Thursday, April 05, 2012

ஓங்கி ஒலிக்கும் எம்மவர்களின் ஒவ்வொரு குரலும் எம் இனத்தை அழிவுக்கு உட்படுத்தியவரை குற்றவாளிக் கூண்டில் ஏற்றும் - தமிழீழ மக்கள் பேரவை பிரான்சு



ஏப்ரல் 11!
புதன்கிழமை மாலை 3 மணிக்கு பிரான்ஸ் பாரிஸ் நகரில் இந்திய தூதுவராலயத்திற்கு அருகாமையில் ஒன்றுகூடல் பிரான்சு தமிழீழ மக்கள் பேரவையால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
தமிழர்களை சுதந்திரமாக அவர்களின் மண்ணில் வாழ விடு என்ற கோரிக்கையுடன் ஜெனிவாவில் நாம் ஆரம்பித்த ஒன்றுகூடல்இ அமெரிக்க அரசு சிறி லங்கா அரசுக்கு எதிராக கொண்டு வந்த பிரேரணையும்இ அதற்க்கு இந்திய சில மாற்றங்களுடன் அதற்கு இந்திய வாக்களித்ததும் நாம் பார்த்து கேட்ட செய்திகள்.


சிறி லங்கா அரசின் கொலைவெறிக்கு பாதுகாவலனாக இயங்கிய இந்திய மத்திய அரசுக்கு எமது சகோதர நாடாகிய தமிழக அரசியல் கட்சிகள்இ கட்சிகள் வேறுபாடின்றி கொடுத்த அழுத்தங்களும்இ எமது தமிழ்நாட்டு உறவுகள் இந்திய மத்திய அரசுக்கு எதிராக செய்த தொடர் ஆர்ப்பாட்டமும்இ இந்திய மத்திய அரசுக்கு இந்தியாவிலும் தமிழர்கள் வாழ்கிறார்கள் என்ற சிந்தனையை உருவாக்கிய காரணத்தால் இந்திய அரசு வேறு வழியின்றி இந்த பிரேரணைக்கு வாக்கு அளித்தது.
சிங்கள ராணுவத்திற்கும்இ இனவெறியர்களின் கொலைவெறி ஆட்டத்தில் படுகொலை செய்யப்படும் இந்திய மீனவர்கள்இ ஈழத் தமிழர்களுக்கு விடுதலை வேண்டும் என்று தொடர் போராட்டம் செய்து கொண்டு இருக்கும் தமிழ் நாட்டுஇ மற்றும் கன்னடத்தில் வாழும் தமிழர்களுக்கு நாம் நன்றி சொல்லியாக வேண்டும்.
புலம் பெயர்நாடுகளில் பறந்து வாழும் 2 மில்லியன் தமிழீழ மக்கள் அமைதி காத்துகொண்டு இருக்கும் நேரத்தில் எங்களுக்காய் குரல் கொடுக்கும் தமிழ்நாட்டு தமிழர்களுடன் சேர்ந்து தமிழர்கள் விடுதலை அடைய வேண்டும் என்றும் தமிழர்கள் சுதந்திரமாக வாழ வேண்டும் என்ற கோரிக்கையுடன் பாரிஸ் La Muette மெட்ரோ (ligne 9 ) வுக்கு அருகாமையில் உள்ள இந்திய தூதுவராலயத்திற்கு அருகாமையில் தமிழ் மக்களை கூடும்படி கேட்டு கொள்கிறோம்.
நாம் காக்கும் அமைத்து எமது இனத்தை மட்டுமல்ல தமிழர்களின் உரிமைகளை அழித்து விடும்.
ஓங்கி ஒலிக்கும் எம்மவர்களின் ஒவ்வொரு குரலும் எம் இனத்தை அழிவுக்கு உட்படுத்தியவரை குற்றவாளிக் கூண்டில் ஏற்றும்
இடம்: Rue Franqueville
நேரம்: மாலை 3 மணிக்கு
மெட்ரோ:  La Muette (ligne 9 )
தொடர்பு: 06 49 41 58 17
மின்னச்சல்: mte.france@gmail.com
செய்தி : தமிழீழ மக்கள் பேரவை பிரான்சு

No comments:

Post a Comment