
லிபிய அதிபர் கடாபி, ஈராக் அதிபர் சதாம் ஹுசைன் போன்றவர்கள் சென்ற பாதையிலேயே இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்சவின் அரசாங்கமும் செல்கின்றது என்று ஜனநாயக விமுக்தி பெரமுனா கட்சி குற்றம்சாற்றியுள்ளது.
எனவே மாற்றத்தை நோக்கிய பயணத்திற்கு பொது மக்கள் தயாராக இருக்க வேண்டும் என்றும் அக்கட்சி கேட்டுக் கொண்டுள்ளது.
இலங்கையில் வெள்ளை வேன் கலாசாரம் சட்டத்தின் பாதியாகி விட்டது என்றும் நாட்டின் அனைத்து துறைகளுமே படுமோசமான முறையில் வீழ்ச்சிக் கண்டுள்ளது என்றும் ஜே.வி.பி. கூறியுள்ளது.
நிதி நெருக்கடி மேலோங்கி சர்வதேச நாணய நிதியத்திடம் நாட்டை அடகு வைக்கும் நிலைக்கு அரசாங்கம் விழுந்துள்ளது என்று கூறியுள்ள ஜே.வி.பி., தொடர்ந்தும் வரியில் வாழ மக்கள் மீது பெரிய சுமைகளை அரசு சுமத்தி வருகின்றது என்றும் அக்கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.
News summary : Gaddafi Libyan President, iraq President Saddam Hussein as the Sri Lankan President Mahinda Rajapaksa's government goes forward now that the Democratic Party alleged Vimukthi Peramuna.
No comments:
Post a Comment