Wednesday, March 21, 2012

ஜெனிவா தீர்மானம் எப்படி இருந்தாலும் இந்தியா ஆதரிக்கும் – மன்மோகன்சிங் மீண்டும் உறுதி

PM Manmohan Singhஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில், சிறிலங்கா தொடர்பாக அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானம், எப்படியிருந்தாலும் அதனை இந்தியா ஆதரிக்கும் என்று இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் மீண்டும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். 
இந்திய குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நாடாளுமன்றமேலவையில் இன்று பதில் உரை நிகழ்த்திய போதே இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் இவ்வாறு கூறியுள்ளார். 
“சிறிலங்காவில் வாழும் தமிழர்களின் நலனுக்காக, இந்திய அரசு பல்வேறு வழிகளிலும் உதவிகளை செய்துள்ளது. மேலும் செய்து கொண்டும் வருகிறது.
தமிழர்களுக்கு எதிரான நடவடிக்கைகளில், சிறிலங்கா அரசு இனி ஈடுபடாது என்று இந்தியா எதிர்பார்க்கிறது. 

ஜெனிவாவில் நடக்கும் ஐ.நா. மனிதஉரிமைகள் பேரவைக் கூட்டத்தில், கொண்டு வரப்பட்டுள்ள தீர்மானத்தைப் பொறுத்தவரை, அதில் இடம் பெற்றுள்ள விபரங்கள் முழுமையாகத் தெரியவில்லை.
எப்படி இருப்பினும், தீர்மானத்தை ஆதரிப்போம் என இந்த அவைக்கு உறுதியளிக்கிறேன்“ என்று அவர் குறிப்பிட்டார்.
அதேவேளை, சிறிலங்கா தமிழர் விவகாரம் குறித்து இந்தியப் பிரதமரின் பதில் தங்களுக்கு திருப்தியளிக்கவில்லை என்று மைத்ரேயன் தலைமையில் அ.தி.மு.க. உறுப்பினர்கள் முழக்கத்தில் ஈடுபட்டதால், அவையில் பெரும்பரபரப்பு ஏற்பட்டது.

No comments:

Post a Comment