சீனாவின் பெரிய நகரங்களைத் தாக்கக் கூடியதும் புதிய அணு ஆற்றலைக்
கொண்டதுமான நீண்டதூர வீச்சு ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாகப்
பரிசீலித்துள்ளது.
நேற்று வியாழக்கிழமை பரிசோதிக்கப்பட்ட இந்த அக்னி ங ஏவுகணையானது சீனாவின்
உட்புறத்தே ஊடுருவிச் சென்று தாக்கக் கூடியது மாத்திரமன்றி ஐரோப்பாவையும்
சென்றடையக் கூடிய வீச்செல்லை யைக் கொண்டதாகும்.
இந்தப் பரிசோதனையை வெற்றிகரமாக மேற்கொண்டதன் மூலம் சர்வதேச மட்டத்திற்கு அணு ஆயுத ஆற்றலைக் கொண்ட நாடுகள் பட்டியலில் இணைந்து கொள்ளும் அந்தஸ்தை இந்தியா பெற்றிருப்பதாக லண்டன் "கார்டியன்'பத்திரிகை நேற்று குறிப்பிட்டிருக்கிறது.
இந்தியாவின் கிழக்கு கரைக்கு அப்பாலுள்ள தீவொன்றிலிருந்து ஏவப்பட்ட இந்த ஏவுகணை பயணிப்பதை தொலைக்காட்சிப் பிரதிமைகள் காண்பித்தன. 5 ஆயிரம் கிலோ மீற்றர் தூரத்திற்கும் அப்பால் செல்லக் கூடிய வீச்சைக் கொண்டது இந்த ஏவுகணை என விஞ்ஞானியொருவர் கூறியுள்ளார். நோக்கத்தின் சகல இலக்குகளையும் இது பூர்த்தி செய்துள்ளதுடன் சரியான இலக்கை சென்றடைந்திருக்கின்றது என்று வீச்சுப் பரிசோதனைப் பிரிவின் பணிப்பாளரான எஸ்.பி. டாஸ் என்பவர் ராய்ட்டருக்கு கூறியுள்ளார்.
அண்டைய நாடான சீனாவிடமிருந்து ஏற்படக் கூடிய அச்சுறுத்தலை மனதில் கொண்டே இந்த ஏவுகணைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டதாக கருதப்படுகிறது.
இத்தகைய நீண்ட தூர வீச்சைக் கொண்ட ஏவுகணைகளை ஐ.நா. பாதுகாப்புச் சபையின் நிரந்தர உறுப்பினர்களான சீனா, பிரான்ஸ், ரஷ்யா, அமெரிக்கா, பிரிட்டன் ஆகிய நாடுகளுடன் இஸ்ரேலும் வைத்திருப்பதாக நம்பப்படுகிறது.
இந்தப் பரிசோதனை தொடர்பாக மேற்குலகிடமிருந்து விமர்சனங்கள் எதுவும் இதுவரை வெளியிடப்பட்டிருக்கவில்லை. ஆனால் இது அங்கீகாரமற்றது என்று சீனா குறிப்பிட்டுள்ளது.
அணுவாயுத மற்றும் ஏவுகணை கட்டுப்பாட்டு உடன்படிக்கைகளை இந்தியா பொருட்படுத்தாதமை கவனத்தில் கொள்ளாமல் இருப்பதற்கான தெரிவை மேற்குலகு மேற்கொண்டுள்ளது. தனது பலத்தை இந்தியா மிகையாக மதிப்பிடக்கூடாது என்று சீன கம்யூனிசக் கட்சியின் “மக்கள் தினசரி“ பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.
சிவத்தக் கோட்டை சீனா தாண்டினால் சாத்தியமான அதிகபட்ச தண்டனையை நடைமுறைப்படுத்துவதற்கான ஆற்றலை இந்தியா இப்போது கொண்டுள்ளது என்று டில்லி ஜவஹர்லால் பல்கலைக்கழகத்தின் சீனக் கற்கைகள் துறை சார்ந்த பேராசிரியர் ஸ்ரீகாந்த் கொண்டப்பள்ளி கூறியுள்ளார்.

No comments:
Post a Comment