

ஆனால் நடந்த சம்பவம் தொடர்பாக மக்களிடம் இருந்து, எந்தவகையான வாக்குமூலத்தை பொலிசாரோ இல்லை இராணுவ அதிகாரிகளோ பெற்றுக்கொள்ளவில்லை. அத்தோடு குறிப்பிட்ட சிங்களச் சிப்பாய் தொடர்ந்தும் அந்தக் காவலரனில் பணியில் இருப்பதாகவும் மக்கள் தெரிவித்துள்ளனர். எந்தவிதமான கைது நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. மொத்தத்தில் மீண்டும் ஒருமுறை தமிழர் தலையில் மிளகாய் அரைத்துள்ளது இலங்கை இராணுவம். ஆனால் ஒரு சுவாரசியமான விடையம் ஒன்றும் நடந்தேறியுள்ளது. கூக்குரல் கேட்டு மக்கள் திரண்டு பாடசாலைக்குள் சென்று, அங்குள்ள வகுப்பறையில் அப்பெண்ணை மீட்டவேளை,அந்த சிங்கள இராணுவச் சிப்பாயை மடக்கிப் பிடித்தனர் அல்லவா ? அப்போது அங்கே கூட்டத்தோடு கூட்டமாக நின்ற தமிழ் இளைஞர் ஒருவர் அந்தச் சிப்பாயின் தலையிலும் கன்னத்திலும் அறைந்துள்ளார்.
தற்போது உள்ள நிலையில் இதாவது நடந்ததே !
No comments:
Post a Comment