Saturday, March 24, 2012

தமிழகத்தில் உள்ள இலங்கை தமிழ் அகதிகளின் மேம்பாட்டிற்காக மேலும் பல புதிய திட்டங்களை முதலமைச்சர் ஜெயலலிதா இன்று அறிவித்துள்ளார்.

இதன்படி கல்லூரிகளில் இளங்கலை அதாவது B.A பயிலும் இலங்கைத் தமிழ் மாணவ மாணவியருக்கு ஆண்டு ஒன்றுக்கு, ஆயிரத்து 200 ரூபாயும் B.Sc படிப்பவர்களுக்கு ஆயிரத்து 250 ரூபாயும் ஊக்கத் தொகையாக வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார். இதேபோன்று M.A படிக்கும் இலங்கைத் தமிழ் மாணவ மாணவியருக்கு ஆயிரத்து 330 ரூபாயும் M.Sc படிப்பவர்களுக்கு ஆயிரத்து 650 ரூபாயும் டிப்ளமோ படித்தால் 850 ரூபாயும் வழங்கப்படும். பொறியியல் படிக்கும் இலங்கைத் தமிழ் மாணவ
மாணவியருக்கு 2 ஆயிரத்து 750 ரூபாயும் மருத்துவம் பயிலுவோர்க்கு 4ஆயிரத்து 700 ரூபாயும் கால்நடை மருத்துவம் படிப்பவர்களுக்கு ஆயிரத்து 400 ரூபாயும் வழங்க முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். மேலும் சட்டம் படிக்கும் இலங்கைத் தமிழ் மாணவ மாணவியருக்கு 860 ரூபாய் மற்றும் வேளாண்மை அறிவியல் பயில்வோர்க்கு 2 ஆயிரத்து 850 ரூபாய் ஊக்கத் தொகையாக வழங்கவும் அவர் உத்தரவிட்டுள்ளார். இதன்மூலம் ஆயிரம் இலங்கைத் தமிழ் மாணவ மாணவியர் பயன் பெறுவர் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.இதேபோன்று இலங்கைத் தமிழர் முகாம்களில் உள்ள மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு தலா 10ஆயிரம் ரூபாய் ஒரு தடவை மானியமாக வழங்கவும் முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.மேலும் முகாம்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த 25 கோடி ரூபாயும் நிதி ஒதுக்கீடு செய்துள்ள தமிழக அரசு, முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் முகாம்களில் உள்ள இலங்கைத் தமிழர்களுக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. 24-03-2012 அன்று வெளியிட்டது

No comments:

Post a Comment