Thursday, April 26, 2012

காட்டப்பட்ட தோற்றங்களும் காணப்படாத உண்மைகளும்:-தமிழீழத்திலிருந்து புத்திரன்-

mulli-3அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்த இந்திய நாடாளுமன்றக்குழு பல இடங்களையும் சென்று பார்வையிட்டதுடன் பல்வேறு தரப்பினருடன் சந்துப்புக்களையும் நடத்தி முடித்து விட்டு இந்தியா திரும்பியுள்ளது.
ஏற்கனவே போர் முடிந்து சில நாட்கள் கழிந்த நிலையில் இந்திய நாடாளுமன்றக் குழு தி.மு.க வைச் சேர்ந்த மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு தலைமையில் இலங்கைக்கு விஜயம் செய்திருந்தது. இவர்களும் பலதரப்பினரையும் சந்தித்துக் கலந்துரையாடல்களை நடத்தியதுடன் இடம்பெயர்ந்த மக்கள் அடைத்து வைக்கப்பட்டிருந்த முகாம்களுக்கும் சென்று திரும்பியிருந்தனர்.

3 இலட்சத்திற்கு மேற்பட்ட தமிழ் மக்கள் போதிய உணவு குடிநீர் மருத்துவ வசதிகளின்றி வெளியே கூடுச் செல்ல விடாது முட்கம்பி வேலிகளுக்குள் கூடாரங்களில் முடக்கப்பட்டிருந்த நிலையிலேயே அவர்களின் விஜயம் இடம்பெற்றது. இவர்களின் மக்கள் சந்திப்புகள் அனைத்தும் இராணுவ அதிகாரிகளினதும் அமைச்சர்களினதும் முன்னிலையில் இடம்பெற்ற போதிலும் மக்கள் இயன்றவரைத் தமது குறைபாடுகளை எடுத்துக் கூறத்தவறவில்லை. எனினும் அவர்கள் அவற்றைப் பெரிதாகச் செவிமடுக்கவில்லை. அதுமட்டுமன்றி இந்தியா சென்ற பின்பு இலங்கை அரசின் சேவைகளுகச்கு நற்சான்றிதழ் வழங்கும் வகையில் கருத்துக்களை வெளியிட்டனர்.
 
அந்த விஜயம் இடம்பெற்ற போது அதன் மூலம் தமிழ் மக்களுக்கு ஏதாவது நன்மைகள் ஏற்படும். ஏன்றே பலராலும் எதிர்பார்க்கப்பட்டது. அந்த நன்மை குடும்பத்துக்கு ஒரு உணவுப் பொதி தமிழக அரசால் வழங்கப்பட்டதுடன் மட்டுப்படுத்தப்பட்டு விட்டது. இடம்பெயர்ந்த முகாம்களில் வறுமையிலும் நோயிலும் நெருக்கடிகளிலும் சிறை வாழ்க்கை வாழ்ந்த இடம்பெயர்ந்த மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

இதையடுத்து இ;ந்திய பாதுகாப்புச் செயலர் சிவசங்கர் மேனன் வெளியுறவுச் செயலர் எஸ்.எம். கிருஸ்ணா போன்ற பல முக்கியஸ்தர்கள் மீண்டும் மீண்டும் பல பயணங்களை இலங்கைக்கு மேற்கொண்டு அரசாங்கத்துடனும் தமிழர் தரப்பினருடனும் பல சுற்றுப் பேச்சுகளை நடத்தினர். ஒவ்வொரு முறையும் அவர்கள் திரும்பிச் செல்லும் போது தமிழ் மக்களுக்கு நம்பிக்கையளிக்கும் வகையில் தாம் இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பாக ஜனாதிபதியிடம் வலியுறுத்தியதாகவும் அவர் உரிய நடவடிக்கை எடுப்பதாக தம்மிடம் வாக்குறுதி வழங்கியதாகவும் கூறிச் சென்று விடுவார்கள். ஆனால் இன்றுவரை இனப்பிரச்சினைத் தீர்வு முயற்சிகள் ஒரு அங்குலம் கூட முன்னேறவில்லை. மாறாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பான எந்த ஒரு காத்திரமான முயற்சிகளையும் எடுக்கவில்லை. அதுமட்டுமன்றி அத்தீர்வை நோக்கி முன் நகர முடியாதபடி புதிய புதிய வழிமுறைகளை முன்வைத்து வருகிறார்.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் 19வது கூட்டத்தொடரில் அமெரிக்கா இலங்கைக்கு எதிராகக் கொண்டு வந்த தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவாக வாக்களித்த சூழ்நிலையில் இலங்கைக்குள் இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பாக ஆக்கபூர்வமான முயற்சிகள் எதுவும் எடுக்கப்படாத நிலையில் இந்திய நாடாளுமன்றக் குழுவின் விஜயம் இடம்பெற்றது.
