Wednesday, March 14, 2012

ராஜபக்ஸவின் மூதாதையர்கள் மலேசியாவில் இருந்து கூலித் தொழிலாளர்களாக டச்சுக்காரர்களால் இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட அடிமைகள் - பிரபல சிங்கள ஊடகவியலாளர்



ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் மூதாதையர்கள் மலேசியாவில் இருந்து கூலித் தொழிலாளர்களாக டச்சுக்காரர்களால் இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட அடிமைகள் ஆவர் என்று அடித்துக் கூறுகின்றார் பிரபல சிங்கள ஊடகவியலாளர்களில் ஒருவரான துஸி ரணதுங்க.இவர் மஹிந்த ராஜபக்ஸவின் மூதாதையர்கள் குறித்து வெளியிட்டு இருக்கின்ற தகவல்கள் அதிர்ச்சி தருபவையாகவும், சுவாரஷியமானவையாகவும் இருக்கின்றன.

துஸி ரணதுங்கவின் கருத்துக்கள் வருமாறு:-

-மஹிந்தரின் மூதாதையர்கள் மலே அடிமைகள். டச்சுக்காரர்களால் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டவர்கள். சம்பாந்தோட்டம் ( அம்பாந்தோட்டை ) என்கிற இடத்தில் குடியமர்த்தப்பட்டார்கள்.

19 நூற்றாண்டில் பிரித்தானியர்களின் உளவாளியாக மஹிந்த ராஜபக்ஸவின் மூதாதையர் ஒருவர் செயல்பட்டு இருக்கின்றார். இவர் ராஜபக்ஸ என்கிற பெயரை கொண்டு இருந்தவர். அம்பாந்தோட்டையில் பிரித்தானியர்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட வந்த போராட்டத்தை காட்டிக் கொடுத்து இருக்கின்றார். மஹிந்தரின் இம்மூதாதையர் வழங்கிய தகவல்களை அடுத்துத்தான் கரவ முதலியார் அமதோரு உட்பட பல தலைவர்கள் பிரித்தானியர்களால் கைது செய்யப்பட்டு இருக்கின்றனர்.

இந்த உளவாளிக்கு பிரித்தானிய அரசு பரிசுகள் வழங்கி நன்றிக் கடன் செலுத்தியது. ஆராய்ச்சிகளில் ஒருவராக இவரை நியமித்தது. அத்துடன் ஹுங்கம என்கிற இடத்தில் 600 ஏக்கர் நிலத்தை அன்பளிப்பாக வழங்கியது. இக்காணியின் பெயர் Degampotha என்பது.

ஆனால் நிதித் தேவைகள் காரணமாக மஹிந்தரின் மூதாதையர்கள் இந்நிலத்தை மெல்ல மெல்ல நாளடைவில் விற்று விட்டனர்.

ஆனால் காலப் போக்கில் கொவிகம என்கிற அடையாளப் பெயரை உரித்தாக்கி கொண்டது ராஜபக்ஸ வம்சம். டி. எஸ். சேனநாயக்க மற்றும் ஏனைய அரசியல் குடும்பத்தை சேர்ந்தவர்களை போன்று காட்டிக் கொண்டது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் உடலில் ஓடுவது தூய சிங்கள இரத்தம் அல்ல. மலே கலப்பு இரத்தம். அடிமைகளின் இரத்தம். காட்டிக் கொடுத்தவர்களின் இரத்தம்.-

No comments:

Post a Comment