Friday, April 06, 2012

ஜெனீவாக் கணக்குத் தீர்க்கும் சிறிலங்கா! கடும் சீற்றத்தில் இந்தியா

இந்நிலையில் தமிழ்நாட்டில் ஆயுதபயிற்சி பெற்ற விடுதலைப் புலிகள், மீண்டும் சிறிலங்காவில் களமிறங்கியுள்ளனர் என சிங்கள தேசத்தினால் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள செய்தி, இந்திய-சிறிலங்கா முறுகல் நிலையை தோற்றுவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தமிழ் நாட்டின் மூன்று முகாம்களில் பயிற்ச்சியளிக்கப்பட்ட 150 வரையிலான போராளிகளை, இந்தியா சிறிலங்காவில் களமிறக்கியுள்ளதாக, சிங்கள தரப்பினால் தீவீரமாக பரப்பபட்ட செய்தியானது, தென்னிலங்கை ஊடகங்களையும் தாண்டி, சர்வதேச ஊடகங்களிலும் முக்கிய செய்தியாக வெளிவந்திருந்தது.
ஆயுத வழிமுறையூடான ஈழவிடுதலைப் போராட்டத்தின் தொடக்க காலத்தினை நினைவூட்டும் வகையில், மீண்டும் இந்தியாவில் போராளிகள் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதாக சிங்கள தரப்பினால் தீவிரப்படுத்தப்பட்ட இந்த பரப்புரைக்கு வலவூட்ட, தென்தமிழீழமெங்கும் சிறிலங்கா இராணுவத்தின் தேடுதல் வேட்டையினைவும், சிறிலங்கா அரச தரப்பு மேற்கொண்டுள்ளது.
ஐ.நா மனித உரிமைச் சபையில் சிறிலங்கா தொடர்பில் நிறைவேற்றபட்டுள்ள தீர்மானம், சர்வதேச சட்டவிதிகளுக்கு புறம்பான சிறிலங்காவின் யுத்தமீறல்கள், சிங்கள தேசத்தினைச் சூழ்ந்துள்ள நிலையில், அதனை திசைதிருப்பும் நோக்கில், மீண்டும் சிறிலங்காவில் புலிகள் எனும் பரப்புரையினை மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு, இந்தியாவுடனான ஜெனீவாக் கணக்கினை தீர்த்துக் கொள்ளவும், சிறிலங்காவின் இந்தப் பரப்புரையின பின்னாள் உள்ள அரசியல் என அவதானிகள் தெரிவிக்கின்றனர்.
போர் ஓய்வுக்கு பின்னர், இலங்கையில் ஏற்பட்டுள்ள அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் நோக்கில், தமிழீப் போராளிகளுக்கு ஆயுதப்பயிற்சிகளை இந்தியா வழங்குவதோடு, போராளிகளை சிறிலங்காவில் களமிறக்கியுள்ளதென பொருட்பட, சிங்கள தேசத்தின் சிங்கள-ஆங்கில ஊடகங்கள் பரப்புரையினை மேற்கொண்டுள்ளது.
இதேவேளை இலங்கைத்தீவில் இனநல்லிணக்கம் ஏற்பட வேண்டுமென்ற சர்வதேசத்தின் விருப்புக்கு மாறாக , இனநல்லிணக்துக்கு பங்கமாக இந்தியா மீண்டும் ஆயுதப் போராட்டத்தினை இலங்கைதீவில் ஊக்குவிக்கின்றதென்ற பரப்புரையினையும் இச்செய்தியின் ஊடாக நிறுவுவதற்கு சிறிலங்கா அரசு முனைவாக அவதானிகள் தெரிவிக்கின்றனர்.
சிறிலங்கா அரசாங்கம், குறித்த இந்தச் செய்திகளுக்கும் தங்களுக்கும் தொடர்பில்லை என மறுத்திருந்த போதும், இந்திய மத்திய அரசு இதனை முக்கிய விடயமாக கையில் எடுத்துள்ளது.
ஏற்கனவே சிறிலங்காவில் உள்ள இந்தியத் தூதரகம் இச்செய்தியினை மறுத்திருந்ததோடு, தமிழக காவல்துறை ஆணையாளரும் மறுத்திருந்தார்.
தற்போது இந்திய உள்துறை அமைச்சர் பா.சிதம்பரமும், இச்செய்தியினை மறுத்திருப்பது , இவ்விவகாரத்தின் சூட்டினை உணரக்கூடியதாக உள்ளதென கருதமுடிகின்றது.
இந்தியாவில், தமிழ்நாடு உள்ளிட்ட எந்த இடத்திலும் ,விடுதலைப்புலிகளுக்கு பயிற்சி முகாம்கள் இல்லை எனவும் சிறிலங்க நாளிதழில் வெளியான செய்தி, முற்றிலும் அடிப்படையற்றது என பா.சிதம்பரம் நேற்று டெல்லியில் வைத்து ஊடகவியலாளர்களுக்கு தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவின் இந்த நடவடிக்கை குறித்து வெளிவிவகார அமைச்சு மட்டத்தில் இதுபற்றி இந்தியா விளக்கம் கோரும் என இந்திய இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

No comments:

Post a Comment