ஏற்கனவே இடம்பெற்ற இந்திய நாடாளுன்றக் குழுவினரினதும் ராஜதந்திரிகளினதும் விஜயங்களை விட இது வித்தியாசமானதாகவே பார்க்கப்பட்டது. ஏனெனில் இக்குழுவுக்குத் தலைமை தாங்கிய திருமதி சு~;மா சுவராஜ் அவர்கள் இந்திய எதிர்க்கட்சியான பாரதீய ஜனநாயகட்சியின் நாடாளுமன்றக் குழுவின் தலைவி என்பதுடன் அவர் ஏற்னவே இலங்கைத் தமிழ் மக்கள் பிரச்சினை தொடர்பாகக் குரல் கொடுத்து வந்தவருமாவார்.
இந்திய பிரதிநிதிகளின் வருகை தொடர்பாக ஏற்கனவே பட்ட அனுபவங்கள் காரணமாகப் பெரும் எதிர்பார்ப்புக்கள் தமிழ் மக்கள் மத்தியில் இருந்திராத போதும் இவ்விஜயத்தின் போது சில மாற்றங்களாவது இருக்கும் எனக் கருதப்பட்டது.
ஆனால்இ இலங்கையின் ஆட்சியாளர்களோ அவர்கள் விஜயத்தின் போது உண்மை நிலைமைகளைக் கண்டறிந்து கொள்ளமுடியாதவாறு இவர்களின் பயணங்களை ஏற்பாடு செய்திருந்தனர். வவுனியா செட்டிக்குளம் தவிர்ந்த ஏனைய இடங்களில் பொதுமக்கள் சந்திப்புகள் திட்டமிட்டே தவிர்க்கப்பட்டன.
இவர்களின் முதற் சந்திப்பு பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் ப~pல் ராஜபக்ச அவர்களுடன் இடம்பெற்றது. அவர் வடக்கு கிழக்கு துரிதமாக அபிவிருத்தி செய்யப்போவதாகவும் மக்களின் வாழ்வாதாரம் மேம்பட்டு வருவதாகவும் தெரிவித்து செலவு செய்யப்பட்ட தொகைகளின் புள்ளி விபரங்களையும் காட்டினார். ஆனால் ஒதுக்கப்பட்ட நிதிகளில் எவ்வளவு மக்களுக்குப் போய்ச் சேர்ந்தது என்பதோ அடிக்கல் நாட்டு விழாக்களுக்கும் அமைச்சர்களின் வரவேற்பு நிகழ்வுகளுக்கும் விரயம் செய்யப்ப்பட்டன என்பதையோ அவர் கூறியிருக்கப் போவதில்லை. நீதிமன்றம்இ சிறைச்சாலைஇ அரச செயலகங்கள் என்பனவற்றை அமைக்கவே கூடுதல் நிதி செலவிடப்படுகிறது என்பதையும் மக்களின் அடிப்படைத் தேவைகளையும் தொழில் வாய்ப்புகளை உருவாக்கவும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வாய்ப்பு இருந்திருக்காது. விவசாய பூமியான வன்னியில் போதிய நெற்களஞ்சியங்கள் அமைக்கப்படுவது தொடர்பாக எந்த ஒரு அக்கறையும் செலுத்தப்படவில்லை என்பதையோ இதனால் விவசாயிகள் தங்கள் உற்பத்திகளை விற்க வைத்திருக்கப் போவதில்லை. தமிழ் மீனவர்கள் கடலில் இறங்கி மீன் பிடிக்க கடற்படையினர் பல கட்டுப்பாடுகளை விதித்து நெருக்கடி கொடுப்பதும்இ தமிழ் மக்கள் பாரம்பரியமாக மீன்பிடிக்க வந்த கடற்பகுதிகளில் படையினரின் உதவியுடன் சிங்கள மீனவர்கள் ஆக்கிரமிப்பதையுமஇ; அதனால் தமிழ் மீனவர்கள் தொழில் செய்ய முடியாது வறுமையில் வாடுவதையும் எவரும் அவர்களுக்குச் சொல்லப் போவதில்லை.
