சிறிலங்கா தொடர்பில் சர்வதேச சுயாதீன விசாரரணையின் அவசியத்தை வட தமிழீழத்தின் கத்தோலிக்க சபையின் 31 குருவினர் ஐ.நா மனித உரிமைச் சபைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஐ.நா மனித உரிமைச் சபையில் சிறிலங்கா தொடர்பில் கொண்டுவரப்படவுள்ள பிரேரணையை வரவேற்று அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே இதனை குருமார்கள் வலியுறுத்தியுள்ளனர்.
மேலும் அக்கடித்தில் தாமதமானாலும் தேவையானது என்று ஐ.நா மனித உரிமைச் சபைக்கு புகழாரம் சூட்டியிருக்கிறார்கள்.
போரின்போதும், முன்னும், பின்னும் அந்தப் பகுதி மக்கள் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், உள்நாட்டு வெளிநாட்டு முன்னேற்றங்களை, அவர்களுக்கு இந்த விடையத்தில் உதவும் பொருட்டு, தாங்கள் தொடர்ந்து அவதானித்து வந்ததாகவும் குறிப்பிட்டிருக்கிறார்கள்.
இலங்கையில் உண்மையான சமரசத்தை அடையும் பொருட்டு ஐ.நா மனித உரிமைச் சபையானது, திடமான முடிவுகளை இந்த அமர்வில் எடுக்கவேண்டும் என்று கேட்டிருக்கிறார்கள்.
குற்றச்சாட்டுக்களின் பாரதூரத்தையும், இலங்கை தொடர்ந்து மறுப்பு கூறுவதை தவிர அதைச் சரிசெய்ய முன்வராமையையும் வைத்துப்பார்த்தால் இதில் சுயாதீன சரவதேச விசாரணை முக்கியமானதாகிறது என்று விளக்கியிருக்கிறார்கள்.
நல்லிணக்க ஆணைகுழு, உண்மை காணுதலிலும், பொறுப்பு கூறலிலும் முறையான விசாரணையை நடத்தாவிட்டாலும் சில சமரசம் காணக்கூடிய வழிமுறைகளை பரிந்துரைத்திருக்கிறது. மேலும் ஒரு வருடத்திற்கு முன்னர் இடைக்கால அறிக்கை ஒன்றையையும் வெளியிட்டிருந்தது. ஆனால் இதுவரையும் எதுவும் செயற்படுத்தப்படவில்லை. எனவே, சிறிலஙகாவினை, நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை குறுகியகாலத்தில் செயல்ப்படுத்த வைக்கவேண்டுமென்றும், வருகிற அமர்வுகளில் ஒரு சர்வதேசப் பொறிமுறையை அமைத்து நியாயமான விசாரணை ஒன்று நடாத்தப்பட வேண்டும் என்றும், ஐ.நா மனித உரிமை சபைக்கு அனுப்பி வைத்துள்ள கடித்தத்தில் கேட்டிருக்கிறார்கள்.
இக்கடித்தில் ஒப்பமிட்டவர்கள் :
1. Most Rev. Rayappu Joseph, Bishop of Mannar, Pattim, Mannar, Sri Lanka. 2. Rev. Fr. Kirubaharan, SFXS, Columbuthurai. 3. Rev. Fr. Mangalarajah, SFXS, Columbuthurai. 4. Rev. Fr. Jeyabalan Croos, Vankalai. 5. Rev. Fr. R. Augustin, Nanaatan. 6. Rev. Fr. L. Gnanathicam, Vanchiyankulam. 7. Rev. Fr. S. Thavaraja, Vankalai. 8. Rev. Fr. T. Raviraj, SFXS, Columbuthurai.. 9. Rev. Fr. I. P. Thayaparan, SFXS, Columbuthurai. 10. Rev. Fr. Iruthayathas, SFXS, Columbuthurai. 11. Rev. Fr. A. Jeyaseelan, SFXS, Columbuthurai. 12. Rev. Fr. Paul Rohan. SFXS, Columbuthurai. 13. Rev. Fr. Chandran, SFXS, Columbuthurai. 14. Rev. Fr. Luis Ponniah, SFXS, Columbuthurai. 15. Rev. Fr. Mary Joseph, SFXS, Columbuthurai. 16. Rev. Fr. Anthonimuththu, Scolasticate, Columbuthurai. 17. Rev. Fr. M. Pathinathar, Mirusuvil. 18. Rev. Fr. Anpurasa OMI, Juniarate, Columbuthurai. 19. Rev. Fr. M.V.E. Ravichandran, Catechetical Centre, Jaffna. 20. Rev. Fr. R.C.X. Nesarajah, Gurunagar. 21. Rev. Fr. S.M. P. Ananthakumar, Mathagal. 22. Rev. Fr. A.C. Christopher, Chundikuli. 23. Rev. Fr. A. Augustine, Satkoddai. 24. Rev. Fr. A.J. Yavis, Kilinochchi. 25. Rev. Fr. S Arudchelvan, Iranaipalai. 26. Rev. Fr. James Pathinathar, Vavunikulam. 27. Rev. Fr. Leo Armstrong, Pungudutheevu. 28. Rev. Fr. C. J. Jeyakumar, Kayts. 29. Rev. Fr. Gerad Rosairo OMI, Colombo. 30. Rev. Fr. S.J.Q. Jeyaranjan, Ilavalai. 31. Rev. Fr. S. A. George, Catechetical Centre, Jaffna.
No comments:
Post a Comment