரோதப் போக்குடைய அணிசேரா நாடுகள் மேற்கு நாடுகளின் விரோதப் போக்கைக் கொண்ட சில முஸ்லிம் நாடுகளை அணி திரட்டுவதில் அக்கறை காட்டி வருகிறது. இதைப் போர்க்குற்றங்கள் தொடர்பான பிரச்சினை என்பதை மழுங்கடித்து அமெரிக்க மேலாதிக்கப் போக்குக்கு எதிரான ஒரு போராட்டம் என்பது போன்ற ஒரு தோற்றப்பாட்டை ஏற்படுத்தி இலங்கை ஆதரவு தேடி வருகிறது.
இன்னொரு புறம் இலங்கை இன்னொரு விதமான மிரட்டல் போக்கைக் காட்டி சில சக்திகளை அச்சுறுத்தி வருகிறது.
அண்மையில் ஜாதிக்க ஹெல உறுமயவைச் சேர்ந்த மின்துறை அமைச்சர் சம்பிகரணவக்க அவர்கள் இந்தியா ஜெனிவா கூட்டத் தொடரில் இந்தியா அமெரிக்காவுக்கு ஆதரவு வழங்கினால் ஒரு இனக்கலவரம் ஏற்பட வாய்ப்பு உண்டு என்று தெரிவித்திருக்கிறார். அதேவேளையில் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ச இந்தியா சென்று அங்கு பல அரசியல் பிரமுகர்களையும் சந்தித்து விட்டு வந்தார். அதன் பின்பு மாநிலங்கள் அவையில் உரையாற்றிய இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம் கிருஷ;ணா அவர்கள் ஜெனிவாவில் இந்தியா எடுக்கும் நிலைப்பாடு இந்தியா இலங்கைக்கிடையேயான நீண்ட காலத் தொடர்பின் அடிப்படையிலும் இலங்கை அரசு தமிழர் தரப்புடன் நடத்தும் பேச்சுக்களுக்கு இடையூறு அற்ற வகையிலும் இலங்கையின் தேசிய நல்லிணக்கத்துக்கு ஊறு விளைவிக்காத வகையிலுமே அமையும் எனத் தெரிவித்திருக்கிறார்.
அண்மையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை அழைத்துப் பேச்சுக்களை நடத்தினார். நாடாளுமன்றத் தெரிவுக் குழுவில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இணைய வேண்டும் என ஜனாதிபதி கேட்டுக் கொண்டதாகவும் தான் அதை மறுத்து விட்டதாகவும் இரா.சம்பந்தன் தெரிவித்திருக்கிறார். ஆனால் ஓரிரு தினங்களில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஜெனிவா கூட்டத் தொடரில் கலந்து கொள்வதில்லை என்ற முடிவை வெளியிட்டு விடுத்த அறிக்கையில் இனங்கiளுக்கிடையேயான பதற்றத்தை அதிகரிக்காமல் இருக்கவும் வன்முறைகள் வெடிப்பதைத் தவிர்க்கவுமே அம்முடிவு எடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. ஜனாதிபதிக்கும் இரா.சம்பந்தனுக்கும் இடையே இடம்பெற்ற பேச்சுக்களின் போது ஜெனிவா மாநாட்டில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கலந்து கொண்டால் தமிழ் மக்கள் மீதான வன்முறை வெடிக்கும் என மஹிந்த ராஜபக்ச அவர்கள் மிரட்டியுள்ளார் என்பதை வெகு சுலபமாகவே அரசியல் அவதானிகள் புரிந்து கொண்டனர்.
அமைச்சர் சம்பிக ரணவக்கஇ கோத்தபாய ராஜபக்சஇ மஹிந்;த ராஜபக்ச ஆகியோர் வௌ;வேறு இடங்களில் வௌ;வேறு மொழிகளில் பேசிக் கொண்டாலும் ஒரே செய்தி சொல்லப்பட்டது. தமிழர் தரப்போ அல்லது இந்தியாவோ அமெரிக்கப் பிரேரணைக்கு எதிராகச் செயற்பட்டால் தமிழ் மக்களுக்கு எதிராக வன்முறைகள் வெடிக்கும் இ நல்லிணக்க முயற்சிகள் கைவிடப்படும்.
அதாவது ஒருவிதமான மிரட்டல் பாணி முயற்சி.
ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக் கூட்டத் தொடரில் தமிழ் மக்களுக்கு எதிராக ஏவி விடப்பட்ட இன வன்முறைகளுக்கு எதிராக குரலெழுப்பினால் வன்முறை வெடிக்கும் என நாம் மிரட்டப்பட்டால் ஆட்சியாளர் செய்யும் சகல கொடுமைகளையும் சகித்து வாழ சபிக்கப்பட்டவர்கள் என்றல்லவா அர்த்தம்.
இலங்கை அரசு போர்க்குற்றங்களிலிருந்து தப்ப மிரட்டல் மூலம் எம்மையும் எம்மை வைத்து இந்தியாவையும் பகடைக்காய்களாகப் பயன்படுத்த முனைகிறது. இதை இந்தியக் கொள்கை வகுப்பாளர்கள் புரிய மாட்டார்கள் என்று அர்த்தமல்ல. ஆனால் சில பிராந்திய நலன்களின் அடிப்படையில் இலங்கை அரசைத் திருப்திப்படுத்த அவர்கள் எடுக்கும் முயற்சியில் ஒரு பகுதியாகவும் இருக்கும்.