இதன் காரணமாக அமைச்சர் ப~pல் ராஜபக்ச அவர்களுடன் பேச்சு நடத்திய பின்பு கருத்து வெளியிடுகையில் குறுகிய காலத்தில் வடக்குக் கிழக்கில் ஏற்படுத்தப்பட்ட அபிவிருத்தியைப் பாராட்டுவதாகத் தெரிவித்தனர். அதாவது முதலாவது சந்திப்பிலேயே அவர்களிடம் உண்மைகள் மறைக்கப்பட்டு பொய்யான தோற்றப்பாடு முன்வைக்கப்பட்டது. அமைச்சர் காட்டிய புள்ளி விபரங்கள் அவர்களை நம்ப வைத்து விட்டன. அதேவேளையில் இறுதிப்போர் நடந்ததும் தமிழ்மக்கள் நினைத்துக் கூடப்பார்க்க முடியாத பேரழிவுகளையும் உயிரிழப்புகளையும் சந்தித்தது. முல்லைத்தீவு மாவட்டத்திற்குத் தான் இவர்களின் விஜயம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. போரினால் பெரும் அழிவுகளைச் சந்தித்த புதுக்குடியிருப்புஇ இரணைப்பாலைஇ ஆனந்தபுரம் இ முள்ளிவாய்க்கால் இ மாத்தளனஇ; பொக்கணைஇ வட்டுவாகல் என எந்த ஒரு பிரதேசத்திற்கும் இவர்கள் அழைத்துச் செல்லப்படவில்லை. மாறாக போர் இடம்பெறாத முல்லைத்தீவுஇ முள்ளியவளைஇ ஒட்டிசுட்டான் ஆகிய பிரதேசங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கும் மருத்துவப் பொருட்கள் கையளிப்பு, கட்டடத்திறப்பு விழாக்கள் எனச் சில விழாக்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. இவர்களைச் சந்திக்கவெனத் காலையிலிருந்து காத்திருந்த பொது மக்கள் அவர்களை நெருங்கவே அனுமதிக்கப்படவில்லை. அது மட்டுமன்றி ஏற்கனவே அங்கு சென்றிருந்த அமைச்சர்களான ப~pல் ராஜபக்சாவும் றிசாட் பதியுதீனும் அவர்களை வரவேற்றது முதற்கொண்டு மீண்டும் அவர்கள் உலங்கு வானூர்தியில் ஏறும் வரை அவர்களிடம் எவரும் எதுவும் கூறி விடாதபடி அருகிலேயே நின்றுகொண்டனர்.
மேலும்இ அவர்கள் செல்லும் பாதைகள் அனைத்தும் சில நாட்கள் முன்பதாகவே கிரவல் கொட்டப்பட்டு அதற்கு மேல் தார் ஊற்றப்பட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது.
