இலங்கைத்தீவினை
நோக்கி சுற்றுலாப்பயணிகளை கவர்ந்திழுக்க சிறிலங்கா அரசாங்கம் தீவிர
பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்ற நிலையில் தமிழின அழிப்பை
மூடிமறைத்தவாறு சுற்றுலாப்பயணிகளை கவர்ந்திழுக்க சிறிலங்கா முயலுகின்றதென
குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.The Sri Lanka Campaign for Peace and Justice எனும் அமைப்பின் பிரதிநிதி Edward Mortimer அவர்கள் Finacial tT mesஊடகத்தில் வரைந்துள்ள கட்டுரையில் இக்குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளார்.
போரினால் அழிந்த அழகி என தலைப்பிட்டு தனது பதிவினைச் செய்துள்ள அவர்கள் , ஒத்துழையாதவர்களையும், ஊடகவியலாரையும் துன்புறுத்தும் சிறிலங்கா சுற்றுலாவை மேம்படுத்த செய்யும் முயற்சியினைக் Edward Mortimer கண்டித்திருக்கி.ன்றார்.
போர்க்குற்ற விசாரணைகளை முன்னெடுக்க மறுக்கும் சிறிலங்கா இலங்கைக்கு, 2020 ல் 4 மில்லியன் சுற்றுலாப்பயணிகளை கவர காவு போவதாக குற்றம் சாட்டியிருக்கின்றார்.
அரசைத் தண்டிக்கலாம் ஆனால், சுற்றுலாவால் மக்களுக்கு வரும் ஊதியம் பாதிக்கப்படாது என்பது சரியான வாதமல்ல என குறிப்பிட்டுள்ள Edward Mortimer சுற்றுலாப்பயணிகளின் ஊடான வருவாய் ஐந்து நட்சத்திர விடுதிகளினூடாகவும், ஆடம்பர திடல்கள் ஊடாகவும் சிறிலங்க அரசாங்கத்திற்கே மறைமுகமாக போகிறபடியால் ஏழைத் தொழிலாளிகள் இதில் பயனடையவில்லை என்றும் கூறியிருக்கின்றார்.
சுற்றுலாவை முன்னேற்ற முயலும் இராணுவம், மீனவர்களினதும், ஏழை விவசாயிகளினதும் காணிகளை அபகரித்தும், அவர்களின் தொழிலிடங்களை சீர்குலைத்தும் அவர்களின் விருபங்களை அறியாமல், தான்தோன்றித்தனமாக நடப்பதாகவும் Edward Mortimer குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை அழகியதுதான் என்றாலும், புறக்கணிக்கப்பட்ட தமிழரின் பிரதேசமான வடக்கும் அதில் ஒரு பகுதியென்றும், அதை வேண்டுமென்றே சிறிலங்கா அரசு சிங்களமயமாக்கி .அங்கு வாழும் தமிழருக்கு வியாபாரங்களை நடத்த சிங்கள முதலாளிகள் தான் அமர்த்தப்பட்டிருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
No comments:
Post a Comment