அமெரிக்கத் தீர்மானத்திற்கு ஆதரவு வழங்கினால் இனக் கலவரம் வெடிக்கும் என அரச தரப்பினரால் வௌ;வேறு முனைகளில் வௌ;வேறு வடிவங்களில் விடுக்கப்படும் மிரட்டல்கள் மூலம் இலங்கை அரசின் சுயரூபம் மறுபக்கத்தில் வெளிப்படுகின்றது. அதாவது ஏற்கனவே இடம்பெற்ற இன அழிப்பை அம்பலப்படுத்தவும் அது தொடர்பான உண்மைகளை வெளிப்படுத்தி உரிய பதில் நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் எடுக்கப்படும் முயற்சிகளை இன்னுமொரு இன அழிப்பு நடவடிக்கை மிரட்டல் மூலம் முறியடிக்க இலங்கை அரசு முயல்கிறது. இது இலங்கை அரசு தனது இன ஒடுக்குமுறை நடவடிக்கையிலிருந்து சற்றும் கீழிறங்கத் தயாரில்லை என்பதை அப்பட்டமாகவே வெளிப்படுத்தி நிற்கிறது.
அதே வேளையில் இன்னொரு புறம் மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க நாம் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாக மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரில் தெரிவத்திருந்தார். அதாவது இறுதிப் போரில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பாக விசாரணை நடத்;த இராணுவத் தளபதி லெப் கேணல் ஜெநந் ஜெயசூரியா இராணுவ அதிகாரிகள் கொண்ட ஒரு குழுவை நியமித்திருந்தார். இப்போது இராணுவத்தினர் எவ்வித குற்றங்களிலிம் ஈடுபடவில்லை எனவும் படையினர் மீது சுமத்தப்பட்ட குற்றங்கள் ஆதாரமற்றவை என விசாரணைகள் மூலம் தெரிய வந்துள்ளதாகவும் இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.
நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை இவர்கள் என்றுமே நியாய பூர்வமாக நடைமுறைப்படுத்த மாட்டார்கள் என்பதற்கு இது ஒரு நல்ல உதாரணமாகும். அடிப்படையில் இந்த இராணுவ அதிகாரிகள் கொண்ட விசாரணைக்குழு அமைக்கப்பட்டமை கூட சர்வதேச நாடுகளை ஏமாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட கபட நாடகம் என்பது தெளிவாகவே புலனாகிறது.
இன்று இலங்கை அரசு தன்னை நோக்கி எழுச்சி பெறும் போர்க் குற்றங்களிலிருந்து தப்ப அமெரிக்க எதிர்ப்பு கோசம்இ ஏகாதிபத்திய எதிர்ப்பு ஓலமஇ; முஸ்லிம் அடிப்படை வாத நோக்கம் கொண்டவர்களுடன் ஐக்கியம் இ மிரட்டல் நடவடிக்கைகள் இ ஏமாற்று வித்தைகள் எனப் பல்வேறு முனைகளிலும் முயற்சிகளை எடுத்து வருகிறது.
இன்று நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நேர்மையாக நடைமுறைப்படுத்துமாறு அழுத்தம் கொடுக்கும் ஒரு தீர்மானமே ஜெனிவாவில் கொண்டு வரப்படவுள்ளது. அதற்கான ஒரு கால அவகாசமும் வழங்கப்படும் எனத் தெரியவருகிறது.
ஆனால் நிச்சயமாக இவ்விசாரணைகளை நேர்மையாக நடத்தி மேற்படி பரிந்துரைகளை அரசு நடைமுறைப்படுத்தப் போவதில்லை. ஏனெனில் போரின் இறுதி நாட்களில் இடம்பெற்ற சம்பவங்கள் நேர்மையாக வெளிக்கொண்டு வரப்படுமானால் இன்று உயர் அதிகாரத்தில் வீற்றிருப்பவர்கள் பலர் போர்க் குற்றங்களுக்கு இடம்கொடுக்க வேண்டி வரும்.
இது இலங்கை அரசைச் சர்வதேச அளவில் தனிமைப்படுத்தும் ஒரு சூழ்நிலையைத் தோற்றுவிக்கும்.
எனவேதான் எல்லா இரத்த வெறியாளர்களையும் போன்றே இலங்கை அரசும் போர்க் குற்றங்கள் தொடர்பாகப் பேரச்சம் கொண்டு அதிலிருந்து தப்ப வழிகளைக் கையாண்டு வருகிறது.
ஆனால் காலம் மனித குலத்துக்கு விரோதமான குற்றவாளிகளைத் தப்ப விடுவதில்லை என்பது வரலாறு.
-அக்கினீஸ்வரன்

நன்றி கனடா ஈழமுரசு

No comments:

Post a Comment