போர் இடம்பெற்ற பிரதேசத்தில் விரைவாக அபிவிருத்தி மேற்கொள்ளப்பட்டு விட்டதாக அவர்கள் கண்களில் ஒரு பொய்மைத் தோற்றத்தைக் காட்ட, போர் நடந்த மாவட்டத்தின் போரே இடம்பெறாத ஒரு பகுதி தெரிவு செய்யப்பட்டு பூசி மெழுகப்பட்டு காட்டப்பட்டுள்ளது.
வடக்கு கிழக்கு துரிதமாக அபிவிருத்தி செய்யப்படுகிறது என அவர்கள் எப்படி நம்பாமல் இருக்க முடியும். இதில் வந்த உறுப்பினர்களில் ஒருவர் தான் இந்தியா சென்றதும் இங்குள்ள உண்மை நிலைமைகைளை தமிழக மக்களுக்குத் தெரியப்படுத்தி அவர்களிடமுள்ள தவறான அபிப்பிராயத்தை போக்கப் போவதாக்க கூறியதிலிருந்து அவர்கள் எவ்வாறு ஏமாற்றப்பட்டு விட்டனர் என்பதை நாம் புரிந்து கொள்ள முடியும்.
அவர்கள் செட்டிக்குளம் மெனிக்பாம் பகுதிக்குச் சென்ற போது அங்கு ஏற்கனவே சென்றிருந்த அமைச்சர் வீரக்கோனும் இ பிரதியமைச்சர் முரளிதரன் அவர்களும் வரவேற்றனர். அமைச்சர்கள் படை அதிகாரிகள் இராணுவப் புலனாய்வாளர்கள் மத்தியில் மக்கள் நாடாளுமன்றக் குழுவினரிடம் தங்கள் குறைபாடுகளைத் துணிந்து தெரிவித்தனர். ஜுன் மாத்துடன் அவர்கள் சொந்த இடங்களில் குடியேற்றப்பட்டு விடுவார்கள் என அரசதரப்பில் வாக்குறுதியளிக்கப்பட்டது. அதேவேளையில் பிரதியமைச்சர் முரளிதரன் அங்கு ஒரு உண்மையைக் கூறி விட்டார். அதாவது நிரந்தர இராணுவ முகாம்கள் அமைக்கப்டும் இடங்களிடல் மக்கள் தங்கள் சொத்துக் காணிகளில் குடியேற்றப்பட மாட்டார்கள் எனவும் அவர்களுக்கு வேறு இடங்களில் காணிகள் வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்திருந்தார். மக்களின் குடியிருப்புகளில்தானா படைமுகாம் அமைக்கப்பட வேண்டும் எனவும் பரம்பரைபரம்பரையாக வாழ்ந்த காணிகளை விட்டு மக்களை வெளியேற்றுவது மனித உரிமை மீறல் இல்லையா எனவும் ஏனோ இந்திய நாடாளுமன்றக் குழுவினர் கேள்வி எழுப்பவில்லை. இராணுவ முகாம்கள் அமைப்பதும் அபிவிருத்தியில் ஒரு பகுதி என நினைத்து விட்டார்கள் போலும்.
யாழ்ப்பாணத்திலும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் அவரின் பரிவாரங்களும் அவர்கள் விஜயத்தில் ஆதிக்கம் செலுத்த முயன்ற போதிலும் இந்தியத் துணைத் தூதுவரின் ஏற்பாட்டில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இ பிரதேச சபை உறுப்பினர்கள் இ சிவில் சமூகத்தினர்கள் ஆகியோருடன் ஒரு பயனுள்ள கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டது. இதில் வரிவாகப் பேசப்பட்ட பல வி~யங்களை இந்தியக் குழுவினரும் ஏற்றுக்கொண்டனர். குறிப்பாக வடக்கில் இராணுவப் பிரசன்னம் தொடர்பாகவும் அதனால் ஏற்படும் நெருக்கடிகள் தொடர்பாகவும் சுட்டிக்காட்டப்பட்ட போது அவர்கள் அது தொடர்பாக ஜனாதிபதியுடன் பேசும் போது கதைப்பதாகத் தெரிவித்தனர்.
இப்படியாகப் பல சந்திப்புகளையும் கலந்துரையாடல்களையும் மேற்கொண்ட போதிலும் அவர்கள் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்களுடன் மேற்கொண்ட சந்திப்பின் போது தெரிவித்த ஒரு கருத்து தமிழர் தரப்பின் கருத்துக்களையும் நியாயங்களையும் இவர்கள் உள்வாங்கவில்லை என்ற ஒரு எண்ணத்தையே தோற்றுவிக்கின்றன.
அதாவதுஇ இந்திய நாடாளுன்றக் குழுவினர் ரவூப் ஹக்கீம் அவர்களிடம் முஸ்லிம் காங்கிரசுக்கும ;தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குமிடையேயுள்ள உறவைப் பயன்படுத்தி நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் பங்கு கொள்ளும் படி தமிழ் தேசியக் கூட்டமைப்பினரைத் தூண்டும் படி கேட்டுக் கொண்டதாக தெரிய வருகிறது. அவரும் முயற்சி செய்வதாக வாக்களித்துள்ளார்.
ஏற்கனவே தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்றத் தெரிவுக்குழு ஒரு காலத்தை இழுத்தடிக்கும் நோக்கம் கொண்ட முயற்சி என்பதையும், தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் அரசுமிக்குமிடையே இடம்பெறும் பேச்சுக்களில் ஒரு தீர்வு எட்டப்பட்டபின் அதன் அடிப்படையில் நாடாளுமன்றத் தெரிவுக் குழுவில் பங்குகொள்ள முடியும் என இந்தியக் குழுவிடம் தெளிவாகவே தெரிவித்திருந்தது. இதன் பின்பும் இப்படியான ஒரு பயனற்ற முயற்சியில் ஈடுபடத்துண்டுமாறு ரவூப் ஹக்கிம் அவர்களிடம் கேட்டுக்கொண்டமை தமிழர் தரப்பு நியாயங்களை ஏற்றுக் கொள்ளாமையின் வெளிப்பாடாகவே கருத வேண்டியுள்ளது.
அதுமட்டுமன்றிஇ வடக்கில் இராணுவப் பிரசன்னத்தைக் குறைப்பது தொடர்பாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஏற்றுக் கொண்டார் என சு~;மா சுவராஜ் அவர்கள் தெரிவித்த அறிக்கையை ஜனாதிபதியின் செயலாளர் மறுத்து உடனடியாகவே அறிக்கை விட்டுள்ளார்.
இதிலிருந்து நாம் புரிந்து கொள்ளக் கூடியது என்னவெனில் ஏற்னவே இடம்பெற்ற இந்திய விஜயங்களைப் போலவே இதுவும் தமிழ் மக்களுக்கு எவ்வித பலனையும் வழங்கப் போவதில்லை என்பதும், தெரிந்தே இந்தியத் தரப்பு ஏமாறும் அதேவேளையில் இலங்கையை நியாயப்படுத்துவதிலும் அக்கறையாகச் செயற்படும் என்பதும்தான்.
இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பாக இலங்கை இந்தியாவையும் உலகத்தையும் ஒருங்கு சேர ஏமாற்ற முனைகிறது என்பதை இந்தியா உணர்ந்தால் மட்டும் போதாது ஏற்றுக் கொண்டால் மட்டுமே இத்தகைய பயணங்களால் ஏதாவது பயன் இருக்க முடியும்.
-தமிழீழத்திலிருந்து புத்திரன்-
source:sankathi.com

No comments:

Post a Comment