Sunday, April 01, 2012

ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவின் தீர்மானத்தால் அரசு அச்சமடைந்துள்ளது - அமைச்சர்கள் அவசர கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். இரா.சம்பந்தன்


ஜெனிவா, ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவினால் நிறைவேற்றப்பட்ட யோசனை காரணமாக இலங்கை அரசாங்கம் அச்சமடைந்து, பாதிப்பான மனநிலையில் இருப்பதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

ஜெனிவா யோசனை தொடர்பில், அரசாங்கத்தில் உள்ள அமைச்சர்கள் ஒரு நிலைப்பாடின்றி, அவசரமாக கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். அரசாங்கம், தமக்கு வழங்கிய, உறுதிமொழிகளை நிறைவேற்றினால், தமது கட்சி எதிர்காலத்தில், நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் பங்கு பற்றுவது குறித்து தீர்மானிக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment