தனித் தமிழீழம் கிடைக்க இந்திய அரசு தேவையான ஆதரவும் அழுத்தமும் வழங்க வேண்டுமென தமிழக முன்னாள் முதல்வரும் தி.மு.க. தலைவருமான கருணாநிதி கூறியது இந்திய மத்திய அரசாங்கத்தின் கருத்தில்லை என்பதால் அது பற்றி அலட்டிக் கொள்ள தேவையில்லை என்று அமைச்சரவை பேச்சாளரும் பொருளாதார பிரதி அமைச்சருமான லக்ஷ்மன் யாப்பா அபேயவர்தன தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில்
நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே லக்ஷ்மன் யாப்பா இது பற்றி கூறினார்.
தனித் தமிழீழத்துக்கு இந்திய அரசு தேவையான ஆதரவும் அழுத்தமும் வழங்க வேண்டுமென கருணாநிதி தெரிவித்திருப்பது பற்றி எழுப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர்;
இதை சோமவன்ச கூட கூற முடியும். இது இந்திய அரசாங்கம் கூறிய விடயமல்ல என்பதால் அது பற்றி எமக்கு எந்தப் பிரச்சினையுமில்லை. ஒரு நாட்டில் அரசுக்கு பிரதானம் ஆட்சி அதிகாரம் தான். அப்படியான நிலைமைகள் வரும் போது இவ்வாறானவற்றை கூறுவார்கள். தேர்தல் முடிந்ததும் அது மாறிவிடும். அது தான் நடந்திருக்கிறது என்று கூறினார்.
No comments:
Post a Comment