Friday, April 20, 2012

“13 ஆவது திருத்தம் அமுல்படுத்தப்படாதிருப்பது 3 வருடமாக அல்ல 25 வருடமாகவே’

vickramabahu_karunaratneரொஷான் நாகலிங்கம்

இந்திய பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவின் இலங்கை வருகையும் அவர்கள் நடந்து கொள்ளும் விதத்தையும் பார்க்கும் போது ஆச்சரியமே ஏற்படுவதாக நவசமசமாஜ கட்சியின் பொதுச் செயலாளர் டாக்டர் விக்ரமபாகு கருணாரட்ன தெரிவித்துள்ளார். இக்குழுவினர் இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கின் ஊடகப் பேச்சாளர் போன்று செயற்படுவதாகவும் மக்களின் பிரச்சினையை மொழிபெயர்த்து செயற்படுபவர்கள் போல் தோன்றுவதாகவும் டாக்டர் விக்ரமபாகு கருணாரட்ன மேலும் தெரிவித்துள்ளார்.

13 ஆவது அரசியல் திருத்தத்தை அமுல்படுத்துவதாக வாக்குறுதியளித்து மூன்று வருடங்களாகின்ற போதும் நிறைவேற்றப்படவில்லையென இவர்கள் கூறுகின்றனர். இது பிழையானதாகும். இந்திருத்தம்கொண்டுவரப்பட்டு 25 வருடங்களாகின்ற நிலையில் அமுல்படுத்தாதது ஏனெனக் கேட்க வேண்டுமே தவிர இவ்வாறு 3 வருடம் குறித்து பேசுவது தமிழ் மக்களை புண்படுத்தும் செயலாகுமெனவும் குறிப்பிட்ட அவர் மக்களை ஏன் இன்னமும் மீள்குடியேற்றவில்லையெனக் கேட்டு மீள்குடியேற்றத்திற்கு அழுத்தம் கொடுக்காது, இதனை அவர்கள் மேற்கொள்வார்கள், செய்வார்களென அரசாங்கத்தை பாதுகாப்பது போல் பேசுவதை ஏற்க முடியாதெனவும் கூறினார்.
வடக்கு, கிழக்கு நிலைமையை பார்க்க வந்தவர்கள் தெற்கு அதிவேக புகையிர சேவையை திறந்து வைக்கும் நிகழ்வில் பங்கு கொள்கின்றனர். இவர்களின் செயற்பாட்டை ஒட்டுமொத்தமாக பார்க்கும் போது இவர்களின் வருகையில் சந்தேகம் ஏற்படுவதாகவும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment