Wednesday, March 14, 2012

கோத்தபாயவின் வெள்ளை வேன் தரப்பினரை சிறைபிடித்த பிரதேச மக்கள் !


கொலன்னாவ நகர சபைத் தலைவர் ரவீந்திர உதேஷாந்வைக் கடத்திச் செல்ல முயற்சித்த வெள்ளை வேன் குழுவின் கொலைக்காரர்கள் நால்வரையும் மீட்டுக்கொள்வதற்கு பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்�ஷவின் பிரத்தியேக செயலாளர் லெப்டின் கேர்ணல் நிவுன்ஹெல்ல சிவில் உடையில் களமிறக்கப்பட்டுள்ளார். கொலன்னாவ நகர சபைத் தலைவரைக் கொலை செய்வதற்கு வந்த வெள்ளை வேன் குழுவினரை அப்பிரதேச பொதுமக்கள் மடக்கிப் பிடித்து, வெல்லப்பிட்டிய பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். எனினும், இவர்களை உடனடியாக விடுவிக்குமாறு உயர் தரப்பினரிடமிருந்து தொடர்ச்சியான அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டுள்ளன.


இருந்தபோதிலும், இந்தச் சம்பவம் தொடர்பாக நீதி வழங்கப்பட வேண்டும் எனக் கோரி பிரதேச மக்கள் மாலை வரை பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்டிருந்தனர். நிலைமையை சுதாரித்துக் கொண்ட பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, சந்தேக நபர்களை உடனடியாக விடுவிக்க முடியாது என உயர் அதிகாரிகளுக்கு விளக்கமளித்துள்ளார். இதனையடுத்து சிவில் உடையில் களமிறங்கிய கோதபாய ராஜபக்�ஷவின் பிரத்தியேக செயலாளரான இராணுவ அதிகாரி வெல்லம்பிட்டிய பொலிஸ் நிலையத்திற்கு சென்று நிலையப் பொறுப்பதிகாரியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

இந்தச் சந்தர்ப்பத்தில் பொலிஸ் நிலையத்திற்கு அருகிலிருந்த கொழும்பு ரோயல் கல்லூரியின் பழைய மாணவர் ஒருவர், இராணுவ நிவுன்ஹெல்லவை அடையாளம் கண்டுள்ளார். இதனை அறிந்துகொண்ட இராணுவ அதிகாரி அந்த இடத்திலிருந்து உடனடியாக விலகிச் சென்றுள்ளார். இதன்பின்னர் கோதபாய ராஜபக்�ஷவின் உத்தரவிற்கமைய சிறைபிடிக்கப்பட்ட இராணுவ அதிகாரிகளை விடுவித்துக் கொள்வதற்காக கொழும்புப் பிராந்திய பிரதி பொலிஸ் மா அதிபர் அநுர சேனாநாயக்க வெல்லம்பிட்டிய பொலிஸ் நிலையத்திற்கு விரைந்துள்ளார். அத்துடன், எவ்விதப் பதிவும் மேற்கொள்ளாது குறித்த நான்கு அதிகாரிகளையும், பொலிஸ்மா அதிபர் அழைத்துச் சென்றுள்ளார்.

பாதுகாப்பு அமைச்சினால் பிறப்பக்கப்பட்ட உத்தரவை உடனடியாக அமுல்படுத்தவில்லை என்ற குற்றத்திற்காக வெல்லம்பிட்டிய பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி உடனடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். வெல்லம்பிட்டிய பிரதேச சபைத் தலைவரைக் கடத்தச் சென்ற வெள்ளை வேன் குழுவினரை பிரதேச மக்கள் சிறைபிடித்ததை அடுத்து வெள்ளைவேனில் சென்றவர்கள் இராணுவ அதிகாரிகள் என்பது தெரியவந்துள்ளது. அத்துடன், பாதுகாப்புச் செயலாளரின் நேரடி உத்தரவின் பேரிலேயே இவர்கள் செயற்பட்டு வந்தமையும் தெரியவந்துள்ளது. வெள்ளைவேன் தரப்பினரை பிரதேச மக்கள் சிறைபிடித்தவுடன் இராணுவப் பேச்சாளர் ஊடகங்களுக்கு அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தார்.

அதில், இராணுவத்திலிருந்து தப்பிச் சென்ற இராணுவச் சிப்பாய்களைக் கைதுசெய்வதற்கே இந்தக் குழுவினர் சென்றதாகக் கூறியிருந்தார். அத்துடன், இராணுவ அதிகாரிகளின் கடமைகளுக்கு பொதுமக்கள் இடையூறு செய்துள்ளதாகவும் இராணுவப் பேச்சாளர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment