Wednesday, April 04, 2012

சர்வதேச சமூகத்தின் காத்திரமான பங்களிப்பு இலங்கைக்குத் தேவை! தமிழீழ அரசின் வெளிவிவகாரத் துணை அமைச்சர்

tgte manickavasakarதமிழர்களின் நியாயமான கோரிக்கைகளை கவனத்தில் கொண்டு, சர்வதேச சமூகம் தனது காத்திரமான பங்களிப்பை இலங்கையில் செலுத்த வேண்டும் என்று நாடுகடந்த தமிழீழ அரசின் அரசியல் வெளிவிவகாரத் துறை துணை அமைச்சர் மாணிக்கவாசகர் தெரிவித்தார்.
அவுஸ்திரேலியாவின் பழங்குடி மக்களுக்கான, அவுஸ்திரேலிய நாடாளுமன்ற உறுப்பினர் ஹொன் கென்வையற்றை சந்தித்து கலந்துரையாடியபோதே அவர் இதனை வலியுறுத்தியுள்ளார்
.
இலங்கை தொடர்பில் சுதந்திரமான சர்வதேச விசாரணைப் பொறிமுறை, சர்வதேசத்தின் கண்காணிப்பில் தமிழீழத்தின் பொதுசன வாக்கெடுப்பு ஆகிய தமிழர்களின் நியாயமாக கோரிக்கைகளை கவனத்தில் கொண்டு, சர்வதேச சமூகம் தனது காத்திரமான பங்களிப்பை இலங்கைத் தீவில் செலுத்த வேண்டும் என்று மாணிக்கவாசகர் தெரிவித்தார்.
சிங்கள ஆட்சியாளர்களினால், ஈழத்தமிழ் இனத்தின் மீது நடாத்தப்பட்டு வரும் இன அழிப்புத் தொடர்பிலான ஆவணங்களை முன்னிறுத்தி, ஈழமக்களின் நியாயமான விடுதலைப் போராட்டத்தை விளக்கிய துணை அமைச்சர், ஐ.நா மனித உரிமைச் சபையில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம் குறித்து தமிழ் மக்களின் நிலைப்பாட்டை தெரியப்படுத்தினார்.
ஈழ மக்களுக்கு நியாயமானதும், நிலையானதுமான அரசியல் தீர்வைக் காண, அவுஸ்திரேலியா தலைமை தாங்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
நாடு கடந்த தமிழீழ அரசின் இந்த நிலைப்பாட்டை கரிசனையோடு கவனத்தில் கொண்ட அவுஸ்திரேலிய நாடாளுமன்ற உறுப்பினர், ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இது தொடர்பில் கலந்துரையாடுவதாக உறுதியளித்துள்ளதாக, நாடுகடந்த தமிழீழ அரசின் அரசியல் வெளிவிவகார துறை துணை அமைச்சர் மாணிக்கவாசகர் மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment