Sunday, April 29, 2012

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்ட சுஸ்மா சுவராஜ் தலைமையிலான இந்திய நாடாளுமன்றக் குழு உறுப்பினர்கள் வரும் மே 3ம் நாள் புதுடெல்லியில் சந்தித்து ஆலோசனை நடத்தவுள்ளனர். சிறிலங்காவில் இருந்து திரும்பிய காங்கிரஸ் நாடர்ளுமன்ற உறுப்பினர்கள் நால்வரும் கடந்த வெள்ளிக்கிழமை இந்தியப் பிரதமரைச் சந்தித்து, 10 அம்சத் திட்டம் அடங்கிய அறிக்கை ஒன்றை கையளித்தனர். அதையடுத்து சுஸ்மா சுவராஜை சந்தித்து, அதிகாரப்பகிர்வு குறித்து இந்தியக் குழுவுக்கு எந்த வாக்குறுதியையும் வழங்கவில்லை என்று சிறிலங்கா அதிபர் கூறியுள்ளது குறித்து கலந்துரையாடினர். அத்துடன் தமது பயணம் தொடர்பாக இந்திய மக்களுக்கு விளக்கமளிக்கும் வகையில், குழுவின் சார்பாக இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்கிடம் அறிக்கை ஒன்றை கையளிக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். இதையடுத்து, வரும் மே 3ம் நாள் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்ட குழுவின் கூட்டத்தை சுஸ்மா சுவராஜ் கூட்டவுள்ளதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. இந்திய அரசின் சார்பாக செல்லும் குழுவின் சார்பில் நாடாளுமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்கும் வழக்கம் இதுவரை நடைமுறையில் இல்லை என்றபோதும், தம்மிடம் அளித்த வாக்குறுதியை சிறிலங்கா அதிபர் மறுத்திருப்பதால், அதுபற்றிக் கலந்துரையாடவே சுஸ்மா சுவராஜ் இந்தக் கூட்டத்தைக் கூட்டவுள்ளதாக கூறப்படுகிறது. இந்தக் கூட்டத்தின் பின்னர், இந்த குழுவின் சார்பில் சிறிலங்கா பயணம் குறித்த அறிக்கை ஒன்றையும் இந்திய மத்திய அரசிடம் கையளிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்ட சுஸ்மா சுவராஜ் தலைமையிலான இந்திய நாடாளுமன்றக் குழு உறுப்பினர்கள் வரும் மே 3ம் நாள் புதுடெல்லியில் சந்தித்து ஆலோசனை நடத்தவுள்ளனர்.

சிறிலங்காவில் இருந்து திரும்பிய காங்கிரஸ் நாடர்ளுமன்ற உறுப்பினர்கள் நால்வரும் கடந்த வெள்ளிக்கிழமை இந்தியப் பிரதமரைச் சந்தித்து, 10 அம்சத் திட்டம் அடங்கிய அறிக்கை ஒன்றை கையளித்தனர்.


அதையடுத்து சுஸ்மா சுவராஜை சந்தித்து, அதிகாரப்பகிர்வு குறித்து இந்தியக் குழுவுக்கு எந்த வாக்குறுதியையும் வழங்கவில்லை என்று சிறிலங்கா அதிபர் கூறியுள்ளது குறித்து கலந்துரையாடினர்.

அத்துடன் தமது பயணம் தொடர்பாக இந்திய மக்களுக்கு விளக்கமளிக்கும் வகையில், குழுவின் சார்பாக இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்கிடம் அறிக்கை ஒன்றை கையளிக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இதையடுத்து, வரும் மே 3ம் நாள் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்ட குழுவின் கூட்டத்தை சுஸ்மா சுவராஜ் கூட்டவுள்ளதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

இந்திய அரசின் சார்பாக செல்லும் குழுவின் சார்பில் நாடாளுமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்கும் வழக்கம் இதுவரை நடைமுறையில் இல்லை என்றபோதும், தம்மிடம் அளித்த வாக்குறுதியை சிறிலங்கா அதிபர் மறுத்திருப்பதால், அதுபற்றிக் கலந்துரையாடவே சுஸ்மா சுவராஜ் இந்தக் கூட்டத்தைக் கூட்டவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்தக் கூட்டத்தின் பின்னர், இந்த குழுவின் சார்பில் சிறிலங்கா பயணம் குறித்த அறிக்கை ஒன்றையும் இந்திய மத்திய அரசிடம் கையளிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment