Posted by SankathiWPadmin on April 17th, 2012
ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் மீண்டும் வரும் நவம்பர் மாதம் சிறிலங்கா மீது அனைத்துலக கவனம் திரும்பும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் வரும் ஒக்ரோபர் – நவம்பர் மாதங்களில், உலக நாடுகளின் மனிதஉரிமைகள் நிலை பற்றிய மீளாய்வு இடம்பெறவுள்ளது.
இந்த மீளாய்வில் சிறிலங்கா குறித்து முக்கிய கவனம் செலுத்தப்படும்.
இந்தநிலையில், சிறிலங்கா தொடர்பான அறிக்கைகளை சமர்ப்பிக்க ஐ.நாவின் பல்வேறு அமைப்புகள் மற்றும் அரசசார்பற்ற அமைப்புகளுக்கு ஏப்ரல் 23ம் நாள் வரை கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கைகளுக்கு பதிலளிகப்பதற்கு சிறிலங்காவுக்கு வரும் ஜுலை 23ம் நாள் வரை காலஅவகாசம் அளிக்கப்படும்.
ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் வரும் நவம்பர் முதலாம் நாள் சிறிலங்கா தொடர்பான மீளாய்வு விவாதம் நடத்தப்படவுள்ளது.
இதற்கு முன்னதாக அனைத்துலக பணிகள் தொடர்பான மீளாய்வை கொழும்பு மேற்கொள்ளும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
வரும் ஜுன், மற்றும் செப்ரெம்பர் மாதங்களில் நடைபெறவுள்ள ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர்களில், முன்னேற்றங்கள் தொடர்பாக தாம் அறியப்படுத்தவுள்ளதாக சிறிலங்கா அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment