Posted by SankathiWPadmin on April 17th, 2012
தமிழ்நாட்டின் முக்கியமான அரசியல் கட்சிகளான அதிமுகவும், திமுகவும் விலகிக் கொண்ட பின்னர், சிறிலங்காவுக்கான பயணத்தை மேற்கொள்ளும் இந்திய நாடாளுமன்றக் குழுவின் பயண முக்கியத்துவம் குறைந்து போய் விட்டதாக இந்திய ஊடகங்கள் கருத்து வெளியிட்டுள்ளன.
சிறிலங்காவுக்கு இன்று மேற்கொள்ளும் பயணத்தில் இருந்து முதலில் அதிமுகவும், நேற்று திமுகவும் விலகியிருந்தன.
ஆனாலும் இந்தியக் குழு இன்று கொழும்பு பயணமாகவுள்ளது.
இந்தநிலையிலேயே இந்தியக் குழுவின் இந்தப் பயணம் முக்கியத்துவத்தை இழந்து விட்டதாக இந்திய ஊடகங்கள் விமர்சித்துள்ளன.
இந்தநிலையில், இதுபற்றிக் கருத்து வெளியிட்டுள்ள தெற்காசிய விவகாரங்கள் தொடர்பான நிபுணர் வி.சூரியநாராயணன், தமிழ்நாட்டின் கவலைகள் உண்மையானது என்று கூறியுள்ளார்.
ஆனாலும் இதை ஒரு சுற்றுலாப் பயணமாக்க சுஸ்மா சுவராஜ் குழு அனுமதிக்காது என்று அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
“இந்தியக் குழுவினர் யாழ். பல்கலைக்கழகத்துக்குச் செல்ல வேண்டும்.
கிளிநொச்சி, வவுனியாவுக்கும் சென்று பொதுமக்களுடன் கலந்துரையாட வேண்டும்.
அத்துடன் பாக்கியசோதி சரவணமுத்து, ஜெகான் பெரேரா, தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட மனிதஉரிமை செயற்பாட்டாளர்களையும் சந்தித்துப் பேச வேண்டும்“ என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment