Monday, April 30, 2012

அய்யா!! கலைஞரே!! இளையதலைமுறையினை இழிவாக கருதவேண்டாம்:ஓர் பகிரங்க மடல்


ஈழத்தமிழன் இதயங்களில் மட்டுமல்ல உலகத்தமிழனின் மனங்களிலும் மரணித்துப்போன முன்நாள் முதல்வர் மு.கருணாநிதி அவர்களே!!
karunanidhi-newவஞ்சகத்தின் வாள்வீச்சால் காயம்பட்ட இதயத்துடன் வாழ்ந்துகொண்டிடுக்கும் ஈழத்தமிழனாகிய நான் அடிமனதில் ஆத்திரத்துடனும் சில ஆதங்கத்துடனும்  காலத்தின் கட்டாயத்தில் புலத்தில் இருந்து உங்கள் மீது ஏவுகின்ற ஒரு ஏவுகணை என்றே கருதி இந்த கடிதத்தை உங்களுக்கு அனுப்புகின்றேன்.
எனது அன்றாட வேலைகளை விடுத்து இந்த கடிதத்தை எழுதுவதற்காக ஒரு சில நிமிடங்களை செலவிடுவதை  நினைத்து மிகவும் வருத்தமும் வேதனையும் கொள்கின்றேன்.

எனது மனதிலே மரணித்துப்போன உங்களுக்கு  நான் எழுதும் இந்த கடிதம் வெறும் கடதாசியில் எழுதுகோல் கொண்டு எழுதி அனுப்பவில்லை. ஆத்திரத்தில் கொதிக்கும் உதிரத்தால் நெருப்புத் துண்டிலே வரையப்படும் ஒரு மடல் நிச்சயமாய் உங்கள் மனச்சாட்சிய சுட்டெரிக்கும் என நம்புகின்றேன்
அய்யா !! கலைஞரே!! ஈழத்தமிழன் என்ன ஈனப்பிறவி என்று நினைத்தீர்களா?? சொல்வதையெல்லாம் கேட்டு தலையாட்டி அடிமாடாய் விலைப்பட்டுப்போக  இன்றைய இளைய சமுதாயத்தினரை இழிவானவர்கள் என்று நினைத்தீர்களா??
எட்டிப்பார்க்கும் தூரத்தில் எமன் வந்து நிற்கின்றான். இன்னமும் ஏன் இந்த ஈனவாழக்கை?? அய்யா வேண்டாம் இன்னொருமுறை உங்கள் வாயில் ஈழம் என்ற சொல்லை உச்சரிக்கவே வேண்டாம்!! எங்கள் இதயம் வலிக்கிறது
மானம் மறந்து மாற்றான் காலைப்பிடித்து வாழ ஈழத்தில் பிறந்தவர் எல்லோரும் கருணாநிதிகள் அல்ல – அங்கே பிறந்த ஒவ்வெருதமிழனும் “பிரபாகரன்கள்” கருணாநிதிகள் எல்லோரும் மே-18-2009-அன்றுடன் புதைக்கப்பட்டுவிட்டனர் என்ற உன்மையினை என் தமிழ் சொந்தங்கள் நடந்து முடிந்த தேர்தலிலே சொல்லியிருந்தனர்.
மரணித்துப்போன நீங்கள் மறுயென்மம் எடுக்க எத்தணிக்கும் நோக்கம் என்ன?? ஈழத்தமிழன் இரத்தம் சிந்தி வீழும்போது இழகாத உங்கள் இதயம் இன்று இழகிப்போனதற்கான காரணம் என்னவோ??
கடதாசியில் எழுதிவிட்டு அதை அழிப்பதைப்போல இதயத்தின் பதிவுகளை அழித்துவிட முடியாது.!! இன்றய இளைய சமுதாயம்   அரசியல் போரியல்யூகம்  பூலோக அரசியல் என்ற அனைத்திலுமே மிகமிக வேகமாகவும் விழிப்பாகவும் செயற்பட்டுக்கொண்டிருக்கின்றது.
உங்களின்  இந்த அறிக்கைகளும் சவால்களும் எங்களை சினம்கொள்ள வைக்கின்றது.
அரசியல் என்ற ஒரு புனிதமான தீர்த்தக்கோணியில் உங்களைப் போன்றவர்கள் குதிப்பதால்தான் அது சாக்கடையாக மாறிக்கொண்டிருக்கின்றது.
தமிழ் ஊடகங்களை உங்கள் அரசியல் விளம்பர பலகையாக பயன்படுத்தி  தமிழீழம் மீட்காது நான் சாகமாட்டேன் ‘ என்று அறிக்கை பதிவு செய்தீர்கள் உங்கள் நாக்கு கொஞ்சம் கூட வலிக்கவில்லையா?? அதேவேளை உங்களைப்பற்றிய செய்திகளை பிரசுரிப்பதற்கும் சில ஊடகங்கள் இருப்பதை நினைத்து ஆத்திரம் அடைகின்றேன்
அய்யா முத்தமிழ் வித்தகரே!! முள்ளிவாய்க்கால் மண்ணிலே விண்ணதிர ஈழத்தமிழன் அவலக்குரல் இட்டபோது தனி ஈழம் சாத்தியம் இல்லை என்று சென்னது யார்?? ஈழத்தமிழர்களுக்காக குரல்கொடுத்த அண்ணன் திருமாவளவன் ,அண்ணன் சீமான்  ,அண்ணன் வைகோ ,பழநெடுமாறன் ஆகியோரை ஈழத்துக்கு ஆதரவாக பேசக்கூடாது என்று தடுத்தது மட்டுமல்லாது எத்தனையோ முறை சிறையிலே அடைத்ததும் யார் ???
இதையெல்லாம் செய்தது நீங்கள்தானே!! ஒருமுறை கண்ணாடியிலே உங்கள் முகத்தைப் பாருங்கள் அதுகூட உங்கள் முகத்தில் காறி உமிழ்ந்துவிடும் – ஈழத்தமிழரைப் பொறுத்தவரை மாவீரர்களே காவல் தெய்வங்கள்!! அப்படிப்பட்ட தெய்வங்களையும் கேவலப்படுத்தியவர் நீங்கள்தானே! மாவீரர்களின் கல்லறைகளைக் கட்டியதைவிட வேறு காரியத்தில் கவனம் செலுத்தியிருக்கலாம்’ என்று  அறிக்கை விட்டவர் யார்?  காலம் கடந்துபோனால் என் துரோகம் மறைந்துபோகும் என்று மனதிலே நினைத்தீர்களா?? மறப்பது மட்டும் அல்ல எக்காலத்திலும் மன்னிக்கவும் மாட்டோம்.
அன்று முள்வேலிக்குள் முடக்கப்பட்ட தமிழன் உதவிக்கரம் நீட்டியபோது சோனியா சோனியா சொக்கத்தங்கம் சோனியா என்று ஆடல் பாடலாக மும்பைக்கும் தமிழகத்துக்குமாய் பறந்து உங்கள் பதவியினை தக்கவைத்துக் கொண்டீர்கள் மத்திய அரசுக்கு அழுத்தத்தை கொடுத்து அன்று மட்டும் நீங்கள் பதவி விலகியிருந்தால் போர் நிறுத்தப்பட்டு அத்தனை உயிர்களும் மீட்கப்பட்டிருக்குமே!!
விபச்சாரி கழுக்கும் கூத்தாடிகளுக்கும் முன்னுரிமை கொடுக்கும் உங்கள் ஊடகங்கள் ஈழத்தில் நடந்தபோர் குற்ற ஆதாரங்களை வெளிடமறந்தது ஏன்?? ஈழத்திலே கொடூரமாக யுத்தம் நடந்து கொண்டிருந்தபோதும் “மானாட மயிலாட பார்த்து மகிழ்ந்து கொண்டிருந்தீர்களே!! இதைவிட கேவலமான ஒரு விடயத்தை ஊடக தர்மத்தை மீறியும்  உங்கள் ஊடங்கங்கள் “நடிகை ரஞ்சிதாவும் சாமியரும்” செய்த திருவிளையாடல்களை நிமிசத்துக்கு ஒருமுறை ஒலிபரப்பியது அதற்காக ஒதுக்கப்பட்ட நேரத்தில்கூட ஈழத்தமிழரது அவலங்களை ஒலிபரப்ப மறுத்ததும் நாங்கள் மறக்கவில்லை!
அய்யா வயோதிபரே தமிழீழம் மலரமுன்னே நீங்கள் உயிர்துறந்து விடுங்கள் மலரப்போகும் தமிழீழத்தை பார்க்கும் தகுதிகூட உங்கள் கண்களுக்கு இல்லை – ஈழத்தமிழினத்துக்கு காலத்தால் மன்னிக்க முடியாத துரோகத்தை செய்துவிட்டு மீண்டும் ஈழம் என்ற சொல்லை வைத்து ஆட்சியை கைப்பற்ற நினைப்பது எங்களுக்கு புரியாது என்று நினைத்து நீங்கள் வடிக்கும் நீலிக்கண்ணீர் இளையவர்களான எங்களை ஆவேசம் கொள்ள வைக்கின்றது.
அண்ணன் முத்துக்குமரன் மூட்டிய விடுதலைத்தீ உறங்கிக் கிடந்த தமிழகத்தை தட்டி எழுப்பிவிட்டது. உங்கள் மந்திரத் தமிழுக்கு இனியும் மாங்காய்கள் வீழப்போவதில்லை.  ஈழத்தமிழனையும் இன்றய இளையோரையும் இழிவாக நினைத்து உங்கள் நாடகத்தை அரங்கேற்ற நினைக்கவேண்டாம்!! இது இளையோர்கள் சார்பாக நான் விடுக்கும் ஒரு எச்சரிக்கை. எங்கள் கோபத்தை கிழறவேண்டாம்!! எங்கள் உணர்வுகளை சிதைக்கவேண்டாம். இன்னொரு கருணாநிதி தமிழ் மண்ணிலே பிறக்கவேண்டாம்!! எங்கள் மனங்களில் மரணித்துப்போன நீங்கள் மரணக்கிடங்கிலே இருக்கும் பிணமாகவே இருங்கள்.
நன்றி
- ஆதவன்
இளைய தலைமுறையினர் சார்பாக
source:sankathi.com

No comments:

Post a Comment