Tuesday, March 20, 2012

கொல்ல முடியாத இறந்தோரின் ஆவிகள்- நீலவண்ணன்-

2229973013_a1d98a85e7கடந்த காலத்தை மனதினில் ஆழப் புதைத்துவிடுங்கள். முன்றாண்டுகளுக்கு முன்பாக உள்நாட்டு யுத்தத்தின் இறுதி நாட்களில் கொல்லப்பட்டவர்கள் எவருமே ஒருபோதும் திரும்பி உயிருடன் வரப்போவதில்லை. வெளிநாட்டவர்களினதும் எமது உள்நாட்டவர்களினதும் விமர்சனங்கள் நாட்டில் சிதைவுகளையே ஏற்படுத்தும். உணர்வுள்ள எந்த ஒரு பிரஜையும் நாட்டு மக்கள் அடைந்த அனுகூலத்தினையே உணர்ந்து கொள்வர். இன்று கொலையென்பதே இல்லை. நாடு அமைதியாக இருக்கின்றது. இங்கு மக்கள் சுதந்திரமாக உள்ளனர். இவ்வாறு வாதிடுகிறார்
சிறீலங்காவின் சக்திமிக்க எதிர்த்து நிற்கும் ஆற்றல் வாய்ந்த பாதுகாப்புச் செயலாளரும் ஜனாதிபதியின் சகோதரருமான கோத்தபாய ராஜபக்ச.
ஆனால் 2009 இன் இறுதி யுத்தத்தின் பின்னரான காலத்திலிருந்து இப்பொழுதுதான் முதல் தடவையாக சிறீலங்கா அரசுக்கு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையிடமிருந்து சிறீலங்கா அரசு புரிந்த செயல்களுக்கான பதிலளிப்பதற்குக்கு கடும் அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்நெருக்கடியிலிருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்காக அரச தரப்பு அரும்பாடுபடுகின்றது. மகிந்தவே ஐ.நா.வில் உறுப்புரிமையுள்ள சில நாடுகளுடன் நேரில் தொடர்பு கொண்டும் சில நாடுகளுக்கு வெளியுறவு அமைச்சர் ஜி.எல்.பீரிசையும் இன்னும் ஒருசில அமைச்சர்களைத் தனது தூதர்களாக அனுப்பி ஆதரவைத் தேடும் அயராத கடும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இத்தருணத்தில் கூட அரசாங்கம் சற்றேனும் பச்சாதாபமற்ற, இரக்கமற்ற விதத்திலேயே அறிக்கைகளை விடுக்கின்றது. ராஜபக்ச நிர்வாண நிலையில் கைதிகளை இராணுவத்தினர் அதிகார பூர்வமாகக் கொலை செய்யும் சம்பவங்களைச் சித்தரிக்கும் படத்தொகுதியைப் போலியானது என நிராகரிக்கின்றார். அத்துடன் நின்று விடாது சிறைப்பிடிக்கப்பட்டவர்களையோ அல்லது பொதுமக்களையோ கொலை செய்யும்படி தான் கட்டளையிடவில்லை. முடிந்தால் நிரூபியுங்கள் என மார்தட்டுகிறார்.
போரின் இறுதிக் கட்டத்தில் பொதுமக்கள்இ கைதிகள் அநியாயமாகக் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டது. எவராலும் மறைக்கவோ அன்றி மறுக்கவோ முடியாத  தெட்டத்தெளிவான உண்மை.
கோத்தபாய ராஜபக்ச இதேவகையில் இதனைத் திரும்பத் திரும்ப மறுத்த வண்ணமேயுள்ளார். இப்பிணக்கிற்குக் கற்றுக் கொண்ட பாடங்களும் மற்றும் நல்லிணக்கத்திற்கான ஆணைக்குழுவின் (டுடுசுஊ) அறிக்கையின் முடிவு தீர்மானிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. அவ்வறிக்கையும் வெளிவந்துவிட்டது. ஆணைக்குழுவின் சில முன் மொழிவுகள் சிறப்பானவை என்கிறார் ராஜபக்ச.
இதேவேளையில் ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கையில் இலங்கை அரசு மீது பாரதூரமான குற்றச்சாட்டுக்கள் உள்ளடங்கிருந்தன. போர்க் குற்றச்சாட்டுகள் குறித்து சர்வதேச தரத்திலான விசாரணை எதனையும் நடத்துவதற்கு இடமளிக்க விரும்பாத நிலையில் உலக நாடுகளின் அழுத்தத்தைத் தவிர்ப்பதற்காக அல்லது குறைப்பதற்காக நல்லிணக்க ஆணைக்குழுவைக் கடந்த 2010ஆம் ஆண்டு மே மாதம் 15ஆம் திகதியன்று நியமித்தது.
அதேவேளையில் நல்லிணக்க ஆணைக்குழுவின் விசாரணைக் காலத்தையும் பொறிமுறையையும் மாற்றி அதனைச் சமாளித்துவிடலாம் என்ற தந்திரத்தையும் கையிலெடுத்தது அரசு.
பின்பு அண்மையில் நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபாரிசுகளையாவது அரசாங்கம் அமுல்படுத்த முயற்சிக்கும் என மேற்குலகம் எதிர்பார்த்தது. அவ்வறிக்கையின் சிபாரிசுகளிற் சில. தேசிய கீதம் தமிழில் பாடுவதை அனுமதித்தல்இ பத்திரிகைச் சுதந்திரத்தை உறுதி செய்தல்இ மக்களைக் கட்டுப்படுத்தலில் இராணுவத்தினரின் இறுக்கமான பிடியைத் தளர்த்தி அப்பொறுப்பினைப் பொலிசாரின் வசம் விடுதல்இ தமிழர்களுக்குத் தொல்லை கொடுக்கும் துணைப்படைக் குழுக்களின் மீது தடுப்பு நடவடிக்கை எடுத்தல்இ காணிப் பிணக்குகளைத் தீர்த்துவைத்தல்இ படைவீரர்களினால் தனிப்பட்ட வகையில் செய்யப்படும் குற்றச் செயல்களுக்கு குறைந்த பட்சமாக நடவடிக்கைகளையாவது எடுத்தல் என்பனவே அவையாகும்.
‘மக்கள் அனைவரும் நாட்டில் முன்னெப்பொழுதும் இல்லாதவாறு பயப்பிராந்தியில் உள்ளனர்’ எனப் புலம்புகிறார். முன்னாள் வெளியுறவு அமைச்சரும் பின்னாளில் கட்சிதாவி எதிர்க்கட்சியிலிருப்பவருமான மங்கள சமரவீர. மேலும்இ தனது குடும்ப உறவினர் ஒருவர் எவ்விதம் பாதுகாப்புச் செயலாளரின் நெருங்கிய சகாவினால் தேர்தல் பிரச்சார வேளையில் சுட்டுக் கொல்லப்பட்டார் எனும் கசப்பான உண்மையையும் விவரித்தார்.
இவற்றிற்கப்பால் கடந்த சில மாதங்களாக ஆட்கடத்தல்களஇ; சித்திரவதைகள் மற்றும் காணாமற்போதல்கள் என்பன வெள்ளை வானில் வரும் அநாமதேயக் குண்டர்களினால் அரங்கேறியவண்ணமுள்ளன.
தமிழர்கள் மத்தியில் குறைந்த பட்சமான சமாதானம் சுதந்திரம் என்பனவே. அதுவும் மிக அரிதாகவே உள்ளன. இதனாலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மூத்த தலைவரான திரு.இ.சம்பந்தன் அவர்களும் இனங்களுக்கிடையேயான நல்லிணக்கம் குறித்து ஏளனமே செய்கின்றார். அத்துடன் பெருமளவிலான புதைகுழிகள் வடக்கிலுள்ள உயர் பாதுகாப்பு வலயங்களுக்குள் தெரியாதவாறு மூடி மறைக்கப்பட்டுவிட்டன.
இதைவிட வடக்கு கிழக்கிலுள்ள விதவைகள் தாய் தந்தை இருவரையுமிழந்து அனாதைகளாக்கப்பட்ட சிறுவர்கள் என்போரிடமிருந்து பெறப்பட்ட தகவல்கள் இறுதிப் போரின் போதும் அதன் பின்னரும் கூடப் படையினரால் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 10000ற்கும் அதிகமென்பதற்கு அத்தாட்சியாக விளங்குகின்றன. அதுமட்டுமா? சரணடைந்த தமிழ்ப் போராளிகளில் 1000ற்கும் மேலானோர் காணாமற் போயுள்ளனர். இன்றுவரை அதுகுறித்து எந்த விபரமும் அரசினால் விடுக்கப்படவில்லை.
இந்நிலையிற் கூட ஜெனீவா இப்பிரச்சினைக்குள் மூக்கை நுழைப்பதற்கு எந்த ஒரு அலுவலும் இல்லை என்பதே சிறீலங்காவின் நிலைப்பாடாக இருக்கின்றது. இதனை உறுதி செய்யும் வகையிலேயே ஜனாதிபதி அவரின் சகோதரர்கள் மற்றும் அரச தரப்பு அமைச்சர்களினால் ஊடகங்களுக்கு விடுக்கப்படும் தகவல்கள் அமைந்துள்ளன.
ஆணவமும் அகங்காரமும் அதிகார மமதையும் ஆட்சித் தரப்பினரின் மத்தியில் தலைவிரித்துத் தாண்டவமாடுகின்றன.
கியூபாஇ பாகிஸ்தான் இ ரஷ;யாஇ அல்ஜீரியா மற்றும் சீனா அமெரிக்காவின் தீர்மானத்திற்கு எதிராகவும் இலங்கைக்கு சார்பாகவும் விமர்சித்தவண்ணமுள்ளன.
ஜனாதிபதியின் சகோதரரும் முன்னணி அமைச்சர்களில் ஒருவருமான பசில் ராஜபக்ச வெளியாரின் தலையீடே இறுக்க நிலையினை ஏற்படுத்தக் காரணமாக அமைந்துள்ளது எனத் தெரிவிக்கிறார். அத்துடன் கண்டனங்கள் அதனை மேலும் கலக்கமுற வைக்கின்றதெனக் கூறுவதோடு நெருக்கு வாரம் கொடுத்திருக்காவிட்டால் நல்லிணக்கத்திற்காக இன்னும் அதிகமாகச் செய்திருக்கக் கூடும் எனவும் அங்கலாய்க்கிறார்.
அமெரிக்கர்களும் மற்றும் ஐரோப்பியர்களும் சிறீலங்கா அரசு நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையினைப் பொறுப்பெடுத்து அமுல்படுத்தும் என்பதனை நம்பத் தயாரான நிலையிலில்லை. ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் அவர்களால் இது குறித்து பூர்வாங்க விசாரணை ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அடுத்த வருடம் கொழும்பில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் தலைவர்களின் கூட்டத்தில் இத்தகைய தொடர் வருகையிலான வசைபாடல்கள் தம்மைத் திகைப்பில் ஆழ்த்திவிடுமோவெனும் மனக்கலக்கமுற்ற நிலையில் ராஜபக்ச சகோதரர்கள் உள்ளனர்.
இவற்றிற்கெல்லாம் லாவகமாகக் கையாளக்கூடிய ஒரே வழி உண்டு. ராஜபக்சாக்கள் பொருத்தமான நல்லிணக்க முயற்சிகளையும் ஜனநாயகத்தை வலிமையாக்கக் கூடிய செயற்பாடுகளையும் செய்து காட்டுதலேயாகும். இதனாலேயே போரின் இறுதியில் நடந்தேறிய கொடூரங்களை வெளியார் கதைப்பதைத் தவிர்க்க முடியும்.
- நீலவண்ணன்-Posted by SankathiWPadmin on March 20th, 2012

No comments:

Post a Comment