ஜெனீவாவில் இடம்பெற்ற மனித உரிமைகள் பேரவையின் 19வது கூட்டத்தொடரில் இலங்கை அமைச்சர் மஹிந்த சமரசிங்க உரையாற்றும் போது தாம்
இடம்பெயர்ந்த மக்களில் 98 வீதமானவர்களை மீளக்குடியேற்றி விட்டதாகவும்
அவர்களுக்கு வங்கிக் கடன்களையும்இ விவசாய மீன்பிடி உபகரணங்களையும் ,
வீடுகளையும் வழங்கி அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி வருவதாகவும்
பத்தாயிரத்துக்கு மேற்பட்ட முன்னாள் போராளிகளுக்குப் புனர்வாழ்வளித்து விடுவித்து விட்டதாகவும், வடக்குக் கிழக்கை வடக்கின்வசந்தம் மூலமும் கிழக்கின்உதயம் மூலமும் வடக்குக் கிழக்கைத் துரிதமாக அபிவிருத்தி செய்து வருவதாகவும் முழுங்கியிருந்தார்.

ஏனைய சிரே~;ட அமைச்சர்களும் அங்கு சென்ற பிரதிநிதிகளும் பல கலந்துரையாடல்க ளின் போது இதை மீண்டும் மீண்டும் கூறி வந்தனர்.
வடக்குக்கு வரும் வெளிநாட்டுப் பிரதிநிதிகளிடமும் வடமாகாண ஆளுனர் மேஜர் ஜெனரல் சந்திர சிறியும் வவுனியாஇ கிளிநொச்சிஇ யாழ்ப்பாண அரசாங்க அதிகாரிகளும் இதே சுலோகங்களைப் புள்ளி விபரங்களுடன் அட்சரம் பிசகாமல் ஒப்புவித்து வருகி;ன்றனர்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் இதே கருத்துகளை மேடைமேடையாகக் கூறி வருகின்றனர்.
ஆனாலஇ; யதார்த்த நிலைமைகளோ நேரெதிராகவே இருந்து வருகிறது. வன்னி மக்களின் வாழ்வு வறுமையும் பசியுமாகி விட்டது. ஏ9 பாதையை விட்டு இறங்கினால் இரு புறமும் குடிசைகளும் கூடாரங்களும் பரந்து கிடக்கின்றன. எங்கும் வரண்டு கிடக்கும் வயல்களும்இ பற்றைகள் நிறைந்த காணிகளுமே தோற்றமளிக்கின்றன. புழுதியெழும்பும் வீதிகளும் குண்டும் குழியுமான பாதைகளும் பயணங்களை நரகமாக்குகின்றன. நிவாரணப் பொருட்களுக்காக ஏங்கும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டு விட்டனர்.
வந்தாரை வரவேற்று உபசரித்து ஊருக்கெல்லாம் உணவளித்து பெருமை பெற்ற வன்னியின் பரிதாப நிலை இதுதான். பொய்மையால் அலங்கரிக்கப்பட்ட அறிக்கைகளின் போலித்தனத்தை அம்பலப்படுத்துகிறது வன்னி மக்களின் வாழ்க்கை. செழிப்பான வாழ்வு பறிக்கப்பட்ட சீவன்களாகத் தவிக்கின்றனர் அந்த விவசாய, மீனவ மக்கள்.

1991ம் ஆண்டுக்குப் பின்பு வடபகுதி பொருளாதாரத்தடைஇ எரிபொருள் தடைஇ விவசாய உள்ளீடுகளுக்குத் தடைஇ மருந்து வகைகளுக்குத் தடைஇ புதிய விவசாய வாகனங்கள் உட்பட வாகனங்களுக்குத் தடை எனப் பலவிதமான தடைகளால் இறுக்கப்பட்டது. ஆனால் எருவும் குப்பைகளும் பசளைகளாகின. இரும்புக் கலப்பையும்இ எருமை மாடுகளுமஇ; மரக்கலப்பைகளும், நாட்டு மாடுகளும் உழவுயந்திரங்களாயின.
மாட்டுச்சலமும் வேப்பம் புண்ணாக்கும் கிரிமிநாசினிகளாகின. மண்ணெண்ணையில் வாகனங்கள் ஓடின.
1996ல் கிளிநொச்சியை இராணுவம் ஆக்கிரமித்த போது ஒரு அதிர்வு ஏற்பட்டது உண்மைதான். ஆனால் கிரவல் பிட்டிகளும் சதுப்பு நிலங்களும் கூட எமது தொழில் மையங்களாக மாற மீண்டும் வாழ்வைச் செழிப்பாக்கினோம். ஓயாத அலை மூலம் மீண்டும் கிளிநொச்சி மீட்கப்பட வெகுவிரைவிலேயே மீண்டும் பழைய வாழ்வை மீட்டெடுத்தோம்.
2006ல் ஆரம்பித்த இராணுவ நடவடிக்கை 2009ல் நிறைவு பெற்ற போது பல்லாயிரம் உயிர்களை இழந்துஇ உடலுறுப்புகளை இழந்துஇ காலம் காலமாகப் பாடுபட்டுத் தேடிய சொத்துக்களை இழந்து வெறுங் கையுடன் மெனிக் பண்ணையில் இடம்பெயர்ந்த அகதிகளாகக் கொண்டு சென்று கொட்டப்பட்டோம். முள்ளுக்கம்பி வேலிக்குள் கூடாரங்களுக்குள் கீழ் கொட்டும் மழையிலுமஇ; கொழுத்தும் வெயிலிலும் , வாட்டும் நோயிலும் , உணவுக்கும,; நீருக்கும் கூடக் கையேந்தி கைதிகள் போல் அல்லல் பட்டோம்.
பின் மீள்குடியேற்றம் என்ற பேரில் பதியப்பட்டு குடும்பமாகப் படமெடுக்கப்பட்டு வளர்ந்து நின்ற பற்றைகளின் நடுவே எங்கள் காணிகளில் இறக்கப்பட்டோம். நாம் போகும் போது விட்டுச் சென்ற கூரைத்தகடுகள் இ வீட்டுத்தளபாடங்கள் தென்னிலங்கையிலிருந்து வந்தவர்கள் படையினரின் உதவியுடன் கொள்ளையடித்துச் சென்று விட வெறும் சுவர்கள் மடடும் எஞ்சிக் கிடந்தன. விட்டுச் சென்ற வாகனங்கள் கூட எஞ்சின்களஇ; ரயர்கள் திருடப்பட்;ட நிலையில் வெறும் கோதுகள் மட்டும் விடப்பட்டிருந்தன. இப்படித்தான் எமது வாழ்க்கை ஆரம்பித்தது.

வெறுங்கையாக நின்ற நாம் வங்கிகளில் கடன்பட்டு விவசாயத்தை ஆரம்பித்தோம். உடலைக் கசக்கிப்பிழிந்து உழைத்து விவசாயத்தை மேற்கொண்டோம். வயலும் விளைந்தது. அறுவடை செய்தோம். ஆனால் எமது நெல்லைக் கொள்முதல் செய்ய எவரும் வரவில்லை. கூடாரங்களுக்குள் வைக்கப்பட்ட நெல்மூடைகள் நனைந்து நாசமாகின. பத்திரிகைகளில் நெல் கொள்முதல் செய்யக் கோடிக்கணக்கான பணம் ஒதுக்கப்பட்டதாக செய்தி வந்தது. ஆனால் எம்மிடம் எவரும் வரவில்லை.
வேறுவழியற்ற நிலையில் தனியார் வியாபாரிகளுக்கு விற்றோம். நாம் எமது நெல்லை விற்;று முடிந்த பின்பு சங்கங்களுக்குப் பணம் வந்தது. நாங்கள் பாடுபட்டு உழைக்க பலன் பெற்றது வங்கிகளும் தனியார் வியாபாரிகளும்தான். இது ஒருமுறை மட்டுமல்ல ஒவ்வொரு அறுவடைக்காலத்திலும் இடம்பெறுவதுதான். தனியார் வியாபாரிகளுக்கும் நெல்கொள்வனவுக்குப் பணம் ஒதுக்கும் அதிகாரிகளுக்குமிடையே எழுதப்படாத சில ஒப்பந்தங்கள் இருப்பதாகவே கருத வேண்டியுள்ளது. நாம் பாடுபட்டு உழைத்தும் வெறுங்கையாளராகவே நின்றோம்.
25 கோடி செலவில் கிளிநொச்சியில் சர்வதேச விளையாட்டு மைதானம் அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டது. திருநகரில் அரச செயலகம் அமைக்கப் பல கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் விவசாயிகள் உற்பத்தி செய்யும் நெல்லைக் கொள்முதல் செய்து களஞ்சியப்படுத்தும் களஞ்சிய வசதிகள் இ;ல்லை. விவசாயிகளின் உற்பத்திப் பொருட்கள் உரிய நேரத்தில் கொள்முதல் செய்யப்படாவிட்டால் எப்படி தொடர்ந்து விவசாயம் செய்யமுடியும்.
அண்மையில் ஒரு அமைச்சர் உரையாற்றும் போது வருடாவருடம் மிளகாயை இறக்குமதி செய்ய 600 கோடி செலவு செய்வதாகவும் வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கையர்களால் அனுப்பப்படும் மொத்த வருமானம் 720 கோடி மட்டும்தான் எனவும் 1970ம் ஆண்டை அடுத்த காலத்திலும் 1990-1991 ஆண்டுகளிலும் இலங்கை மிளகாய் உற்பத்தியில் தன்னிறைவு பெற்றிருந்தது எனவும் குறிப்பிட்டிருந்தார்.
ஆனால் இன்று மிளகாய் இறக்குமதிக்குப் பெருந்தொகைப் பணம் செலவிடப்படுகிறது. மிளகாய் வெங்காய உற்பத்தியில் வடபகுதி உச்ச பங்கு வகித்தது என்பதை எவரும் மறுத்துவிட முடியாது.
வலிகாமம் இ திருவையாறு, விஸ்வமடு, முத்தையன்கட்டு, அக்கராயன் போன்ற பிரதேசங்களிலேயே பெருமளவு மிளகாய் உற்பத்தி செய்யப்பட்டது. இராணுவ ஆக்கிரமிப்பில் வளமான வலிகாமம் பிரதேசம் இப்போ 22 ஆண்டுகளாகத் தரிசுபட்டுப்போய் கிடக்கிறது.

திருவையாறு, விஸ்வமடு, முத்தையன் கட்டு ஏற்று நீர்ப்பாசனத் திட்டங்கள் பல ஆண்டுகளாக முடங்கிப் போய் வி;ட்டன. அவற்றைச் சீர்செய்து மீண்டும் இயங்கவைக்க எந்த ஒரு நடவடிக்கையையும் எடுக்கப்படவில்லை. அடிக்கடி வடக்குக்கு விஜயம் செய்யும் அமைச்சர்களுக்கு விழாக்கள் எடுக்கும் பெருந்தொகைப் பணமே இவற்றைச் சீர்செய்யப் போதுமானது. பெரு விழாவெடுத்து அமைச்சர்கள் காட்டும் அடிக்கற்கள் அவ்வளவுடன் உறங்கி விடுவதே நடைமுறையாகி விட்டது. ஆனால் பத்திரிகைகளில் மட்டும் கோடிக்கணக்கான பணம் ஒதுக்கப்பட்டிருப்பதாகச் செய்திகள் வரும்.
சில அரச சார்பற்ற நிறுவனங்கள் நீரிறைக்கும் இயந்திரங்கள் உட்படச் சில விவசாய உபகரணங்களை வழங்குவதுண்டு. அதைக்கூட அரசால் அங்கம் வகிக்கும் அரசியல் கட்சிகளைக் சேர்ந்தவர்கள் தேவையுள்ள மேட்டுநிலப் பயிர்ச் செய்கையாளர்களுக்குப் போக விடாமல் தாங்களும் தங்களைச் சார்ந்தவர்களும் பங்கு போட்டுக் கொள்வார்;கள்.
இப்படியான நிலையில் மேட்டு நிலப்பயிர்களான வெங்காயம் மிளகாய் வாழை போன்றவற்றின் உற்பத்தியில் ஈடுபடுவோருக்கு விமோசனம் கிட்டமுடியுமா?
கூலித்தொழிலில் ஈடுபடுபவர்கள் நிலையோ பரிதாபத்திலும் பரிதாபம். உப உணவுப் பயிர்ச்செய்கைக்கே கூடுதலான மனித உழைப்பு தேவை. அது இப்போ வன்னியில் மேற்கொள்ள முடியாத நிலை. அரிவு வெட்டு சூடடி எல்லாவற்றுக்கும் இயந்ற்திரங்கள் வந்துவிட்டன. வீதியமைப்பு வேலைகளுக்குக் கூட தொழிலாளர்கள் தென்னிலங்கையிலிருந்தே கொண்டு வரப்படுகின்றனர். எமது தொழிலாளர் நிலையோ வறுமையிலும் பசியிலும் கழிகிறது. வேலையின்மை என்பது பெரும் பூதமாக எழுந்து நிற்கிறது.
வங்கிகளில் கடன் வாங்கி கட்டிடங்களை அமைத்து வர்த்தக நிலையங்களை அமைத்தவர்கள் வியாபாரம் இன்றி தள்ளாடும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர். நடைபாதை வியாபாரிகள் தென்னிலங்கையிலிருந்து நூற்றுக்கணக்கில் தரமற்ற பொருட்களை மலிவான விலையில் விற்று விடுகின்றனர். மக்களும் அவற்றையே வாங்குகின்றனர்.
இப்படியான நிலையில் வர்த்தக நிலையங்களும் ஆட்குறைப்பு செய்து தங்கள் சிப்பந்திகளில் ஓரு பகுதியினரை வேலையை விட்டு நிறுத்தி விடுகின்றன.
எமது மீனவர்கள் தங்கள் தொழிலை மேற்கொள்ளப் பலவிதமான இடையூறுகளை அனுபவிக்க வேண்டியுள்ளது. இராணுவத்தினர் கடற்படையினரின் கெடுபடிகள் மத்தியிலேயே கடலில் இறங்க வேண்டிய நிலை. மன்னார், பருத்தித்துறைக் கடல்பகுதிகளில் இந்திய மீனவர்களின் றோலர் படகுகளின் ஆதிக்கத்தால் தொழிலைச் சரியாகச் செய்ய முடியாத நிலைமை.
கொக்கிளாய், முல்லைத்தீவு கடல்களில் சிங்கள மீனவர்கள் கடற்படையினரின் உதவியுடன் தடைசெய்யப்பட்ட வலைகளைப் பாவித்து மீன் வளத்தையே அழித்துக் கொண்டிருக்கின்றனர். கொக்கிளாய் , நாயாறு பகுதிகளில் சிங்களக் குடியேற்றங்கள் ஏற்படுத்தப்பட்டு அதில் மீனவர்கள் குடியேற்றப்பட்டனர். அவர்கள் இறால்பிடி, ஆழ்கடல் மீன்பிடி, கரைவலைத் தொழில் என சகலதிலும் ஆதிக்கம் செலுத்தும் நிலை தோன்றிவிட்டது.
எமது மீனவர்களே மீன்படி உபகரணங்களை வாங்க வங்கிகளில் பெற்ற கடனைக் கட்ட முடியாமலும் ஈடுவைத்த நகைகளை மீளமுடியாமலும் திண்டாடுகின்றனர்.
யு.என்.எச்.சி.ஆர் வழங்கிய திகதியில் ஒரு சிறிய பகுதி வீடுகள் திருத்தப்பட்டு மக்கள் குடியிருக்க ஆரம்பித்து விட்டனர். ஆனாலஇ; வாக்களிக்கப்பட்ட 50000 வீட்டுத் திட்டத்தில் இதுவரை 500 வீடுகள் கூடக் கையளிக்கப்படவில்லை.
இலங்கை அரசின் அக்கறையின்மைஇ இன விரோதப் போக்கு என்பவற்றால் அத்திட்டம் வருடக்கணக்கில் இழுபறி நிலையிலேயே உள்ளது.
முன்னாள் போராளிகள் 10000 பேர் விடுவிக்கப்பட்டதாக கூறப்பட்டாலும் அவர்களில் பலர் மீண்டும் பிடிக்கப்பட்டுக் கொண்டு செல்லப்பட்டுளளனர். சிலர் பூசாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். வேறு சிலரோ எங்கு கொண்டு செல்லப்பட்டனர் என்ற விபரத்தை உறவினரால் அறிய முடியவில்லை.
அதுமட்டுமன்றி, விடுவிக்கப்பட்டவர்களும் இராணுவப் புலனாய்வுப் பிரிவினரின் கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என்பதுடன் மாதாமாதம் படை முகாமில் சென்று கையெழுத்திடவும் வேண்டும்.
அவர்கள் தொழில் செய்வதற்கு கடன்கள் வழங்கப்படுவதாகக் கூறப்படுகிறது. ஆனால் , அவர்கள் கடன் பெற விதிக்கப்படும் நிபந்தனைகளோ அவர்களால் நிறைவேற்றப்பட முடியாதவை.
மீள்குடியேறிய மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தி விட்டதாக அரசு அழகான அறிக்கைகளையும் அலங்கார வார்த்தைகளையும் வெளியிட்ட போதும் எமது மக்கள் வறுமையிலும் துன்பத்திலும் தவித்துக் கொண்டே இருக்கின்றனர். இன்னும் அரசின் இன ஒடுக்குமுறையே எம்மை சிறப்பான வாழ்வை நோக்கி முன்னேற விடாது தடுக்கும் சுவராக நிலைத்து நிற்கிறது.
-மருதநிலவன்-
No comments:
Post a Comment